Tuesday, May 01, 2012

'விஸ்வரூபம்' - கமல்!

உலக நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் கமல் ஹாஸனின் மெகா பட்ஜெட் படமான விஸ்வரூபத்தின் முதல் ஸ்டில் மற்றும் 30 வினாடிகள் கொண்ட ட்ரைலர் இன்று வெளியானது.

இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ 30 செகன்ட் ட்ரைலரிலும் இந்த ஒரு படம்தான் இடம்பெற்றுள்ளது. ஒரு வெள்ளைப்புறா பறந்து செல்கிறது. அடுத்து அமெரிக்காவின் நியூயார்க் நகரம்... அதன் மத்தியில் கமல் நிற்கிறார்.. 'முழு நிறைவு பெறும் தருவாயில்... எழுத்தும் ஆக்கமும் கமல் ஹாஸன்' என்று முடிகிறது.
 
நன்றி : தட்ஸ்தமிழ்.காம்
 
 
கமலுக்கும் தீவிரவாதத்திற்கும் அதீத ப்ரேமை, soft corner. 

புன்னகை மன்னன், சூர சம்ஹாரம், வெற்றி விழா, குருதிப்புனல், ஹே ராம், உன்னைப் போல் ஒருவன், தசாவதாரம் என அவர் படங்களில்தொட்டும், தொடாமலும்’, ‘பட்டும் படாமலும்தீவிரவாதம் உண்டு.  தீர்வுகள் உண்டா?

புதன்கிழமைஎன்கிற சாதாரண படத்தைக் கூடமதத்தைத் தொடர்பு படுத்தி எடுத்திருப்பார்.  காரணம் இன்றுவரை சத்தியமாக எனக்குத் தெரியாது.

விஸ்வரூபத்தைப் பார்க்கும்போது நமக்கு பயம் /ஆயாசம்.  மற்றுமொரு தீவிரவாதப் படமா?  அதுவும் கமலிடமிருந்தா? இம்மாதிரி பயங்கள் too early என்று கமலின் ரசிகர்கள் விமர்சிக்கக்கூடும்.  இருந்தாலும்தெனாலிமாதிரி பயமாய் இருக்கிறது.

கமல் என்கிற மாபெரும் கலைஞன் மேல் மதிப்பு, மரியாதை, காதல் கூட உண்டு.  என்னுடைய பதிவுகளில் தேடிப் பாருங்கள். உங்களுக்குக் கிடைக்கும்.  ஆனால், ‘நகைச்சுவையோடு நிறுத்திக்கொள்ளலாம் (மன்மத அம்பு பார்த்தபின்னும்!) என்று தோன்றுகிறது.

கமல்ஜி! நீங்கள் வளர்ந்த்தை, தத்தளித்ததை, மீண்டும் விஸ்வரூபம் எடுத்ததை பார்த்த ஒரு எளிய ரசிகன் கருத்தே இது.

1 comment:

Anonymous said...

இந்துகளை தாழ்த்தியும் மற்ற மதங்களை உயர்த்தியும் பேசுவது கமலுக்கு ரொம்பப் பிடிக்கும். மறுபடியும் அது தான் நடக்கப்போகிறது.

Shankar