Sunday, October 02, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 24

மலைமகள், அலைமகள், கலைமகள் இணையும் நவராத்திரி துவங்கி நாட்கள் ஆறாகி விட்டன...! இந்தியா முழுதும் களை கட்டியிருக்கும் சந்தோஷ, திருவிழாத் தருணங்கள்....பக்தியும், சக்தியும் பெருக்கெடுத்து ஓடும் நேரமல்லவா?! எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டிக்கொண்டு...மேலே போவோம்...!


தமிழ் சினிமாவில் அவ்வளவாக கொலுப்பாடல்கள் இல்லை என்றே தோன்றுகிறது.. கொஞ்சம் தேடித் பிடித்த கொலுப் பாடல்களைப் பார்ப்போமா?!

ஆம்...நீங்கள் எதிர்பார்த்த பாட்டுதான் இது...ஆனால் எத்துணை முறை கேட்டாலும் அலுக்காத பாட்டு...

கவிஞருக்குக் கற்பனைகள் ஊறுவதும் ராத்திரி...!
கலைஞரெல்லாம் அரங்கத்திலே சேருவதும் ராத்திரி...!

காளையர்க்கு ஓர் இரவு சிவராத்திரி... - ஆனால்
கன்னியர்க்கு ஒன்பது நாள் நவராத்திரி...!

அருமை...அருமை வரிகளும் இந்தப்பாட்டில்தான்...மங்கையர் திலகம் சாவித்திரி பாட்டாயிற்றே...பாருங்களேன்...!



ஒரு பாட்டில் படத்தின் கதையைச் சொல்லி விட முடியுமா...? பாடலின் வரிகள், படத்தின் நாயகிகள், இணைந்த இசை - இவை யாவும் இயக்குனரின் 'கைப்பொம்மைகள்' தானே?! இரு கோடுகளில் வரும் அழகான, அழுத்தமான பாடலை யாரால்தான் மறக்க இயலும்? - கொலுவுக்கு நடுவே கண்ணீரில் தளும்பி நிற்கும் ஜயந்தி, சௌகார் இருவருக்குமே அந்த 'புன்னகை மன்னன், பூவிழிக் கண்ணன்' சொந்தம்தான் :-)



தாலியிட்டுக் கூட்டிவந்த 'திருமதி'க்கு வெகுவாய் 'மதி' இல்லாது போனால் என்னாகும்? பொம்மை கூட பார்த்துச் சிரிக்கும்...! குருநாதர் வழியில் சிஷ்யன் விசு அவர்கள் எடுத்த 'கொலுப் பாடல்' வரிகளின் வீர்யம் கவிப்பேரரசுக்குச் சொந்தம். சங்கர் கணேஷ் ரெட்டையர் இசையில், வாணி ஜயராம் குரலில் அம்சமாய் இதோ வருகுது...!




கடோசி - 1

சாங்க்ஸ்தான் சூப்பர்-னா, விளம்பரம் அத்த விட ஷோக்கா கீதுபா!



1 comment:

இராஜராஜேஸ்வரி said...

காளையர்க்கு ஓர் இரவு சிவராத்திரி... - ஆனால்
கன்னியர்க்கு ஒன்பது நாள் நவராத்திரி...!


அருமையான நவராத்திரிப் பகிர்வுகள் . பாராட்டுக்கள்!