Sunday, December 13, 2009

கவர்ந்திழுக்கும் சக்தி!

பெண்களின் மார்பகங்களும், தொப்புளும் தாய்மை கலந்த உறுப்புகள். அவற்றைக் கவர்ச்சிக்காகவும் விளம்பரங்களுக்காகவும் பயன்படுத்துவது தவறுதானே?

பெண்களின் மார்பகங்கள் 'கவர்ந்திழுக்கும் சக்தி'யைப் பெற்றது எப்படி என்கிற விஷயத்தில் ஆராய்ச்சியாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. எல்லாப் பாலூட்டிகளுக்கும் முலைக்காம்புகள் (nipples) உண்டு. ஆனால், வளர்ச்சி பெற்ற மார்பகங்கள் மனித இனத்தில் மட்டுமே அமைந்திருக்கின்றன (பால் சுரக்கும் அளவுக்கும் மார்பக சைஸ¤க்கும் சம்பந்தமே கிடையாது!).

ஆரம்பத்தில், மனிதன் மற்ற பாலூட்டிகளைப் போல் பின்னால் நின்று உடலுறவு கொண்டபோது, பெண்ணின் 'பின்புறம்' அவனுடைய உணர்வுகளை மேலும் கிளர்ச்சி அடையச் செய்தது. பிற்காலத்தில், முகம் பார்த்துப் புணரும் வழக்கம் வந்த பிறகு, ஆண் அதை 'மிஸ்' பண்ணினான். அவனுடைய அந்தக் குறையை 'விஷ¤வலாக' நிவர்த்தி செய்தது (replacement) மார்பகங்களே! ஆகவே, மனித இனத்தில் மட்டும் 'தாய்மை'யோடு 'கவர்ச்சி'யையும் பெண்ணின் மார்பகங்கள் பெற்றுவிட்டன.

முப்பது ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கப் பெண்மணிகள் (feminists) 'பிரா'க்களை நடுவீதியில் கொட்டி எரித்துப் போராட்டம் நடத்தினார்கள் (freedom). அது பழங்கதை. இப்போது 'பிரா' விஸ்வரூபமெடுத்துவிட்ட(!) கோடானு கோடி ரூபாய் பிஸினஸ்! ஒவ்வொரு சூழ்நிலைக்கும், 'மூடு'க்கும் கூட பிராக்கள் இப்போது தயாரிக்கப்படுகின்றன.

சான்ஸே இல்லை...மனித இனம் இருக்கும் வரை மார்பக 'அப்ஸெஷன்' இருக்கத்தான் செய்யும்.

-ஹாய் மதன், ஆனந்த விகடன் இதழிலிருந்து.

No comments: