Showing posts with label அசோகமித்திரன். Show all posts
Showing posts with label அசோகமித்திரன். Show all posts

Sunday, December 09, 2012

அம்மாவுக்கு ஒரு நாள்!



கவிதா வெளியீடான திரு அசோகமித்திரன் அவர்கள் எழுதிய ‘அம்மாவுக்கு ஒரு நாள்’ 27 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு (ரூபாய் 125).  இவ்வகைத் தொகுப்புகளை படிக்கும்போது வசதியுண்டு.  முதல் பக்கத்திலிருந்து துவங்க வேண்டிய அவசியமில்லை.  அட்டவணையைப் பார்த்துவிட்டு, நமக்குப் பிடித்த தலைப்புக் கதைகளைப் படிக்கலாம்.

ஆனால், அசோகமித்திரனை இதில் சேர்க்க முடியாது.  1950கள், 1960களில் எழுதியவைகளைப் படிக்கும்போது பிரமிப்பு ஏற்படுகிறது.  சில சிறுகதைகள் காலத்தை மீறிய சிந்தனைகள் எனும்போது மதிப்பு கூடுகிறது.