Monday, September 26, 2011

கமலஹாசன் அவர்களின் 'சப்பக்' (அ) 'பச்சக்' பாடல்கள் - 3

கமல் 'சப்பக்/பச்சக்' பாடல்களுக்கு எவ்வளவு கண்டனங்கள் இருந்தனவோ அந்த அளவுக்கு வாசகர்கள் அந்தப் 'பக்க'த்தை வாசித்துத் தீர்த்தனர்:-) 'தல' படப் பார்வைக்குப் பின் அதிக 'தட்டு'க்கள் 'சப்பக்/பச்சக்' பக்கங்களுக்குத்தான்!

கமல் ஸார் பாடல்களுக்குப் பின் அபரிமிதமான உழைப்பு இருந்திருக்கிறது. ஒரு 'நாயகன்'-ஆக உருவாவதற்கு முன்னால் நிறைய கஷ்டப்பட்டிருக்கிறார். உதவி நடனக் கலைஞனின் பணி அவ்வளவு சுளுவானதல்ல ('நான் ஏன் பிறந்தேன்?' என்கிற எம் ஜி ஆர் படத்தில் அவர் பெயரை (உதவி நடனம்) பார்த்து வியந்து போனேன்!). 'என்றும் கமல்' என்கிற கிழக்குப் புத்தக வெளியீட்டுப் புத்தகத்தைப் படித்து பாருங்கள். கமலின் கடந்த பாதையும், சிந்திய வியர்வையும், உழைத்த உழைப்பும் புரியும்.

1983-ல் கமலின் மூன்று படங்கள் ஓடிய ஓட்டங்கள் சொல்லி மாளாது..... 'கசினோ'வில் 'வாழ்வே மாயம்', 'அலங்கார்'-ல் 'சகலகலா வல்லவன்', 'சுப'த்தில் 'மூன்றாம் பிறை' எனத் தொடர் வெள்ளி விழா படங்கள் அவரது உழைப்புக்குக் கிடைத்த வெற்றி. 'ஸ்ரீதேவி'தான் நாயகி என்பதை மாற்றி 'தாமரை' நாயகன் ஆனதும் இங்குதான்.

'திரும்பிப் பார்க்கிறேன்' பேட்டியில் சாருஹாசன் 'கமலை conscious-ஆக 'playboy' image கொண்டே வளர்த்தோம்...' என்கிறார். இதனாலேயே கமல் பல படங்களில் 'shirt/pant'-ஐக் கழட்டுவது சகஜமானது. இதனாலேயே பாடல்களில் நாயகியுடன் நெருக்கமாய் நடிப்பது இயல்பானது ('காதல் இளவரசன்'-ஐ, 'காதல் மன்னன்'-க்கு பிறகு சுமந்ததும் அசாதாரணம்). நடுவில் சாருவுக்குத் தெரியாமல் ஒத்துக்கொண்டு நடித்த '16 வயதினிலே' கோவண ஸ்டில்லைப் பார்த்துச் சத்தம் போட்டதாகவும், கமல் 'இல்ல...புது டைரக்டர்... நல்ல கதை...படத்தை பாருங்க நல்லா போகும்' என்று சொன்னதாகவும் குறிப்பிடுகிறார்.

சரி 'நாயகன்' ஆயாச்சு...! வாழ்க்கை அப்புறமாவது நன்றாயிருந்ததா? 'ரஜினி' என்கிற மாபெரும் காந்தத்துடன் என்றென்றும் போராட்டம்தானே?! தீபாவளிப் பண்டிகையின் விசேஷங்களில் 'கமல்-ரஜினி' படங்கள் நிச்சயம் உண்டு.

வறுமையின் நிறம் சிவப்பு - பொல்லாதவன் (1980)
தூங்காதே தம்பி தூங்காதே - தங்க மகன் (1983)
எனக்குள் ஒருவன் - நல்லவனுக்கு நல்லவன் (1984)
ஜப்பானில் கல்யாணராமன் - படிக்காதவன் (1985)
புன்னகை மன்னன் - மாவீரன் (1986)
நாயகன் - மனிதன் (1987)
வெற்றி விழா - மாப்பிள்ளை (1989)
குணா - தளபதி (1991)
தேவர் மகன் - பாண்டியன் (1992)
குருதிப் புனல் - முத்து (1995)


கொஞ்சம் யோசித்து, உற்று நோக்கினால்...திட்டமிடுதலும், கூட்டு முயற்சியும், போட்டி மனப்பான்மையைத் தூண்டுதலும், உள்ளில் அடங்கி இருக்கும் வியாபாரத் தந்திரமும் புரியும்.

கமலின் மற்றுமொரு பலம். முயற்சி...இது பலவீனமும் கூட....எப்படி?

ராஜ பார்வை (1981) - பார்வை இல்லாத ஒரு இளைஞனின் காதல் கதை. இன்றைக்கும் கூட நிகழக்கூடிய கதையை கமல் எடுத்தபோது அவருக்கு வயது இருபத்தி ஏழு. Playboy இமேஜால் படம் காணாமல் போனது.

நாயகன் (1987) - 24 வருடங்களுக்கு முன் 'இளைஞன் / நடுத்தரம் / முதிர்ந்தவர்' வேடம் கட்டிய போது கமலுக்கு வயது முப்பது மூன்று!! 'மீசை'யைக் கமல் எடுக்கவே மாட்டார், எடுக்க முடியாது என்கிற பேச்சு பரவி இருந்த கால கட்டத்தில் சட்டென வழித்து பன்முகம் காட்டியதை மறக்க முடியுமா? காப்பி / டீ என்று பேசப்பட்டாலும் நாயகன் இன்றைக்கும் ஒரு trend செட்டர் என்பதை மறுக்க இயலாது. இவ்வளவு உழைப்பிருந்தும், மனிதன் படத்தின் வசூல் முன் நாயகன் அடிபட்டுப் போனது சரித்திரம்.


அபூர்வ சகோதரர்கள் (1989) - நாயகன் படத்திற்குப் பின் இப்படி ஒரு தேக்கம் 'பேர் சொல்லும் பிள்ளை'க்கு வருமா? வந்ததே...! அனைத்தையும் தூக்கிச் சாப்பிட்டது 'அபூர்வ சகோதரர்கள்'. இதன் உழைப்பு இன்றும் ரகசியமாய்...!!

குணா (1991) - மனம் பிறழ்ந்த பாத்திரம், சரியாகச் செதுக்கப்படாமை, படத்தைச் சுற்றிய சில சர்ச்சைகள்...'அபிராமி..அபிராமி' யார் என்கிற கேள்வி இன்றும் உண்டு! அறையும் வன்முறை...அடங்கா வெறி கொண்ட 'குணா' அகப்பட்டுக் கொண்டான் 'தளபதி'-டம்!

இந்தியன் (1996) - 'அன்னா ஹசாரே'வைக் கொண்டாடுபவர்கள் 'இந்தியன்' தாத்தாவை மறந்திருக்க முடியாது. ஷங்கர் இயக்கத்தில் 'அடக்கி' வாசித்த கமலுக்கு வயது நாற்பது!! இன்றைய சூழலில் இந்தப் படத்தின் 'promos' எப்படி இருந்திருக்கும்...? கற்பனையை உங்களிடம் விடுகிறேன்...!

ஆளவந்தான் (2001) - தாயம் (1984) என்கிற கமலின் கதையின் தழுவல். முயற்சிப் படமா / மசாலாப் படமா என்கிற குழப்பத்தில் எல்லோராலும் 'செமத்தியா'க விமர்சனம் செய்யப்பட்ட படம். 'மொட்டை' பாத்திரம் கமலால் மட்டுமே செய்ய முடியக்கூடிய பாத்திரம்.கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால், புரியும்படி சொல்ல முயற்சி செய்திருந்தால்...அருமையான படமாயிருந்திருக்கும்.!!ஒரே நேரத்தில் பல அரங்குகளில் திரையிடப்பட்டதும் இதுதான்...ஆக, இன்றைய 'பல அரங்குகள் வெளியீடு' திட்டத்தைத் துவக்கி வைத்த பெருமையும் கமலுக்கு உண்டு :-)
வயதுக்கு மீறியதை செய்ய முயன்றதின் விளைவு பெரும்பாலான நேரங்களில் தோல்வியைத் தந்திருக்கிறது..சில பாத்திரங்களை இன்று செய்திருப்பாரேயானால் சிகரங்களை நிச்சயம் தொட்டிருக்க முடியும். தசாவதாரத்தில் செய்திருந்த பத்தில் ஒன்பதை ஏற்கனவே பல படங்களில் செய்து விட்டார் என்பதை நான் எழுதியிருக்கிறேன்.

கமலின் நகைச்சுவை நம்மை விலா நோகச் சிரிக்க வைத்திருக்கிறது. மீண்டும் கோகிலா, சிம்லா ஸ்பெஷல், எல்லாம் இன்பமயம், மைகேல் மதன காம ராஜன், சிங்காரவேலன், அவ்வை சண்முகி, தெனாலி...என்கிற நீண்ட பட்டியல் கமலின் நகைச்சுவை உணர்வுக்கு ஒரு சான்று.

கமலின் படங்கள் ஆங்கிலப் படங்களின் தழுவல் என்கிற குற்றச்சாட்டு இன்றும் உண்டு. இருந்துவிட்டுப் போகட்டுமே? ஒரு நல்ல படம்தான் நம் தேவை. அதன் மூலம் பற்றிய கவலை நமக்கு வேண்டாம் என்பதே என் கருத்து.

ஆக, 'சப்பக் / பச்சக்' பாடல்கள் கமலுக்கு மட்டுமே உரித்தானவை. அவரால் மட்டுமே செய்ய முடியும், செயல் பட முடியும்...!

கடோசி - 1

" 'சப்பக் / பச்சக்' பாடல் இல்லையா?" என வருந்தும் பிரியர்களுக்காக ஒரு பாடல்!

'சூர சம்ஹாரம்' படத்தில் 'நிரோஷா'வுடன் கொஞ்சிய கமலை அநேகம் பேர் பார்த்திருக்க முடியாது.... கமல் படுத்தும் பாடு...நிரோஷா படும் பாடு....leaving to you...!

2 comments:

தக்குடு said...

நீங்க எந்த ஏரியாவுல 'ஸ்ட்ராங்ங்ங்'-குனு இப்ப தான் புரியர்து...:)))

(Mis)Chief Editor said...

தம்பரி தக்குடு! அதுதான் என்னோட 'வீக்னெஸ்'-ப்பா!

-பருப்பு ஆசிரியன்