Wednesday, August 31, 2011

கமலஹாசன் அவர்களின் 'சப்பக்' (அ) 'பச்சக்' பாடல்கள் - 1

அன்றும் இன்றும் கமலஹாசன் அவர்கள் என்றால் நினைவுக்கு வருவது 'நடிப்பு' மற்றும் 'முத்தம்' (?!). மூன்று முறை தேசிய விருது பெற்றாலும், 'சிருங்காரம்' என அழகுத் தமிழில் அழைக்கப்படுவதைத் தனது படங்களில் செருகுவதைக் குறைத்துக் கொண்டதேயில்லை. சராசரி மனிதர்களை பெருமூச்சு விட வைத்தாலும்.... பாடல்களில் ஒரு க(ம)லை நயம் இருப்பதை யாராலும் மறுக்க / மறக்க முடியாது!

அது சரி 'சப்பக்' (அ) 'பச்சக்' என்றால் என்னபா? சரியான பதிலைத் தர மூன்று பேர் மட்டுமே உண்டு...

அரபு வாசகர் எனது அருமை 'பெரியண்ணா' திரு சங்கர் அவர்கள்...
சென்னை வாசகர், அருமை நண்பர், கவிஞர் திரு ஜே கே அவர்கள்...
சென்னை வாசகர், அருமை நண்பர், திரு தியாகராஜன் அவர்கள்...

ஏனையோர்களும் முயற்சி செய்யலாம்!

கமலின் பொன்மேனி சிலுக்காய் உருகுவதைப் பார்த்து ரசிக்காதவர்கள் இங்குண்டோ? 1983-ல் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்திய மூன்றாம் பிறை காவியத்தின் களங்கம். கமல தனது மெல்லிய நடன அசைவில், சிலுக்கைத் தூண்டுவது போல, 'ஐஸ்' ஜானகி குரலில் அமைந்திருக்கும் பாடல்..அடடா! இளையராஜா இசையில், ஊட்டி குளிரில், ஆடை குறைந்த, அவுட்டோரின் தெகிரிய ஒளிப்பதிவில் இதோ வருகுது 'பச்சக்' பாடல் ஒன்று....


மீண்டும் நிலா...இந்த முறை முழுமையாகக் காயுது..! வேறு யாராய் இருந்தாலும் ஆபாசமாய்ப் போயிருக்கும் பாடலைக் கமல் ஆள்வதைப் பார்க்கும்போது...மனிதருக்கு 'நேரம் நல்ல நேரம்' என்றுதான் நினைக்கத் தோன்றும். களத்துமேட்டை ஸ்டுடியோவுக்குள் அடக்கி, atmosphere-ஐக் கொணர்ந்து (அந்தக் காலத்தில் அப்பிடிதான் எடுப்பார்களாம்!), நெருக்கத்தைப் படம் பிடித்திருக்கும் எஸ் பி எம் அய்யா....பிடியுங்கள் 'சப்பக்' பாடல் இரண்டை...


'காயும் நிலா'வை வீணாக்காது 'பூவெடுத்து வைக்கும்' கமல்....ஸ்ரீதர் அவர்கள் இயக்கத்தில் பல சர்ச்சைகளுக்கு பின் வெளி வந்த, வந்த வேகத்தில் உள்ளே போன படம்...இதுவும் இண்டோரில் எடுக்கப்பட்டது...இதுவும் அம்பிகாவோடு....'பூவெடுத்து' கமல் பின்னால வைத்தால் 'சொக்காமல்' இருக்க முடியுமா என்ன?! ....எஸ் பி பி குழைவில், எஸ் ஜானகி நெருக்கத்தில், மயக்கும் இசையில் அநேகருக்குத் தெரியாத 'சப்பக்' பாடல் மூன்று...


-'பச்சக்' தொடரும்!

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

வேறு யாராய் இருந்தாலும் ஆபாசமாய்ப் போயிருக்கும் பாடலைக் கமல் ஆள்வதைப் பார்க்கும்போது...மனிதருக்கு 'நேரம் நல்ல நேரம்' என்றுதான் நினைக்கத் தோன்றும்.

Prasana Sridhar said...

Its high time.... you come back to india ;-)