Sunday, July 17, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 8

விக்ரம் அவர்களுக்கு அந்நியன்'-க்குப் பின் சொல்லிக்கொள்ளும்படியாய் படங்கள் இல்லை. பீமாவில் ஏமாற்றம், கந்தசாமியின் விரயம், ராவணனின் தோல்வி / படத்தைத் தெரிவு செய்வதில் குழப்பம் எனத் தேக்கம் துவங்கி வருடங்களாகி விட்டன...ஆனாலும், மனிதர் ரொம்பத் தெளிவாக இருக்கிறார் என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்த படம்தான் 'தெய்வத் திருமகள்'!


-இயல்பான, நம்பக்கூடிய நிகழ்வுகளுடன் கூடிய திரைக்கதை
-தந்தை - பெண் பாசத்தை மூன்று வகைகளில் சொல்லியிருப்பது (கிருஷ்ணா-நிலா, அனுராதா-ரகுநாதன், பானு-ராஜேந்திரன்)
-குழந்தையைக் குழந்தையாய்க் காட்டியிருப்பது (இன்ன பிற படங்கள் மகாநதி /அவ்வை சண்முகி / ஆரண்ய காண்டம் )
-படத்தோடு ஒன்றிய பாடல்கள் மற்றும் படமாக்கப்பட்ட காட்சிகள்
-பெண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது

எனத் தெய்வத் திருமகளை நிச்சயம் ரசிக்க முடியும்...!

படத்தின் நாயகன் என யாரைச் சொல்ல? கதை, விக்ரம், பேபி சாரா, அனுஷ்கா, நாசர், சந்தானம், ஜி வி பிரகாஷ், நீரவ் ஷா, விஜய்? என எல்லோரின் முயற்சியிலும் ஒரு sincerity இருப்பதை மறுக்க முடியாதுதான். சின்னப் பாத்திரங்களில் வரும் எம் எஸ் பாஸ்கர், Y Gee M அசத்துகிறார்கள்!



நீங்கள் எப்படிப்பட்டவராக இருந்தாலும்...படத்தின் இறுதி இருபது நிமிடங்கள் உங்களை நிச்சயம் நெகிழச் செய்து, கலங்கச் செய்துவிடும்!!

நம்பிக்கையுடன் தயாரித்த மோகன் நடராஜன் மற்றும் UTV நிறுவனத்திற்கு நன்றிகள் பல!

தெய்வத் திருமகள்...தமிழ் சினிமாவின் பாசக் கவிதை...பல வகைகளில் ஒரு நல்ல முயற்சி..!

முக்கியக் குறிப்பு :
படத்தின் தலைப்பை இந்த அளவுக்கு அரசியலாக்கியிருபது ரொம்பவே வேதனை...! திருமகன் இல்லை திருமகள் என குழப்பம் எனக்கும் வந்துவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!!

1 comment:

Nilavan said...

Perfect review :) u didn't miss anyone or anything :)