Thursday, June 03, 2010

மாறிப் போன வழக்கம்!

நிறுவன ஊர்தியிலிருநது விடுபட்டு, அரசு போக்குவரத்து கழகத்தில் இணைந்து மாதம் ஒன்றாகி விட்டது.

மெதுவாக 6 மணிக்கு எழுந்து, நமது வேலையை முடித்துக்கொண்டு, நன்றாக காலைச் சிற்றுண்டி மற்றும் கோப்பை வடிநீர் அருந்திவிட்டு, டப்பாவில் அடைக்கப்பட்ட மதிய உணவோடு, கிளம்பிவிடுவேன்.

காலையில் 8.45-9.00க்குள் சொகுசுப் பேருந்தைப் பிடித்தால், மெ...து...வா...க அலுவலகத்திற்குப் போய்ச்சேர 11 மணியாகிவிடும். 9 மணி நேரம் இருக்கையைத் தேய்த்துவிட்டு இரவு 8.15-8.30க்குள் சொகுசுப் பேருந்தைப் பிடித்தால், வீட்டிற்கு வர 10.30 ஆகிவிடும். அப்புறம் மீந்திருக்கிற சோற்றை மோரோடு பிசைந்து, உப்பு பிசிறின மாங்காய்த் துண்டுகளோடு சாப்பிட்டால்...சொர்க்கம்!

என்றாவது ஒரு நாள், மாம்பழமும் உண்டு!

No comments: