Tuesday, June 21, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 5

அவன் - இவன் கதை தேறாவிட்டாலும், பாத்திரப் புனைவுகள் சுவாரஸ்யம்.

ஜமீன் தீர்த்தபதி - 'காலி பெருங்காய டப்பா'வை நினைவுபடுத்தும் பாத்திரத்தில் ஜி எம் குமார் நன்றாகப் பொருந்தியிருக்கிறார். 'மீசை'ஐ ஒட்டிக்கொள்வதில் துவங்கி, பரிதாபமாய்ச் சாவது வரை ரொம்பவுமே தனித்துவமாயிருக்கிறது.

கான்ஸ்டபிள் பேபி - இவ்வளவு அழகான, இளமையான, இனிமையான, வெகுளியான நாயகியைப் பார்த்து நாளாச்சு...! ஜனனி ஐயர் வெகுளி பாவங்களில் நம்மை கொள்ளைகொள்ளும் பாத்திரம். அதுவும் விஷாலை ரொம்பவே ஓட்டும்போது பாந்தம்!

காவலர் (எ) எஸ் ஐ சின்னாண்டி - 'விறைப்பா' பேசி பாத்திருக்கோம்...'வீராப்பா' பேசி விழுந்ததையும் பாத்திருக்கோம்...ஆனா...'லோக்கல் பார்ட்டி'ய இப்போதான் பார்க்கோம்! (ராமராஜுக்கு ஒரு 'ஓ' போடுங்க!)

பொடியன் - செம பின்னு பின்னுகிறான்...வாழ்த்துக்கள்..(பேர் தெர்லேங்கோ!)

பீடி வலிச்சா அது ஒரு காரெக்டர் ஆயிடாது...இதை பாலாவும், செஞ்சிருக்கிற அம்பிகாவும் தெரிந்து கொண்டால் சரி!

ஆர் கே ஒரு பேட்டியில் 'அவன் இவன்ல வில்லனா வர்றேன்...இது அம்ஜத்கான் ஷோலே-ல பண்ணா மாதிரி இருக்கும்' என்று சொன்னதாய் நினைவு...நல்ல வேளை, அம்ஜத்கான் உயிரோட இல்லை...! வேண்டுமென்றே திணிக்கப்பட்ட பாத்திரத்தால் ஒரு பயனும் இல்லை!

விஷாலை 'ஆட' விட்டு வேடிக்கை பார்க்கும் 'ஆர்யா' - தமிழ் சினிமா இது போல் மாறினால் 'நெறைய' நன்மை உண்டு!

வசனம் எஸ். ராமகிருஷ்ணன்...நகைச்சுவையாய் எழுத முயன்றிருக்கிறார்..பரிதாபம்! - ஏன் கிரேசி மோகனிடம் போக மறுக்கிறார்கள்?!!

அவ்வளவாக இசை பக்கம் போகாத என்னைக்கூட, இந்த படத்தின் இசை / பாடல் வரிகள் ஈர்க்கின்றன....

உ-ம் ராசாத்தி போல அவ என்னை தேடி வருவா, ரோசாப்பு போல அவ சிரிச்சா போதும் தலைவா, நான் செத்து போவேன் மெதுவா! - ஹரிஹரன் பின்னுகிறார்!

ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு தமிழகத்தின் இயற்கையை அப்படியே பதிவு செய்திருக்கிறது.

பாலாவின் இயக்கம் இறுதி அரை மணியில் துவங்குகிறது...முடியும் வரை அது (படத் தொகுப்பாளர் சுரேஷ் அர்ஸ் தயவில்) அசால்டாய் நீடித்தாலும்...படம் முழுதும் இல்லாததால் நிறைக்கவில்லை!

1 comment:

GEETHA ACHAL said...

நன்றி...