Monday, November 07, 2011

என்றும் கமல்!

இளமை ததும்பும் பாடலோடு கமலின் பிறந்த நாளைத் துவங்குவோம்.

ராங் நம்பரைக்கூட கனெக்ட் /'கணக்' பண்ணும் வாய்ப்பு, கமலைத் தவிர யாருக்குக் கிடைக்கும்? மன்மத லீலையைத் துவக்கி, மன்மத அம்புடன் இன்றும் தொடரும் ஹாசன் நீடு வாழ, பிறந்த நாள் வாழ்த்துக்கள்...


பெண்ணைப் பெற்ற எந்த அப்பனுக்கும் வரக்கூடாத கொடுமை இது....கமல் ஸார் அவர்களின் நடிப்பு 'மகாநதி' போல வெளிப்படும் இந்தக் காட்சி...பிறந்த நாள் காணிக்கை...!


கமல் என்கிற நாயகனின குறிப்பிடத்தக்க பரிமாணம் 'நகைச்சுவை'. இன்றும் மனதில் நிற்கும் 'மைக்கேல்...' படத்தில் கமல்/ஊர்வசி/நாகேஷ்/டெல்லி கணேஷ்/லக்ஷ்மிம்மா நடத்தும் 'முதல் இரவு' அட்டஹாஸ்யம்...ஹாசனின் பிறந்த நாள் அன்று உங்களுக்கு!


கடோசியா நம்ம 'சப்பக்/பச்சக்' பெசல் இல்லேன்னா எப்படி??! வந்துக்கிட்டே இருக்கு...காதல் நாயகன் கமலுக்கு 'ரதி' கிடைத்து விட்டால்...விடுவாரா என்ன??! 'பேரின்பமே நீதானம்மா, அதை நீ என்னிடம் தந்தால் என்ன?' என ஒட்டிக்கொண்டு விடவே மாட்டாரே?!


நம்மை பலவகையில் மகிழ்விக்கும் கமல்ஜி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!

1 comment:

"ராஜா" said...

Happy b'day universal hero