Sunday, November 13, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 33

டி ஆர் காதல் சோகப் பாடல்களைப் பற்றி....


காதலின் சோகத்தை இப்படியும் சொல்ல முடியுமா? தோல்வியை இப்படியும் விவரிக்க இயலுமா? அதுவும் முதல் படத்தில்? எஸ் பி பி அவர்களின் குரல் அழுத்தத்தில் 'குழந்தை பாடும் தாலாட்டு' ; 'இரக்கமில்லா பெண்ணை எண்ணி உலகை நான் வெறுக்கிறேன்' - காதலுக்குப் பொருத்தமான வரி எழுதிய டி ஆர், இன்று தொலைந்து போனது ரொம்பவே அநியாயம்.



'சாந்தி' என்கிற வார்த்தையை வைத்து பல விதமாய் அர்த்தம் வரும்படி எழுத முடியுமா...? டி எம் எஸ் அவர்கள் குரலில் 'அமைதிக்கு மறு பெயர் சாந்தி' என்கிற டி ஆர் வரிகள் 'காதலின் ஆழத்தையும், அர்த்தத்தையும், தோல்வியையும்' சொல்லுவது நெறைய பேருக்குத் தெரிந்திருக்காது.



டி ஆர் அவர்களின் பலம் பாடகர்களைத் தெரிவு செய்வது. 'வைகைக் கரை காற்றே நில்லு' பாடலுக்கு யேசுதாஸ் அவர்களின் குரல் கனப் பொருத்தம். 'காற்றே பூங்காற்றே, என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்' வரிகளில் இசையும், குரலும் இழையோடும் அற்புதம், 'காதலில் வாழ்ந்த கன்னி மனம், காவலின் வாடையில் கன்னி விடும்' எனும்போது நம் மனதை என்னென்னவோ செய்கிறது.



'பூக்களைத்தான் பறிக்காதீங்க, காதலைத்தான் முறிக்காதீங்க' என அறவுரையுடன் துவங்கும் பாடல் 'மனசுக்குள் காதலை வெச்சான், மனுசந்தான் அதனை பிரிச்சான்' எனத் தெளிவாகச் சொல்லும் 'சங்கர் கணேஷ்' பாடும் பாடல் இதோ...



'பொன்னான மனசே...பூவான மனசே...வெக்காத பொண்ணு மேல ஆசை...' எனத் துவங்கும் காதல் சோகப் பாடலில் முழுக்க முழுக்க யதார்த்தம். 'காதல் என் காதல், அது காதல் இல்ல' என மயக்கம் என்ன படத்தில் வரும் பாடலுக்கு வித்து இந்தப் பாடல் எனத் 'தெகிரியமாய்'ச் சொல்லலாம். டி ஆர் பாடியிருப்பது அழகு...மெல்லிய சோகத்தில் 'அன்று கையதானே கழுவு என்றாள், இன்று காதல் இல்லை அழுவு என்றாள்' எனப் பாடும்போது நமக்கும் வலிக்கத்தான் செய்கிறது.



3 comments:

Prasannaakumar MP said...

ரொம்ப நாட்கள் பிறகு டீஆர் பற்றி நல்ல பதிவு. நன்றி.

RIPHNAS MOHAMED SALIHU said...

Nice review.

MANO நாஞ்சில் மனோ said...

ஒரு ஜாம்பவான் காமெடி பீசாகிப்போனது வேதனைதான்...!!!