Wednesday, September 21, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 21

காதல்....இந்த உணர்வை வார்த்தைகளால் விவரித்துவிட முடியுமா?

இது நம்மைத் தாக்கும்போது எப்படி இருக்கும்? மயிலிறகால் வருடுவது, அன்றலர்ந்த மலரைத் தொடுவது, பனித்துளி மிகுந்த புற்களில் நடப்பது, பல்லிடுக்கில் மாட்டிக்கொண்ட உணவுத்துகள் போல? இல்லை த்சுனாமி, பூகம்பம், புயல், மழை...? இல்லை தினமும் குளிப்பது, பல் துலக்குவது, சாப்பிடுவது போல?!


ஆக, அறுதியிட்டு சொல்ல முடியாத எதோ ஒரு அவஸ்தை நிச்சயம் உண்டு... இந்த அவஸ்தைதான் அடிக்கடி சந்திக்க வைக்கும், பேச வைக்கும், தொடர்பு கொள்ள வைக்கும்..சமயத்தில் மூச்சு முட்ட மூழ்க வைத்து வேடிக்கை பார்க்கும்....!


காதல்-ல் 'அதிர்ஷ்டம்' நிச்சயமாக உண்டு....'கொஞ்சம்' அதிர்ஷ்டம் இருந்தால் 'நம்மாளை' பார்த்தவுடனே பல்பு எரியும்...மணி அடிக்கும்...மனசுல தோன்றியதை உடனே சொல்லி சம்மதத்தை வாங்கிவிடலாம்...!


ஆனால், அதிர்ஷ்டம் 'அதிகம்' இருந்தால் ....'நம்மாளு'க்கு நம்மைப் புடிச்சாலும்...நமக்கு நம்மாளைப் புடிச்சாலும்...அப்பா அம்மா ஒத்துக்கிட்டாலும், சேர முடியாமல் போய்விடும்.....! இதில் தோற்றுப்போவது 'காதல்' இல்லை ...'காதலர்கள்' தான் தோற்றுப்போகிறார்கள். 'காதல்' அவர்கள் உள்ளத்தில், உணர்வில் ..இருந்து கொண்டேயிருக்கும்! இப்பவும் 'வார்த்தைகள்-ல விவரிக்க முடியாது'...அதுதான் காதல்!


கடோசி - 1
-நடித்துக் கொடுத்த கலைஞர்கள் கார்த்திக், மம்மூட்டி, ப்ரித்விராஜ், பிரகாஷ்ராஜ், கமல்ஹாசன், ரேவதி, பானுப்ரியா, சொர்ணமால்யா, கௌதமி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி...
-இசையமைத்த இளையராஜா, மரகதமணி, வித்யாசாகர் ஆகியோருக்கும் நன்றி...
-பாடிப் பரவசப்படுத்திய எஸ் பி பி மற்றும் சந்த்யா அவர்களுக்கு பெசல் டாங்க்ஸ்!

No comments: