Thursday, July 01, 2010

மகன்...ஸாரி..மகர்!

'பிடிச்சதைச் செய்றார். நிறைய புத்தகங்கள் வாசிக்கிறார்.' -திரு மணிரத்னம் அவர்கள், தன் மகன் நந்தனைப் பற்றி....(அவர் எழுதற வசனம் மாதிரியே இருக்கே!)

குறளரசன் இப்போ ஜிம்முக்குப் போறார். நானும் போறேன் சார். அவர் டயட்ல (?!) இருக்கார். நானும் டயட்ல இருக்கேன் சார்.

'நீங்க யாரைச் சொல்றீங்களோ..அந்தப் பெண்ணையே கல்யாணம் பண்ணிக்கிறேன்'ன்னு சொல்லிட்டார் சிம்பு.
-திரு விஜய டி ராஜேந்தர் அவர்கள், தன் மகன்கள் சிம்பு, குறளரசன் பற்றி...(அ...டன்டனக்கா, டனக்கடக்கா!)


செல்வா ஒரு ஜீனியஸ். அவர் கனவுகளோடு யார் டிராவல் பண்றாங்களோ..அவங்கதான் அவர் வாழ்க்கையிலும் டிராவல் பண்ண முடியும்...

குடும்பம் வேறு, சினிமா வேறுன்னு தனுஷ் தெளிவா இருக்கார்.
-திரு கஸ்தூரிரங்கன் அவர்கள், தன் மகன்கள் செல்வா, தனுஷ் பற்றி....(அய்யோ பாவ அப்பா!)

ஆனந்த விகடன் (30.06.10) பேட்டிகளின் தொகுப்பு இவை. எல்லா அப்பாக்களும் மகனை 'அவர், இவர்' என்றுதான் மரியாதையுடன் விளிக்கிறார்கள்!

கொஞ்சம் ஓவராகவும், ஒட்டாமலும் இருப்பதை எப்படி பேட்டி எடுத்தவர்கள் மறந்து போகிறார்கள்??

ஒண்ணும் புரியலைடா சாமி! இப்டியே போனா 'சிவா ட்யூஷன் போறார், விஷ்ணு சேட்டை பண்றார்'னு நானும் எழுதத் துவங்கணும் போல?!

No comments: