Monday, May 31, 2010

சூப்பர் ஹிட் விஜய் படம் - 1

சினிமா விநியோகஸ்தர்களால், இளைய தளபதி, நமது கதாநாயகர் திரு விஜய் அவர்களுக்கு நேர்ந்த கதியை நினைத்தபோது...தாங்க முடியாமல், உடனடி 'சூப்பர் ஹிட்'டுக்கு வேண்டி, பீரிட்டு வந்த கதையை அவருக்கு அர்ப்பணிக்கிறேன்.
நாசா ஆசாமிகள் நிலாவில் நிழலாடுவதைப் பார்த்து அலறி அடித்துக் கொண்டு மண்டை காய, 'ஐயா! அதெல்லாம் வேண்டாய்யா, எங்க புள்ள நிலாச் சோறு துன்றப்போ நிலா கேட்டிச்சு! அதப் புடிச்சாற எங்க த ம்பி போயிருக்காருய்யா!' என நாட்டாமை பேட்டி கொடுக்க, விஜய் நிலாவிலிருந்து குதிக்கிறார்!

உடனே ·ப்ரீஸாகி சன் பிக்ஸர்ஸ் கலாநிதி மாறன் பெருமையுடன் வழங்கும், இளைய தளபதி விஜய் நடிக்கும் 'மூன்-காரன்' (நன்றி: நண்பர் மோகன்!) என்கிற தலைப்பு ஒளிர்கிறது.

'மாமா! எனக்கு நிலா எடுத்தாந்திருக்கியா?' என மழலை வினவ, 'கண்ணு! அதுக்குள்ளாற நம்ம கிராமத்தில தீவிரவாதிங்க வர்றதை மேலேருந்து பாத்தனா, உடனே ஒரே ஜம்ப்!' எனச் சமாதானம் சொல்லி தீவிரவாதிகளைப் பிடிக்க ஓடுகிறார்.

ஒவ்வொருவரையும் பந்தாட, பந்தாட, டைட்டில் கார்டுகள் விழுந்து கொண்டேயிருக்கின்றன. இறுதியில், தலைவனைப் பார்த்து,

'டேய்! நீ ஒண்ணுக்கு, ரெண்டுக்கு போனவன்...
ஆனா, நான்
மூனுக்கு, மூனுக்கு, மூனுக்கே (மூணு தடவை!)
போனவண்டா!'


என்று 'பஞ்ச்' அடித்துவிட்டு புரட்டி எடுக்கிறார். தலைவன் 'ஐயோ பாவம்! விட்ரு' என்று ஓட முயற்சி செய்ய, உடனே விஜய்

நான் மூனிலிருந்து வந்தவன்
மூணா(ம்) வகுப்பு படிச்சவன்,
மூக்குல நான் குத்தினா - உன்
மூளையெல்லாம் சிதறிடும்!


என்று பாட்டுப் பாடி எகிறி எகிறி உதைக்கும்போது, ·ப்ரீஸாகி 'கதை/திரைக்கதை/வசனம்/இயக்கம் - பருப்பு ஆசிரியர்' என்று வருகிறது!

இப்படியே போனால், 'தர்ம அடி'க்கான சாத்தியக்கூறுகள் இருந்தாலும், கதை இத்தோடு முடியவில்லை...இனியும் தொடரும்!

No comments: