Wednesday, April 25, 2012

அத்தியாயம் இரண்டு : மைசூர் பேடா

பெண்கள் கல்லூரியில் ஆச்சரியம் காத்திருக்கும் என்று ரயிலேறும்போது, மைசூர் வந்தபோது, ஆட்டோ பிடித்தபோது, கல்லூரியை அடைந்தபோது சர்வ நிச்சயமாகத் தெரியாது.

மேலே போகுமுன் சிறிய முன்னுரை.

என் தந்தை வெளியில் எதுவும் சாப்பிடுவதில்லை என்று எனது நெருங்கிய உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரியும்.  (இது பற்றி விரிவாக பின்னால் எழுதுகிறேன்)  இப்படிப்பட்ட மனிதர்களைக் காண்பது அரிது என்கிற முத்திரையோடு வாழ்ந்தவர் அவர்.  தண்ணீரைக்கூட வீட்டில் இருந்து எடுத்துப் போய் குடிப்பவர்.  அவ்வளவு சுய கட்டுப்பாடு.

நெற்றி நிறைய ஸ்ரீ சூர்ணத்துடன் என்னை எதிர்கொண்ட சக ஊழியரைப் பார்த்தவுடன்டிப்பிகல் சென்னை மாம்பல ஆசாமிஎன்று நினைத்துக்கொண்டேன்.  சில நல்ல விஷயங்களையும், பலஇந்த மாதிரி விஷயங்களையும் பிரசித்தி பெற்ற நிதி நிறுவனத்தில் வேலை செய்த போது கற்றுக்கொண்டவை!

வரவேற்று, ‘ஸார்! சிற்றுண்டி வேண்டுமா?’ என கன்னடத்தில் வினவினார் கல்லூரியின் ப்ளேஸ்மெண்ட் ஆஃபீஸர் (ஆண்!).  வேண்டும்.  எதுவாயிருந்தாலும் ஓகேஎன்று கன்னடத்திலேயே பதிலளித்துவிட்டு, ‘ஸார்! உங்களுக்கு?’ என்றேன் சக ஊழியரிடம்.

நான் வெளில சாப்பிடறதில்ல ஸார்!’ 

நம்ப முடியாமல்என்ன?’

நான் வெளிச் சாப்பாடு சாப்பிடறதில்லை  என்றார் மீண்டும்!  வாட்டர் மட்டும் வெளில குடிப்பேன்’.  அட ராமா!

எவ்வளவு நாளா?’

‘2003-லிருந்து!’

கலியாணம்/வீட்ல விசேஷம்னா என்ன பண்ணுவேள்?’ – ‘அவாபாஷையிலேயே உரையாடல் தொடர்ந்தது!

அப்பா/அம்மா 80, பையன் உபநயனம் எல்லா விசேஷத்துக்கும் நமக்குத் தனி சாப்பாடுஎன்றதும் அயர்ந்து போனேன்.

தட்டில் அடங்காத மசாலா தோசை, சட்னி வந்தது  ஒரு விள்ளலை எடுத்து வாயில் மென்றுகொண்டே கேட்டேன்.

ஸார்! இது பாஸிபிள்தானா?’

ரொம்ப சின்னதா ரைஸ் குக்கர் மாதிரி ஒண்ணு வந்திருக்கு ஸார்.  அதிலேயே காஃபி போட்டுக்கலாம், ஒத்தருக்கு சாதம் வடிச்சு, அப்புறமா தளிகை கூட பண்ணிக்கலாம்.  வெளியூர் போறதா இருந்தா எடுத்துண்டு போயிடுவேன்

இன்னிக்கும் அப்பிடித்தானா?’

இல்ல ஸார்! நேத்து நைட்டு மெட்ராஸ்ல ட்ரெயின் புடிச்சு வந்து காத்தால இறங்கியாச்சு.  ஒரே நாள் ஸ்டேங்கறதால மாமி சப்பாத்தி பண்ணி கொடுத்துட்டா. பலகாரம்.  ஏகாதசி பாருங்கோ!’


மணக்கும் வெங்காய/உருளை மசாலாவுடன் தோசையை எடுத்து, பூண்டு சட்னியில் தோய்த்து வாயில் போடப்போன நான் சில நொடிகள்ஃப்ரீஸ்ஆகி….

சாப்பிடுங்கோ, ஆறிப்போறதுஎன்றார் புன்னகையுடன். 

பேப்பர் கப்பில் தேநீர் வைக்கப்பட்டது.  ஸார் காஃபி தானே கேட்டார், ஏன் டீ கொடுக்கறேள், காஃபி இல்லையா?’ என்று பரபரத்தவரை அடக்கினேன்.  பரவாயில்ல ஸார், டீ போதும்’.


என் தந்தையின் குணங்களை 15 ஆண்டுகளுக்குப் பின்னர் நேரில் பார்த்தது போலிருந்ததால் நெகிழ்ந்து விட்டேன்.  அம்மா பார்த்திருந்தால் ஆச்சரியப்பட்டிருப்பாள். 


 'இதெல்லாம் சாத்தியமேயில்லை இந்தக்காலத்தில்என மனக்கணக்கில் வாழ்ந்திருந்த என்னைதப்புக் கணக்கு, திருத்திக்கோஎன்று அவர் மூலம் சுட்டிக் காட்டிய இறைவனுக்கு எப்படி நன்றி சொல்ல முடியும்?!

தேநீரை ஒரே மூச்சில் குடித்துவிட்டு, ‘ஸார்! எங்கே இருக்கேள் மெட்ராஸுல?’

மாம்பலம், அயோத்தியா மண்டபம் பக்கத்துல

பின் குறிப்பு:


மைசூர் பேடாஎன்பது கர்நாடக மாநில மரியாதை.  மிகவும் அரிதான செயல்களைச் செய்பவர்களுக்குதலைப் பாகைஅணிவித்து கௌரவப்படுத்துதேமைசூர் பேடா’.  P B ஸ்ரீனிவாஸ், ஸர் விஸ்வேஸ்வரைய்யா, நடிகர் ராஜ்குமார் போன்றோருக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.  என் அளவில்மைசூர் பேடாவை சக ஊழியருக்கு அணிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

மிக முக்கியமான பின் குறிப்பு : 


பெண்களைக் கொண்ட, சுவாரஸ்ய நிகழ்வுகளைக் கொண்ட மூன்றாம் அத்தியாயம் விரைவில்.

No comments: