Sunday, October 21, 2012

மாற்றான் - பார்வை 2

இனி மாற்றான் பற்றிய பார்வை.. (முதலாவதை விட்டாலும், படிக்கலாம்!)
 
 


பில்லா-2 பார்வையில் சொன்னதையே திருப்பிச் சொல்கிறேன்…
 
 
//ஹாலிவுட் படங்களில் வகைகள் (genre) உண்டு.



காதல்/காமெடி/ஆக்‌ஷன்/ஹாரர் போன்ற படங்கள் genre-லிருந்து இம்மியும் பிசகாது நேர்க்கோடாய் எடுத்து, நம்மை சுவாரஸ்யத்துடன் பார்க்க வைத்துவிடுவார்கள்.
 
 
இந்திய சினிமாக்கள் அப்படியல்ல. எல்லாவற்றையும் கலந்து, உட்டாலக்கடி உருண்டையாய் நம் கையில் கொடுத்துப் பார்க்க வைப்பார்கள். அப்படிப் பார்த்துச் சுவைப்பது நமக்குப் பழக்கமாய்ப் போய்விட்டது.//
 
 
டான் வேடம் கட்டி, ‘டாண்’ என்று ஆஜாராகும் அஜீத்-ஐப் போல சூர்யா அவர்கள் சிக்கிக் கொண்ட படம் ‘மாற்றான்’.  முந்தைய படம் ‘ஏழாவது அறிவு’-ன் இரண்டாவது பாகம்தான் ‘மாற்றான்’? என்கிற அளவில் ஜெனடிக் ஸைன்ஸ் படம் முழுதும் அலசப்படுகிறது.  சிவகுமார் புத்திரரே! கொஞ்சம் வெளீல வாங்க பாஸு!
 
 
சூர்யா அவர்களின் உழைப்பு பற்றி எல்லோரும் எழுதியாகிவிட்டது.  Hats off to you!  படத்துக்குப் படம் உழைப்பைக் காட்டும் இவர், இனி கதையைத் தேர்ந்தெடுக்கவில்லை என்றால் அபாயத்தைத் தொடும் ஆபத்திருக்கிறது.  சிகையலங்காரத்தையும் கொஞ்சம் புதிதாக அமைத்துக் கொள்வதும் நல்லது..
 
 
தந்தையாகவும், வில்லனாகவும் வரும் விஞ்ஞானி ராமச்சந்திரன் பாத்திரத்தில் சச்சின் கேட்கர் சூப்பராக நடித்திருக்கிறார்.  அலட்டிக்கொள்ளாமல், பாச உறவுகளில் சிக்கிக்கொள்ளாமல் அவர் செய்யும் அலம்பல்கள் செம ரகளை.  இறுதிக் காட்சிகளில் கிளாஸிக்!
 
 
 
கதாநாயகிக்கு மொழி மாற்றம் செய்வதைத் தவிர வேறு வேலை இல்லை.  காஜர் அல்வா என என்னால் ஏற்கெனவே வருணிக்கப்பட்ட காஜல் அகர்வால் (ஹி..ஹி!) ரொம்பவே இளமையாக இருக்கிறார்!
 
 
ரெண்டு ட்யூன் ராஜ்குமார் என்று அந்த இசையமைப்பாளருக்குப் பெயருண்டு இனி ஹாரிஸ் அவர்களை ‘அஞ்சு ட்யூன்’ ஹாரிஸ் என்று தெகிரியமாக அழைக்கலாம்.  பாடல்கள் அனைத்தும் அவ்வளவு பழைய்ய படங்களின் சாயல்கள்!. 
 
 
கதை/திரைக்கதையில் கோட்டை விட்டதை, ஒளிப்பதிவு / ஸ்டண்ட் / தொழில் நுட்பத்தில் பிடித்திருக்கிறார்கள்.  சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
 
 
 
நாவல்களில் ஸஸ்பென்ஸ் இருவகை உண்டு.  ஒன்று இவர்தான் கெட்டவர் என்று முதலிலேயே சொல்லும் ஓப்பன் ஸஸ்பென்ஸ்.  இரண்டாவது பொடி வைத்து, இவரா, அவரா என யூகிக்க வைத்து, கடோசியில் முடிச்சவிழும் க்ளோஸ்ட் ஸஸ்பென்ஸ்.  மாத நாவல்களில் பெரும்பாலும் ரெண்டாவது வகையைச் சேர்ந்தவை.  அப்பத்தான் ‘வண்டி ஓடும்’!
 
 
சுவாரஸ்யமாய்க் கதையைப் பின்னி, திரைக்கதை அமைத்து இதுவரை எடுத்த ஆனந்த் / சுபா தவறவிட்டது ’ஓப்பன் ஸஸ்பென்ஸ்’ வகையைத் தேர்ந்தெடுத்ததுதான்.  வில்லன் யார் என்று முதலிலேயே தெரிந்துவிடுவது படத்தின் சுவாரஸ்யத்தைக் கெடுத்து விட்டது.
 
 
மாத நாவல்களின் ஸடைலிலேயே படமாகக் கொண்டு நம்மை சுவாரஸ்யமாய்ப் பார்க்கச் செய்த மூவேந்தர்கள் (ஆனந்த்-சுரேஷ்-பாலா) இந்த முறை பலமாகச் சறுக்கி, நம்மையும் சோதித்ததை நினைக்கும்போது, ‘எப்டி இருந்த நான் இப்டி ஆயிட்டேன்?’ என்பதுதான் நினைவுக்கு வருகிறது.
 
 
முக்கியமான பின்குறிப்பு:
 
 
1. படம் இரண்டரை மணி நேரத்தில் முடிந்ததை நினைக்கும்போது, சில காட்சிகளை நீக்கி விட்டார்களோ?  (அப்பாடி! பிழைத்தோம்!)
 
 
2. லாஜிக் பொத்தல்கள் நிறைந்த படமென்றாலும், சொல்ல வந்த சேதி நன்றாயிருக்கிறது.  சுரண்டல்களும், மோசடிகளும் இந்தியாவை எப்படி உலுக்குகின்றன என்பதை ஆ…வ்… விதத்தில் சொல்லியதில் படம் படுத்து விட்டது.
 
 
3. சுரேஷ்-பாலா ஸார்ஸ்! – ‘ஐ’யோ பாவம் ஷங்கர்-னு ஆகாமல் இருப்பது உங்கள் கைகளில்!

No comments: