Saturday, October 08, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 27

அப்போதெல்லாம் படிப்பதற்கு புத்தகங்கள் வாங்குவது அரிது. அதுவும் லோயர் மிடில் கிளாஸ் சம்பளத்துக்கு வாங்கத்தான் முடியுமா? இல்லை கட்டுப்படியாகுமா?

திடீரெனத் துவங்கிய ஆன்மீகப் பயணத்தில், என் தந்தைக்குப் புத்தகங்கள் தேவைப்பட்டன. வாங்கித் தள்ளினார் கொஞ்சம்; வந்து சேர்ந்தது பரிசாக மிச்சம். அந்தக்காலத்தில் மாமனாருக்கும், மாப்பிள்ளைக்கும் என்ன உடன்பாடோ தெரியாது...புத்தகம் வந்தவுடன், அட்டையிட்டு, அழகாய் பிள்ளையார் சுழியில் துவங்கி, ॥ श्री ॥ தொடர்ந்து, பின்னர் புத்தகத் தலைப்பை அச்சில் வார்த்தாற்போல எழுதுவார் என் பாட்டனார் (தாயின் அப்பா).

ஒட்ட கம் இல்லை; குறைந்த பட்சம் மைதாமாவு கோந்து இல்லை, ஏழைக்கேற்ற 'சோற்றுப் பருக்கை' கூட கிடையாது. அப்பிடியும் கிழியாது, கசங்காது அட்டை கன்னி கழியாத பெண்ணைப் போல இருக்கும்! புத்தகத்திற்குக் கொடுத்த காசை விட அட்டைக்கு அதிகம் செலவழித்திருப்பாரா என்று தெரியவில்லை! ஆனால், தொடர்ந்து 'அட்டை' விஷயத்தில் மாப்பிள்ளைக்கும் (என் அப்பா), அவர் மாமனாருக்கும் நெறைய அண்டர்ஸ்டான்டிங் இருந்தது!

1967 செப்டம்பரில் வெளிவந்த புத்தகம் இது. காலங்கள் உருண்டதாலான தாக்கம் தவிர, புத்தகத்தின் அட்டை அப்படியே இருக்கிறது. புகைப்படத்தைப் பாருங்கள்....ஸப்தரிஷி குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிந்த விஷயம் இது! இன்றும் இதைப் பொக்கிஷமாக வைத்திருக்கிறேன், அமெரிக்காவிற்குக் கொண்டு வந்திருக்கிறேன்...அட்டைக்காகவும், ஆன்மீகத்திற்காகவும்...!

1 comment:

Anonymous said...

அட்டை கிழியாமல் பார்த்துக்கொள்ளவும்.

Shankar