Sunday, September 18, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 20

'நகைச்சுவை'னா எப்டி இருக்கணும்...?

மனைவி : டின்னர் வேணுமா?
கணவன்: சாய்ஸ் இருக்கா?
மனைவி: ரெண்டு இருக்கு?
கணவன் (சுவாரஸ்யமாய்) : என்ன?
மனைவி: வேணுமா? வேண்டாமா?

நகைச்சுவைன்னா படிச்சா... பார்த்தா... கேட்டா... உடனே...சிரிப்பை வரவழைக்கணும்... வரணும்... அத விட்டுபோட்டு...

சிரிப்பும் மகிழ்ச்சியும் கூடிய உணர்வை தூண்டும் கலைவடிவங்களை நகைச்சுவை எனலாம். நகைச்சுவை மன இறுக்கம் மன உழைச்சல் போன்றவற்றில் இருந்து மீண்டு ஆரோக்கியமான உடல் மன நிலையைப் பேண உதவும்.

இப்டி விக்கி-யெல்லாம் போட்டு (புல்)'அரிப்பு' வந்துரக்கூடாது....!

'டைமிங்' ரொம்ப முக்கியம்...உதாரணம்...

'காதலிக்க நேரமில்லை' படத்தில்...சச்சு சோகமாக உட்கார்ந்திருக்க நாகேஷ் வருவார்.... உரையாடலைக் கவனியுங்கள்..

நா: என்ன சோகமா இருக்கே?
ச: ஒரு வாரத்துக்கு முன்னால நாய் ஒண்ணு வாங்கினேன்...
நா: சரி அதுக்கென்ன...?
ச: சீசர்-னு பேரு கூட வெச்சேன்...ஆனா நேத்திக்கு செத்து போச்சு...!
நா: பேரு வெச்ச சரி...சோறு வெச்சியோ?!

அதே படத்துல வர்ற இந்த பீசைப் பாருங்க....நாகேஷ், சச்சு, பாலையா - இவங்களோட டைமிங் சென்சு...அடேங்கப்பா...!


'தில்லு முல்லு' பண்ணா கம்பியதான் கவுன்ட் பண்ணோணும்...இப்டி வாய் விட்டு சிரிக்க முடியுமா....ரஜினி, தேங்காய், சௌகார் காம்பினேஷன்-ல 'what a family, what a family?'.....பார்த்தா...ஆடிப் போயிரும் ஆடியன்சு..


இங்க்லீபீசு பேசுணும்னு ஆசையாத்தான் கீது...வரமாடேங்குதே! ஆனாலும், விடாப்புடியா தன்னிய பத்தியும், தன தொழில பெருமை பத்தியும், தன்னோட சகாக்களைப் பத்தியும் இங்க்லிபீசு-ல மௌலி-ண்ணா அடிச்சு விடுறாரு பாருங்க....உங்களால சிரிக்காம இருக்கவே முடியாது போங்க...!


பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்லோணும்...பொருந்தச் சொன்னாலும் மெய்ண்டைன் பண்ணோணும்..மெய்ண்டைன் பண்ணினாலும் மாட்டிக்காம இருக்கோணும்.... நம்மாளு 'டணால்' சொல்றதும்...அப்புறமா 'பணால்' ஆவறதையும் பாருங்களேன்...!


கடோசி - 1

சமயத்துல ரொம்ப சீரியஸ் மேட்டர் காமெடி ஆவறதும்...காமெடிப் பேச்சு சீரியஸ் ஆவறதும் அரசியல்ல சகசமப்பா! எவ்ளோ பெரிய உணர்ச்சிகர(ண)மான சீனை 'சிவாஜி புள்ள' காமெடியாக்கிய கொடுமைய என்னனு சொல்ல?! அத்தோட 'மேட்டர்'ஐயும் சேத்து நம்மாளுங்க 'சில்பான்ஸ்'பண்ணத பாத்தா....சான்சே இல்லை!!

1 comment:

தக்குடு said...

என்ன கொடுமை பருப்பாசிரியரே!! :))