Thursday, June 24, 2010

நமக்கு ஏன் பொல்லாப்பூ?

சென்னை வாசகர் திரு ஜி ஆர் ஷங்கர் அவர்கள் எழுதியது.

ஜெமினி மேம்பாலம்
ஏறியவர்கள் - கதீட்ரல் ஊசி-கோபுர கடியாரத்தையும், இரவில் கொஞ்சம் விரைந்து வாகனத்தை முந்தினால் முட்டிவிடும் டிவைடரையும், 'படைப்புகள் பொது உடைமை ஆகுமா ஆகாதா?' என்று உட்கார்ந்து கொண்டும், நம்மைப் போலவே சந்தேகமாய் யோசித்துக் கொண்டிருக்கும் பெரியார் அவர்களையும், பக்கத்திலேயே 'இன்னொரு ஜெமினி பாலம் கட்டுவார்களோ?' எனத் தெரியாது, வாகன நெரிசலைப் பொருட்படுத்தாது, புத்தகம் படித்துக் கொண்டிருக்கும் பேரறிஞர் அண்ணா அவர்களயும், மேம்பாலத்தின் இரு புறங்களிலும் குதிரையை பிடித்துக் கொண்டிருக்கும் வீரனையும் பார்த்திருப்பீர்கள்...

இவர் யாரு?

வந்தியத்தேவர் (பொன்னியின் செல்வன்) என பொறியாளர்கள் அப்போதைய அரசிடம் சொன்னதாக விகடனார் (பொக்கிஷம் 75) குறிப்பிடுகிறார்.

கதையில் வந்தியத்தேவனின் குதிரை காஞ்சி - தஞ்சை - பழையறை செல்லும் மார்க்கங்களில் சண்டித்தனம் செய்திருக்கலாம்...அதை அவர் பிடித்திருக்கலாம்! (திரு கல்கி அவர்கள், சண்டித்தனம் பண்ணும் குதிரை பற்றியெல்லாம் எழுதியிருந்தால் இன்னுமொரு பாகம் வேண்டுமென்று நினைத்து எடிட் செய்திருக்கலாம்!)

வந்தியத் தேவர் அவர்களோ, அருள்மொழி வர்மன் அவர்களோ அல்லது கல்கி அவர்களோ வந்து விளக்கினாத்தான் ஆச்சு போல!

நல்ல வேளை பீச் மேடம் சிலம்பத்தை முழுதாய் வைத்திருக்கிறார்கள்..உடைக்கவில்லை...உடைத்திருந்தாலோ இதே மாதிரி சந்தேகம் வந்திருக்கும்!


'ரெண்டல் ரசீதில் போர்ஜரி பண்ணினால் வேலையிலிருந்து கூட டிஸ்மிஸ் ஆகலாம்; - பிடிஐ செய்திக் குறிப்பாக, சகா ஒருவர் இன்றைக்கு junk அனுப்பியிருந்தார். நீங்களும் படித்திருந்திருக்கலாம்; அல்லது நாளைக்குள் உங்களுக்கு யாராவது junk அனுப்பிவிடுவார்கள்!

Recent ரிலீஸான படங்களில் - வேதம்(தெலுகு), ராஜ்நீதி (இந்தி), கராத்தே கிட் (ஆங்கிலம்) above average-ஆகப் போகிறது!

சென்னை டாம்ஸ் சாலையில் (Tarapore Towers onway leading to Gaiety) 'ஒரு family அழைப்பிதழ்' simply superb! நோக்கியா 'க்ளிக்' தருணத்தில் எனக்குத் தோன்றியதை இங்கே எழுதினால் 'பெரிய குடும்பத்தோட மனக் கசப்பு வரும்!' எனக்கு ஏம்பா பொல்லாப்பூ?!

தாய் தமிழே! நீ வாழி!

No comments: