ரஜினி டூயட்ஸ் - 19
'சோலோ' எஸ் பி பி-யாய்ப் போனாலும், இரணடு டூயட்கள் முத்துக்கள் அல்லவா?  ஆனாலும், 'காதலின் தீபத்தில்' மங்கிப் போன 'என் வாழ்விலே வரும் அன்பே வா'-வுக்கே என் ஓட்டு.  இளையராஜாவின் பசுமையான இசையில், ரஜினி மாதவி இணைப்பில்  முதன் முதலாய் அமைந்த சூப்பர் காதல் பாட்டு....பஞ்சு சார் வரிகளில்...
இதை, இதை எப்படி மிஸ் பண்ணேன்??!  பாட்டைக் கேட்பதில், பார்ப்பதில் அவ்வளவு சுகம்.  ரஜினி / சிலுக்கு ஐட்டம் நெம்பர் இல்லாத அற்புத டூயட்.  இளையராஜா இசையும், எஸ் பி பி / ஜானகியம்மா வாய்ஸும், சிலுக்கின் presence-ம் அடடா...மேல 'பேசக் கூடாது'!!  ரஜினிக்கு 'அடுத்த வாரிசு' உண்டா என்ன?!  அது சரி, பாட்டு எழுதினது யாருங்க?
மகேந்திரன் சார் இயக்கம், இளையராஜா இசை, ரேவதி நடிப்பு இவர்களோடு சேர்ந்த ரஜினி காந்தம்!  பாட்டுக்கு என்னால எதுவுமே எழுத முடியாது...அதற்கும் அப்பால் அமைந்த அருமைப் பாட்டு...தலைவர் வாசம் வீசும் 'தாழம்பூ' பாட்டு...
 
1 comment:
pesakkoodathu padalai paadiyathu s.janaki illai p.susheela
Post a Comment