Saturday, September 19, 2009

சமீபத்தில் நான் படித்த சிறந்த விமர்சனம் திரு ப்ரகாஷ் அவர்கள் எழுதிய 'உன்னைப் போல் ஒருவன்'.

இதைப் படித்தவுடன், நான் எழுதியது...

அய்யா! தங்களின் பதிவைக் கண்டேன்.அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

படம் நெடுகிலும் கூண்டில் அடைபட்ட வேங்கையாய் உறுமும் 'மாரார்' நமக்குப் புதுசு. கமிஷனர் 'மாரார்' முன்னிலையில் 'common man' கொஞ்சம் 'stupid'-ஆகத்தான் படத்தில் தெரிகிறார். மோகன்லாலின் மற்றுமொரு பரிணாமத்தை வெளிப்படுத்தி, தன்னை மேம்படுத்திக் கொண்ட கலைஞன் கமலஹாசன் அவர்களுக்கு ஒரு சபாஷ்!

சற்றே கூன் விழுந்த தோற்றம். கறுப்பும் வெளுப்புமாய் தலை. நேர்த்தியான மீசை. சராசரி மனிதன் போடும் கண்ணாடி. கண்களில் அப்படி ஒரு தீட்சண்யம். தோற்றத்தில் முதுமை இருந்தாலும், பேச்சில் 'தோற்றுப் போன/கையாலாகாத' வருத்தம் + 'என்னாலும் முடியும்' கோபம். இப்படி ஒரு பாத்திரத்தை நஸ்ருதீன் ஷா ஏற்றுச் செய்ததை கமலஹாசன் ஏன் செய்ய வேண்டும்? செய்யத்தான் முடியுமா? என்கிற கேள்விக்கு ஒரே பதில்தான் இருக்க முடியும்.

நல்ல விஷயங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் 'மாசு குறையாமல்' ஜனங்களுக்கு எடுத்துச்செல்ல / எடுத்துச்சொல்ல வேண்டும் என்கிற வெறி.

பொன்விழா நாயகர் வாழ்க பல்லாண்டு!

திரு ப்ரகாஷ் , தங்களுடைய பணி தொடர வாழ்த்துக்கள்!

No comments: