Monday, November 16, 2009

அகமதாபாத் ஆட்டம் - நாள் 1

துவங்கிய ஒரு மணிநேரத்தில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்ந்தவுடன், மற்றுமொரு 'கௌஹாத்தி' என்கிற அமிலம் வயிற்றில் சுரந்தது!

மிகச் சிறந்த ஆட்டக்காரர்கள் என்கிற புகழ் பெற்ற கம்பீர், சச்சின், லக்ஷ்மண் 'க்ளீன் பவுல்ட்' என்பதை ஜீரணிக்க முடியவில்லை!

இந்திய அணியின் 'பெருஞ்சுவர்' இறுதிவரை ஆட்டமிழக்காமல் எடுத்த ஓட்டங்கள் 177! கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால் 'கர்நாடகா' அணிக்காக ஆடிய கடைசி இரண்டு ஆட்டங்களில், ஒவ்வொரு இன்னிங்ஸிலும் 50-க்கும் குறையாமல் ஓட்டங்கள் எடுத்திருப்பது தெரியும்! ஆக, லோக்கல் ஆட்டங்கள் ஆடியே ஆக வேண்டும் என்கிற கட்டாயச் சட்டத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் போடலாம்!

யுவராஜ் சிங் (68, ஜோடியாக 125!), தோனி (110, ஜோடியாக 223!) இளைஞர்களின் தயவில் இந்தியா முதல் நாள் இறுதியில் எடுத்த ஓட்டங்கள் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 385.

1 comment:

இன்றைய கவிதை said...

ரங்கா,

நல்ல முயற்சி, ஆட்டத்தை முழுதாக காணமுடியவில்லையென்றாலும் டிராவிடின் ஒரு நாள் உழைப்பும் அதன் பலனும் இந்தியாவை ஒரு பலமிக்க நிலையில் வைத்துள்ளது நாளை அவர் தொடர்ந்து இரண்டாவது சதம் அடித்தால் நாம் கொஞ்சமேனும் வெற்றி காணும் வாய்ப்பை நினைத்து பார்க்கலாம் இல்லையேல் மீதி நாட்களும் நம் ஆட்கள் பந்து பொறுக்கும் நிலை தான் இருக்கும்..பார்ப்போம்

உன் நாளைய விமர்சனத்தை எதிர் நோக்கும்

ஜேகே