Sunday, October 03, 2010

எந்திரன் - முகப்புத்தகக் குறிப்புகள்!

மறைந்த எழுத்தாளர் சுஜாதா நினைத்ததை, எழுதியதை, 'பார்த்த' எந்திரனை இயக்குனர் ஷங்கர் அழகாகத் திரையில் உருவகப் படுத்தியிருப்பதைக் கண்ட போது, சுஜாதா இருந்திருக்கலாமே என்று தோன்றியது! சுஜாதா-வை ரசித்த யாராலும் எந்திரன் முதல் பாதியைக் கொண்டாட முடியும், ஷங்கரைப் பாராட்டவும் முடியும்!

‎'வில்லத்தனம் பண்ணுற எந்திர ரஜினிய ஏம்பா சைண்டிஸ்ட் ரஜினி அடிச்சே கொல்லாம விடுறாரு?!' - படம் பார்த்த அப்பாவி ரசிகனின் கேள்வி...அவனால் நல்ல ரஜினி 'அடிக்காமல்' இருப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை:-) ஆனால், அந்த அசுரனை, சைண்டிஸ்ட் அறிவு ரீதியாக 4 வழிகளில், 'எதிர் கொள்வதை' அதே ரசிகனுக்குப் புரியும்படி எடுத்த இயக்குனருக்கு ஒரு சபாஷ்!

சைண்டிஸ்ட் 'குறுந்தாடி'யும், எந்திர வில்லனின் 'கிருதா'வும் இனி தமிழ் நாட்டில் எங்கும் காண முடியும்! - எல்லாம் ரஜினி இஷ்டைலு மற்றும் இளமை!


‎'சிவாஜி' பார்த்த பின் - வெள்ளை ரஜினி, மொட்டை ரஜினி என்று சிகரத்தைத் தொட்ட ரஜினி இனிமேல் என்னதான் செய்ய முடியும்?! 'எந்திரன்' பார்த்த பின் - 'சிவாஜி' வேஸ்டுப்பா!

இன்ட்ரோ ஸாங் கிடையாது, பஞ்ச வசனங்கள் இல்லை, சைண்டிஸ்ட் சண்டை கூடப் போடாமல் ஓடிப் போகிறார்! - இப்படி எல்லாம் இருந்தாலும் ரஜினி என்கிற நடிகரின் இமேஜ் படம் முழுவதும் காக்கபட்டிருப்பதைக் காணும்போது ஜாலி-யாய் இருக்கிறது!

அந்த காலத்துல சிவாஜி, கே ஆர் விஜயா 'என்னோடு பாடுங்கள்'-னு டூயட் பாடும்போது பாத்தா 'வயசு' நல்லாவே தெரியும்! ஆனா இப்ப? ரஜினி (60), ஐஸு(40) 'காதல் அணுக்கள்'-இல் இளமையோ, இளமை:-) எல்லாம் டெக்னாலாஜியாம், அப்டிங்களா?!!

No comments: