Friday, April 06, 2012

சஞ்சய் காந்தி!

இந்தத் தலைமுறைக்குத் தெரியாத காந்தி.  இந்தியாவை ரணகளம் செய்தவர்.  இந்திராவை அடக்கியாண்டவர்!  எமர்ஜென்ஸி, மிசா நாயகன்.

ஆர் முத்துக்குமார் அவர்கள் எழுத்தில், கிழக்கு பதிப்பக வெளியீட்டில் வந்தசஞ்சய் காந்தி’ - மர்ம நாவலுக்கு நிகரான திகில்  / கிலி / சுவாரஸ்யம்.

சஞ்சய் காந்தியின் 34 வருட வாழ்க்கை எத்துணை பேரை பதம் பார்த்தது, புரட்டிப் போட்டதுஅட! ஒரு நாட்டின் சரித்திரத்தையே அல்லவா இருட்டில் வைத்து விட்டது?

தாயின் வயிற்றிலிருந்துசஞ்சய்வெளி வருவதற்குள் படுத்திய பாட்டில் துவங்குகிற வரலாறு, கடைசி வரை விறுவிறு / சுறுசுறு.


படிப்பில் நாட்டமில்லை, நண்பர்களுடன் கூட்டு இல்லை, ’அம்மா! அம்மா!’ என்று தலைப்பைப் பிடித்தபடி சுற்றிய சஞ்சய் பின்னர்அம்மாவையே கைக்குள் போட்டுக்கொண்டதுவிதிதான்.


ரோல்ஸ்ராய்ஸ் இங்கிலாந்து தொழிற்கல்வி, மாருதி நிறுவனம் (இன்றைய மாருதி உத்யோக்!), எமர்ஜென்ஸி, மிசா, வாசக்டெமி, இளைஞர் காங்கிரஸ் என சஞ்சய்தொட்டதெல்லாம்ஆமை புகுந்த வீடுதான்.  சும்மா சொல்லக்கூடாதுமனிதர்புகுந்து விளையாடி, பல பேரை மண்ணைக் கவ்வ வைத்து, பீதியில் உறையச் செய்ததுமுகமது பின் துக்ளக்’- நினைவுக்குக் கொண்டு வருகிறது!பிரதமரின் மகன் என்கிற ஒரே அடையாள அட்டையை வைத்துக்கொண்டு 1972-ல் மாருதி நிறுவனம், வங்கிகள் மூலம் பெற்ற கடன் ரூ 7.5 மில்லியன்.  ரிசர்வ் வங்கி அவசர அவசரமாய்இனி மாருதி நிறுவனத்திற்குக் கடன் கொடுக்க வேண்டாம்என்று சுற்றறிக்கை அனுப்பியது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.  அது படி, ‘கடன்கொடுக்காத அதிகாரி/வங்கிகளுக்கு எமர்ஜென்ஸி / மிசா-வில் ஆப்பு!  6000 ரூபாயில் காரைக் கொடுப்பேன் என்கிற உத்தரவாதம் காற்றில் பறந்து, 12000 ரூபாய் உயர்ந்து, ‘சாலை உருளைதயாரிப்பில் தேய்ந்ததைச் சுவைபடச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.


முடிசூடா இளைஞர் காங்கிரஸ் அணித்தலைவராய் பிரகடனம், ஒரு ரூபாயில் காங்கிரஸ் உறுப்பினர் அட்டை, பிடிக்காத காங்கிரஸ் நிர்வாகிகளுடன் இளைஞர் காங்கிரஸ் நேரடி மோதல்இதற்கெல்லாம் வழக்கம்போல்அன்னையின் ஆசி.

மேனகாவை கிட்டத்தட்டகவர்ந்துதிருமணம் செய்திருப்பதை போகிற போக்கில் ஆசிரியர் சொல்வது ஓகே.

எமர்ஜென்ஸியில் கிட்டத்தட்ட கொடுங்கோல் ராஜ்ய அராஜகம்தான்.  மிசா சட்டத்தில், மிச்சம் வைக்காமல் எல்லோரையும்உள்ளேவைத்து, பத்திரிகை சுதந்திரத்தைப் பறித்து, ’துர்க்மான் கேட்குப்பத்தை ஜாலியன் வாலா பாக் ரேஞ்சில் நாசம் செய்தசஞ்சய்’- பயத்துடன்தான் படிக்க வேண்டியிருக்கிறது.

வாசக்டெமி தமாஷ்தான் உச்சம்.  குடும்பக் கட்டுப்பாடு-க்கு ஒரே வழி வாசக்டெமி அறுவை சிகிச்சை என சஞ்சய் முடிவெடுத்து, டெல்லியில் துவங்கி, இந்தியா முழுவதும் தலைவர்களை கைக்குள் போட்டுஅதகளம்பண்ணியதுஎன்ன ஒரு யோசனை?!! – ‘அந்தக் கால ஆண்பிள்ளைகள் நிலைமை கொஞ்சம் பரிதாபம்தான்

ஜனதா ஆட்சியில், ஷா கமிஷனை எதிர்கொள்ள முடியாமல் மாமனார், துணை நிலை ஆளுநரின் கதைகளை முடித்த பெருமையும் சஞ்சய்க்கு உண்டு.  ஆட்சி கவிழ்ந்து, காங்கிரஸ் வெற்றியில்ஷாகமிஷன் வழக்குகளிலிருந்துவிடுபட்டசாமர்த்தியம் (?!) முகஞ்சுளிக்க வைக்கிறது 

இந்திரா இரண்டாவது இன்னிங்ஸ்- துவக்கும்போதுசஞ்சய்விமான விபத்தில் மரித்துப் போவது பரிதாபம்தான்.  (மகனைக் கட்டுப்படுத்த முடியாமல்போட்டு விட்டார்என்கிற பழி இந்திரா மேல் உண்டு. அதுஉண்மையாயிருக்கக் கூடும் எனசஞ்சய் காந்திபடித்தபின் தோன்றுகிறது!  இது என் கருத்துதான், ஆசிரியர் கருத்தல்ல!)

மனைவி மேனகாவுக்கு வயது 24; மகன் வருண் மூன்று மாதக் குழந்தை-  இவர்களுக்காக வருத்தப்படுவதை விட்டு, நாடு சஞ்சய் மரணத்தில் நிச்சயம் நிம்மதிப் பெருமூச்சு  விட்டிருக்கும்.

-சஞ்சய் காந்தி, ஆர் முத்துக்குமார், கிழக்கு பதிப்பகம், ரூ 100

1 comment:

Swetha Venkat said...

did u see Arjun Rampal's portrayal of Sanjay in Rajneeti? quite a character! interesting post.