Friday, June 25, 2010

ராவணனில் ராவண்!

மணிரத்னம் அவர்களின் 'ராவணன்' பார்த்துவிட்டு, Bore-வணன் என ஒற்றை விமர்சனத்தில் முடித்திருந்தாலும், FB-ல் பொருமித் தீர்த்து விட்டேன்!

அதிலிருந்து....

-Aiswarya Rai looks more matured than Prithviraj in Raavanan Tamil (matured can be replaced with older also!)
-எவ்ளோ மெனக்கிட்டு லொகேஷன் போயிருக்கறாங்கோ? எவ்ளோ மெனக்கிட்டு படம் புடிச்சிருக்காங்கோ? எவ்ளோ மெனக்கிட்டு ஆக்ட் கொடுத்திருங்காங்கோ? கொஞ்சம் மெனக்கிட்டு கதையும் பின்னிருக்கலாம்ங்கோ!
-Think of Agni Nakshatram Prabhu & Karthik - Now in Raavanan - Talent wasted - Could not digest of they been related to Kumbakarna and Hanuman!
-Husband - Still to learn how to write screenplay , Wife - Still to learn how to write dialogues!
-Raavanan - RAW vanan (Courtesy: GR Shankar) - Bore Vanan!!


மேலும் சில குறிப்புகள்

உயர்தர தொழில்நுட்பம், பிரமிக்க வைக்கும் காட்சிகள், தரமான இசை என எல்லோராலும் பாராட்டப்படுவதை நினைக்கும்போது 'நெஞ்சு பொறுக்குதில்லையே!'.

படம் முழுதும் காண்பிக்கப்படும் வடநாட்டுப் பின்னணியை எப்படி மறந்தார்கள்? (சாரு ஸார் இதைச் சரியாகக் கவனித்து எழுதியிருக்கிறார்) ·ப்ளாஷ்பேக்-ல் வரும் காட்சிகள் அனைத்திலும் வடநாட்டு 'நெடி' தூக்கலாக இருக்கிறது. அதுவும், பிரியாமணி திருமணக் காட்சியில் நெருடலாகத் தெரிகிறது. எதற்காக இப்படி எடுக்க வேண்டும்? இதுதான் மெனக்கிடலா? தரமான தமிழ் ஸினிமா பார்க்கும் அனைவரும் அதிர்ந்து போகும் இடம் இது. உலகத் தர இயக்குநர் இப்படித் தரலாமா? இதற்கு பேசாமல் தமிழ் டப்பிங் செய்துவிட்டுப் போயிருக்கலாமே?

கார்த்திக் திடீரென மரம் மேலேயிருந்து எட்டிப்ப்பார்த்து ஐஸிடம் பேசும் காட்சி மற்றுமொரு அபத்தம். காவல் அதிகாரியிடம் சொல்லிவிட்டு கார்த்திக் வருவாராம், அவரும் விட்டுவிடுவாராம்! ஆனால், அதே காவல் அதிகாரி சமரசம் பேச வரும் 'சக்கரை'யைப் போட்டுத் தள்ளுவாராம்! கடைசியில் 'வடை' வைத்து பிடிக்கும் 'எலிப்பொறி'யை தேவ், கார்த்திக்-ஐ வைத்து முன்னமே செய்திருக்கலாமே?!

எல்லோருக்கும் பிடித்திருந்த ரஹ்மான் இசையும் எனக்கு ஒட்டவில்லை (இதை விட்டுவிடலாம், ஏனெனில் எனக்கு சங்கீத ஞானம் கிடையவே கிடையாது!)

மணிரத்னம் அவர்களின் வியாபார யுக்தி தெரியாமல் சில 'ரசிகக் கண்மணி'கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடலாம். தரமான தமிழ் ஸினிமா (மௌன ராகம், அக்னி நட்சத்திரம், நாயகன், அலைபாயுதே) தந்தவர் இன்று வியாபாரச் சுழலில் சிக்கி, பணத்துக்கு விலை போனது பரிதாபம்தான்.

1 comment:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அக்னி நட்சத்திரம் கதையை இன்னிக்கு ரீமெக் பண்ணிப் பாருங்க தல, பட்டயக் கிளப்பும். அதையும் ஒரு தழுவல் எனக்கொள்ளலாம். சரித்திரத்தின் புனைவு என்றும் சொல்லலாம். கொஞ்சம் ரீமேக் ப்ளீஸ்