Friday, September 23, 2011

எங்கேயும் எப்போதும்



தமிழ் சினிமாவுக்கு வருடம் 2011 அவ்வளவு ராசியாகத்தான் இல்லை...

-அரசியல்வாதிகளின் பிடியில் சிக்கி அழிந்து போகும் தயாரிப்பாளர் வர்த்தகம்
-ஓடாத படங்கள் கொண்ட வருடத்தின் முன்பாதி...
-மதுரை, அருவாளை விட்டு வெளி வரமுடியாத இயக்குனர்கள்...
-பெரிய நடிகர்களின் இமேஜில் மக்கிப்போகும் கதைகள்...

இதையும் மீறி வந்த படம் 'தெய்வத் திருமகன்(ள்)'. இப்போது 'எங்கேயும் எப்போதும்'.


எங்கேயும் எப்போதும் ஒரு காதல் படம். ஆனால் மற்றப் படங்களில் வரும் காதல் இதில் இல்லை.
எங்கேயும் எப்போதும் ஒரு சோகப் படம். ஆனால் மற்றப் படங்களில் வரும் திணிக்கப்பட்ட சோகம் இதில் இல்லை.
எங்கேயும் எப்போதும் இளைஞர்கள் நடித்த படம். ஆனால் மற்றப் படங்களில் வருவது போல் 'வந்து' போகவில்லை.

பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என எல்லோரும் வரிந்து கட்டி களம் இறங்கி அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். ரொம்ப நாளைக்குப்பின் சென்னை, திருச்சி-ஐக் கண் முன் கொணர்ந்து நிறுத்தியதற்கும், இயல்பான படத்தைத் தந்ததற்கும் இயக்குனர் சரவணனுக்கு நன்றி.


ஒரு விபத்து வாழ்கையை எப்படிப் புரட்டி போடுகிறது....? என்ன பாடத்தைக் கற்றுக்கொடுக்கிறது? எத்துணை சோகத்தைக் கொணர்கிறது? வாகனத்தை ஓட்டும் ஒவ்வொருவரும் இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும்...கொஞ்சம் கற்றுக்கொள்ளவும் வேண்டும்!

கடோசி - 1

கமர்ஷியல் இயக்குனராய் முத்திரை பதித்திருக்கும் முருகதாஸ் இதில் தயாரிப்பாளராய் உயர்வு பெற்று...அந்தஸ்த்தைத் தக்க வைத்துக்கொண்டுள்ளார்...இணைந்த 'பாக்ஸ் ஸ்டுடியோஸ்' நிறுவனத்தின் துணிச்சலையும் பாராட்டியே ஆக வேண்டும்.

No comments: