Tuesday, June 28, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 7

யார் அந்த நிலவு?

பாட்டிற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு (ஆதாரம்: மெல்லிசை மன்னர் அளித்த பேட்டி)

மெல்லிசை மன்னர் போட்ட மெட்டுக்கு, நிமிடங்களில் பாடல் வந்து விட்டது கவியரசுவிடமிருந்து! உடனே, திரு டி எம் எஸ் அவர்களைப் பாட வைத்து விட்டார். இனி, சிவாஜி ஸார் அவர்கள் கேட்க வேண்டியதுதான் பாக்கி...

சிவாஜியைப் பாடல் கேட்க வைத்திருக்கிறார்கள் - முடிந்தபின் சிவாஜியிடமிருந்து நோ ரியாக்ஷன். 'என்ன பாட்டு பிடிக்கவில்லையோ?' என்கிற கவலை...கொஞ்ச நேரம் மௌனத்தில் கரைந்த பின் சிவாஜி 'நீங்க போட்டிருக்கிற மெட்டு, கண்ணதாசன் அவர்கள் எழுதிய வரிகள், இதுக்கு மேலே டி எம் எஸ் பாடின விதம் - இதை மேட்ச் பண்றாப்பல நான் நடிக்கணுமே? அதைத்தான் யோசிச்சுகிட்டிருக்கேன். ஒரு நாள் டைம் கொடுங்க...என்னால முடிஞ்சதைப் பண்ணிடறேன்' என்றாராம்! ஒரு நாள் கழித்து, பாடல் எடுக்கப்பட்டதாம்!

அப்படி வந்த பாட்டுதான் இது...படம் ரிலீஸானப்புறம் ஸ்க்ரீன்ல ரசிகனுக்குத் தெரிஞ்சது சிவாஜி மேனரிஸம் மட்டும் ஸ்டைல் மட்டும்தான்...அப்புறமென்ன ஒரே ரகளைதான் போங்க!



ஆகாய Ganges (நன்றி: Hello FM!)

இந்தப் பாடலைக் கேட்டவுடன் எனக்கு நினைவுக்கு வந்தவர் இருவர்....

முதல்வர்....திரு மலேசியா வாசுதேவன் அவர்கள் (என்ன ஒரு ஓபனிங்!)

இரண்டாமவர்...திரு ரஜினிகாந்த் அவர்கள் (மனநிலை பிறழ்ந்து, சரியான பின் நடித்த முதல் படம் இது)

திரு மலேசியா அவர்கள் பாடிய 'அருமை' வெகு ஜனப் பாடல்களின் 'மைல்கல்' பாடல்..கூட எஸ் ஜானகி...கேட்பதற்கு இனிமையோ இனிமை....!

இந்தப் பாடலை எடுக்கும்போது ஸ்ரீதேவி அவர்களுக்கு காலில் அடிபட்டு நடக்க முடியாத சூழல்...உன்னிப்பா கவனித்தால் ஸ்ரீதேவி நடமாட்டம் மட்டுப் பட்டிருப்பது தெரியும்...'உன்னிப்பா' கவனித்தால்தான் தெரியும்...இயக்குனரைப் பாராட்டிவிட்டு, அதற்காகவும் பாட்டைப் பாருங்கள்!

மலேசியா நம்முடன் இல்லை எனும்போது மனம் கனத்துப் போகிறது...அவரது பாடல்களில் அவர் உயிர் இன்றும் உலவிக் கொண்டிருக்கிறது.

பின்குறிப்பு - 'முதல்வர்' - ரஜினிக்குப் பிடிக்காததால், அவர் பெயர் இரண்டாமிடம்!

3 comments:

Thiagarajan said...

The Humming of S.Janaki followed by the interlude in Violin played by IR's trusted Violinist Narasimhan are a treat for ears

Anonymous said...

'நீங்க போட்டிருக்கிற மெட்டு, கண்ணதாசன் அவர்கள் எழுதிய வரிகள், இதுக்கு மேலே டி எம் எஸ் பாடின விதம் - இதை மேட்ச் பண்றாப்பல நான் நடிக்கணுமே? அதைத்தான் யோசிச்சுகிட்டிருக்கேன். ஒரு நாள் டைம் கொடுங்க...என்னால முடிஞ்சதைப் பண்ணிடறேன்' // Sivajiyin panivu the current actors should take into account

Anonymous said...

Paruppu Aasiriyare,

Have taken your comment into consideration and have changed the title of my blog to En Samaiyal Pakkam. Thank you