Thursday, June 03, 2010

சீரியஸ் மேட்டர்!

விஜய்/சூர்யா-வைப் படித்துவிட்டு ஒருவர் for serious matters, kindly visit ...என்று அவருடைய பதிவுப் பெயரைக் குறிப்பிட்டிருந்தார். அவர் மீது எனக்கு மிகவும் மரியாதை உண்டு. அதனால் இதைப் பற்றி விமர்சிக்க விரும்பவில்லை. இருந்தாலும் serious matters என்பதை விடத்தான் முடியவில்லை!

நகைச்சுவைத் தன்மை என்கிற sense of humor குறைந்து வருகிறதோ என்ற என்கிற எண்ணம் இதைப் படிக்கும்போது வலுப்படுகிறது. நம்மிடம் எல்லாவற்றிலும் ஒரு ஜாக்கிரதைத் தன்மை வந்துவிட்டது. 'ஏதாவது நினைத்துக்கொள்வார்களோ?' என்கிற பயத்தில் நம்மை எக்கச்சக்கத்திற்குத் தயார் படுத்திக்கொண்டு, நகைச்சுவைத் தன்மையை இழந்து விட்டோம்.

அலுவலகத்தில் கூட பெரும்பாலான நேரங்களில் மயான அமைதிதான் (கவனிக்க: 'மயான'!). நேற்று இணைத்துக்கொண்ட ஊழியர்கள் கூட ஒருவித விறைப்புத் தன்மையுடன், (நேரத்திற்கு) தேநீர் அருந்தப்போகாமல், உணவருந்தப் போகாமல் வேலை செய்து கொண்டேயிருக்கிறார்கள்! காலை 8 மணிக்கு கணினிக்குள் தலைவிடும் ஒரு ஊழியர் (ஆண்/பெண் பால் தவிர்க்கப்பட்டிருக்கிறது!) இரவு 10 ஆனாலும் எடுக்க மாட்டேன் என்பதை எதில் சேர்ப்பது?! முகத்தில் எப்போதும் எதையோ தொலைத்த சோகம்?! எங்கே போய்ச் சொல்வது இதை?! தாங்க முடியாமல் அருகில் போய் 'கொஞ்சம் சிரிங்களேன்' என்று சொல்லிவிட்டேன்!

புன்னகையில் விலை இல்லை. அதனால்தானோ புன்னகைக்க மறுக்கிறார்கள்?!

தலைவா - காமெடிங்கற போர்வைல கொஞ்சம் ஸீரியஸா எழுதிட்டேனோ?! பரவாயில்லை! கொஞ்சம் சிரிச்சிட்டு மறந்துருங்க!

No comments: