Thursday, January 03, 2013

கண்டகண்ட கோவிலெல்லாம்!

Photo: கண்டகண்ட கோவிலெல்லாம்
கையெடுத்துக் கும்பிடுவார்
காணாத கோவிலுக்குக்
காணிக்கை அனுப்பிவைத்தார்
இலையிலே சாதமுண்டால்
என்னதவம் என்றுசொல்லித்
தரையை அவர் மெழுகிச்
சாதங்கள் உண்டார்கள்
பாலடைக்குப் பால்கொடுப்பார்
பசித்தார் முகம்பார்ப்பார்
தவித்து வந்த பேர்களுக்குத்
தண்ணீர் கொடுப்பார்கள்
சாலைகள் போட்டு வைத்தார்
சத்திரங்கள் கட்டிவைத்தார்
என்ன தவம் பண்ணினாலும்
எதனாலும் பிள்ளை இல்லை!

நாட்டுப் பாடல்

நான் படித்த புத்தகங்கள் ஒன்றில் இந்தப் பாடலைப் படித்தேன்.  கேஷுவலாகப் படித்துக் கொண்டு வந்த என்னை, இறுதி வரிகள் சுழற்றிப் போட்டது.

பிள்ளைப் பேறு இல்லாத கொடுமை, இல்லாதவர்களுக்கும், இழந்தவர்களுக்கும் மட்டுமே புரியக்கூடிய சோக நிகழ்வு.  எல்லாம் வல்ல இறைவன் செயல்களில், புரியாத புதிர்களில் இதுவும் உண்டு. 

தத்து எடுத்துக்கொள்வதன் மூலம் தனிமையைப் போக்கிக் கொள்ள முடியும்.  இனிமையை ஊட்டிக் கொள்ள முடியும்.  எனக்குத் தெரிந்த தம்பதிகள் பெண் குழந்தை ஒன்றைத் தத்தெடுத்ததன் மூலம் புண்ணியத்தையும், வாழ்க்கையையும் தேடிக் கொண்டனர்.  இந்து மதத்தில் தத்து எடுப்பது புண்ணியச் செயல்களில் ஒன்றாகும்.

கதை ஒன்றைச் சொல்லி முடிக்கிறேன்.

சிவபெருமானும், உமையாளும் பூலோகத்தில் உலாவிக் கொண்டிருந்தபோது...

ஏழை வீட்டில் பத்து குழந்தைகள் சண்டை போட்டுக்கொண்டிருந்தன உணவிற்காக.  குழந்தைகளின் தாய் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள்.

ரெண்டு தெருக்கள் தள்ளி, பணக்கார வீட்டில்,தாய் தங்கத் தட்டில் உணவை வைத்து, காத்துக் கொண்டிருந்தாள்.  ‘இவ்வளவு நனறாகச் சமைத்து வைத்திருக்கிறேன், இதை உண்ண ஒரு குழந்தையை இல்லையே, சிவபெருமானே! ஏன் இந்த நிலை எனக்கு?’ எனத் துதித்து, மனம் நெகிழ்ந்து நின்றாள்.

உமையாள் ‘ஏன் இந்த லீலை?’ என்று சிவபெருமானிடம் கேட்டாள்.

‘தங்கத் தட்டில் சாப்பிடும் அளவிற்கான புண்ணிய ஆத்மா இன்னும் சொர்க்கத்திற்கு வரவில்லை.  அதனால்தான் கொடுப்பினை இல்லை’ என்றாராம் சிவபெருமான்!

எம் எஸ் சுப்புலக்ஷ்மி, எம் ஜி ஆர் வாழ்க்கையை உற்று நோக்கும்போது, இது உண்மைதானோ என்று எண்ணத் தோன்றுகிறது.
கண்டகண்ட கோவிலெல்லாம்
கையெடுத்துக் கும்பிடுவார்
காணாத கோவிலுக்குக்
காணிக்கை அனுப்பிவைத்தார்
இலையிலே சாதமுண்டால்
என்னதவம் என்றுசொல்லித்
தரையை அவர் மெழுகிச்
சாதங்கள் உண்டார்கள்
பாலடைக்குப் பால்கொடுப்பார்
பசித்தார் முகம்பார்ப்பார்
தவித்து வந்த பேர்களுக்குத்
தண்ணீர் கொடுப்பார்கள்
சாலைகள் போட்டு வைத்தார்
சத்திரங்கள் கட்டிவைத்தார்
என்ன தவம் பண்ணினாலும்
எதனாலும் பிள்ளை இல்லை!

-நாட்டுப் பாடல்

நான் படித்த புத்தகங்கள் ஒன்றில் இந்தப் பாடலைப் படித்தேன். கேஷுவலாகப் படித்துக் கொண்டு வந்த என்னை, இறுதி வரிகள் சுழற்றிப் போட்டது.

பிள்ளைப் பேறு இல்லாத கொடுமை, இல்லாதவர்களுக்கும், இழந்தவர்களுக்கும் மட்டுமே புரியக்கூடிய சோக நிகழ்வு. எல்லாம் வல்ல இறைவன் செயல்களில், புரியாத புதிர்களில் இதுவும் உண்டு.

தத்து எடுத்துக்கொள்வதன் மூலம் தனிமையைப் போக்கிக் கொள்ள முடியும். இனிமையை ஊட்டிக் கொள்ள முடியும். எனக்குத் தெரிந்த தம்பதிகள் பெண் குழந்தை ஒன்றைத் தத்தெடுத்ததன் மூலம் புண்ணியத்தையும், வாழ்க்கையையும் தேடிக் கொண்டனர். இந்து மதத்தில் தத்து எடுப்பது புண்ணியச் செயல்களில் ஒன்றாகும்.

கதை ஒன்றைச் சொல்லி முடிக்கிறேன்.

சிவபெருமானும், உமையாளும் பூலோகத்தில் உலாவிக் கொண்டிருந்தபோது...

ஏழை வீட்டில் பத்து குழந்தைகள் சண்டை போட்டுக்கொண்டிருந்தன உணவிற்காக. குழந்தைகளின் தாய் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள்.

ரெண்டு தெருக்கள் தள்ளி, பணக்கார வீட்டில்,தாய் தங்கத் தட்டில் உணவை வைத்து, காத்துக் கொண்டிருந்தாள். ‘இவ்வளவு நனறாகச் சமைத்து வைத்திருக்கிறேன், இதை உண்ண ஒரு குழந்தையை இல்லையே, சிவபெருமானே! ஏன் இந்த நிலை எனக்கு?’ எனத் துதித்து, மனம் நெகிழ்ந்து நின்றாள்.

உமையாள் ‘ஏன் இந்த லீலை?’ என்று சிவபெருமானிடம் கேட்டாள்.

‘தங்கத் தட்டில் சாப்பிடும் அளவிற்கான புண்ணிய ஆத்மா இன்னும் சொர்க்கத்திற்கு வரவில்லை. அதனால்தான் கொடுப்பினை இல்லை’ என்றாராம் சிவபெருமான்!

 எம் எஸ் சுப்புலக்ஷ்மி, எம் ஜி ஆர் வாழ்க்கையை உற்று நோக்கும்போது, இது உண்மைதானோ என்று எண்ணத் தோன்றுகிறது.

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!