Wednesday, May 02, 2012

நண்பன் 100!

 

பேசத் தெரிய வேண்டும் – அதுவும் சபையில் ‘ஒயுங்கா’ பேசத் தெரிய வேண்டும்.

 ‘ஐஸு’க்கு அப்பாவா ஜீன்ஸ்-ல நடிச்சீங்களே, அனுபவம் எப்படி?’ன்னு எஸ் வி சேகரிடம் கேட்டப்போ அவர் சொன்ன பதில் ‘அப்பாவா நடிச்சதுல என்னங்க அனுபவம் இருந்திருக்கும்?!’


நண்பன் 100-வது நாள் விழாவில் (அப்படியா?! என்றெல்லாம் முழிக்கக்கூடாது!) சத்யராஜ் அவர்களிடம் சிவ. கார்த்திகேயன் கேட்ட கேள்வி ‘ரெண்டு பொண்ணுங்களோட அப்பாவா நடிச்சிருக்கீங்களே…’ என்றதும் ‘கட்டிப் புடிக்கற மாதிரி காட்சி வைத்திருக்கலாம்’ என்று நகைச்சுவையாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு பேசியது….(விஜய் டி.வி.)

(’வெக்கறதா இருந்தது, நீங்க நடிக்கறதா ஆனப்புறம் ஸாரு எடுத்துட்டாரு’ என சிவ கார்த்திகேயன் பஞ்ச் அல்டிமேட்!)

ரெண்டு பேர் சொல்ல வந்ததும் ஒன்றேதான். ஆனால் எவ்வளவு வித்தியாசம்?



தந்தை என்கிற பிரபல அறிமுக அட்டையை வைத்துக்கொண்டு, இயக்குனர் ஷங்கரிடம் இணைந்து பணியாற்றுகிறார் என்பதாலேயே மதன் கார்க்கியை எனக்குப் பிடிக்காமலிருந்தது. ஞாயிறு அன்று நண்பன் 100-வது நாள் விழா விஜய் டி.வி.யில் பார்க்கும்வரை.

’அஸ்கு, லஸ்கா’ பாட்டு எழுதியதற்காக விருதைப் பெற வந்தவர் அநியாயத்திற்கு உயரம். பொன்மணி அம்மாவின் சாயல் முகமெங்கும். பா விஜய், நா முத்துலிங்கம், விவேகா –விற்குப் பின்னால் பேசினார...்.

தமிழ், நாவில் விளையாடியது. ஆங்கிலக் கலப்பில்லாமல், இயல்பாக, பணிவாக, அமைதியாக, எதைப் பேச வேண்டுமோ அதைப் பற்றி, எப்படி விவரிக்க வேண்டுமோ அப்படி விவரித்து, அநாவசியமாய் யாரையும் புகழாமல், சக கவிஞர்கள் அனைவர் எழுதியதையும் நினைவில் வைத்து, தனக்குப் பிடித்த வரிகளைச் சுட்டிக் காட்டிய…கார்க்கி.. really hats off to you!

இந்தச் சம்பவத்தால் ‘சப்பக்’ என்று நெஞ்சில் ஒட்டிக்கொண்ட ‘மதன் கார்க்கி’ நீண்ட ஆயுளுடன், ’நன்றாக’ வரவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

No comments: