Saturday, November 07, 2009

பத்து ஆசைகள்!

1. அலுவலகத்துக்கருகே வீடு (அ) வீட்டுக்கருகில் அலுவலகம் (நடக்குமா?!).
2. 'சின்னச் சின்ன ஆசை' போல ஒரு பாட்டெழுதி பிரபலமாக வேண்டும் (அப்புறம் பாட்டே எழுதக்கூடாது!).
3. 'மாமி'யுடன் (மட்டும்) முழு நாள் இருக்க வேண்டும் (சிவா/விஷ்ணு-வை என்ன பண்றது?!).
4. மனதுக்குப் பிடித்த தோழியுடன் மாலை தேநீர் அருந்த வேண்டும் (வருவாளா?!).
5. தனியாக ஒரே நாள் உயர் ரக ஸ்டார் ஹோட்டலில் 'ஹாயாக' இருக்க வேண்டும் (அட போய்யா!).
6. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் ஆலயத்தின் அர்ச்சகராய் மாற வேண்டும் (மீசை வெச்ச பெருமாளை பாத்துகிட்டே இருக்கலாமே?!).
7. டிரைவரோடு கார் வாங்க வேண்டும் (ரொம்ப ஓவரா தெர்ல?!).
8. நண்பர்கள் ஐவரோடு அரை மணியாவது கழிக்க வேண்டும் (ஹ¤ம்...அந்த நாள் எந்த நாளோ?!).
9. ரஜினி சாரோடு ஒரு போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் (2 தடவை பாத்தும் மிஸ் பண்ணியாச்சு!).
10. வட இந்தியாவைச் சுற்றி வர வேண்டும் (முடியுமா?!).

முக்கிய பின்குறிப்பு:
எல்லாவற்றையும் தனித்தனியாகப் படியுங்கள்.
முக்கியமாக 4,5 - எதேச்சையாக இரண்டும் அடுத்தடுத்து வருகின்றன. மற்றபடி வேறு எதுவுமில்லை ஐயா
!

4 comments:

அன்புடன் அருணா said...

எல்லாமே முடியக்கூடிய ஆசைகளாகத்தான் இருக்கின்றது!பேராசையெல்லாம் இல்லீங்கோ!

Sumi said...

hmm, was wondering about your long chutti from ur blog, whether u over ate during diwali :}. nice ten ten asaigal, greedy me has countless asaigals though. btw, really you met with Rajini sir??? cha, how lucky u r, grrr makes me jealous. i keep fantasising about running into SS in one of the airports, and then take that dream picture with him, and adorn that beautifully framed lifetime picture in the exquisitely furnished living room of my new home that would be facing the mountains, and/or rivers, fields, or beaches. aahh...pray atleast running into Rajini sir comes true.

Priyamvada_K said...

I liked the honesty and romance in #4. Once we become parents, its hard to get alone time with the spouse.

Wish I lived close enough to say "சிவாவையும் விஷ்ணுவையும் ப்ரியம்வதா ஆன்ட்டியுடன் விட்டுவிட்டு நீங்களும் மாமியும் சினிமாவுக்கு போய்வாருங்கள் அல்லது சொந்த படமே எடுங்கள்"

Priya.

Priyamvada_K said...

Ah! My previous comment referred to #3 - the "maamiyudan mattum" wish.

Sorry for the typo.