Showing posts with label குமுதம். Show all posts
Showing posts with label குமுதம். Show all posts

Saturday, March 19, 2011

குஷ்வந்த் சிங் - 90!


இறந்தவர்களை விமர்சித்து இரங்கல் எழுதுவது தவறில்லையா? அதை எதிர்த்து பேச அவர்கள்தான் வரப் போவதில்லையே?

(சிரித்தபடி) அவர்கள்தான் உங்களை கோர்ட்டுக்கு இழுக்கப் போவதில்லையே?! மரணம் எல்லோருக்கும் பொதுவானது. அதைக் கண்டு யாரும் பயப்பட வேண்டியதில்லை.

எனக்கு ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது. லண்டனில் இந்திய ஹை கமிஷன்-ல் நான் வேலை பார்த்தபோது மண்டி பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்திய ராணி இறந்து போனார். அவர் தன்னை எரியூட்டும் போது தான் புடவை அணிந்திருக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். கென்யாவைச் சேர்ந்த மயான பணியாளர்கள் என்னிடம் வந்து எப்படி புடவை கட்ட வேண்டும் என்று கேட்டார்கள். 'மன்னிக்கவும், எனக்கு புடவையை அவிழ்க்கத்தான் தெரியும்' என்று சொன்னேன். அவர்கள் கடுப்பாகி விட்டார்கள்! ஹை கமிஷனர் கிருஷ்ணன் மேனோனிடம் அதைப் பற்றி புகார் கூடச் சொன்னார்கள்!


இறந்த பிறகு எப்படி நினைக்கபடவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

விளைவுகளைப் பற்றிக் கவலையே படாமல் மனதில் பட்டதைப் பேசிய மனிதனாக!


எதை மிகவும் மிஸ் செய்வீர்கள்?

செக்ஸை. அதை ஏற்கனவே பல காலமாக மிஸ் செய்து விட்டேன். ஆனால், அதைப் பற்றி நான் கற்பனை செய்கிறேன்!


-குஷ்வந்த் சிங் பேட்டி, குமுதம் வார இதழ்

Thursday, June 10, 2010

வயது 75


உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? எல்லாரும் டாக்டர் ஆகணும், பைலட் ஆகணும்னு கற்பனை செஞ்சிருப்பாங்க. ஆனா நான் அப்படில்லாம் ஆசைப்படல. நான் என்ன ஆசைப்பட்டேன் தெரியுமா? மன நிறைவோடு இருக்கணும், யாருக்கும் எந்தக் கஷ்டமும் கொடுக்கக் கூடாது.

நான் இதுவரை வெளியில் சொன்னதில்லை. நான் எழுபத்தைந்து வயது வரைதான் வாழ வேண்டும்னு ஆசைப்படறேன். அந்த வாழ்க்கையை ரொம்ப மகிழ்ச்சியாக, பிறருக்கு கஷ்டங்களைக் கொடுக்காமல் வாழ வேண்டும், நம்மால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு மகிழ்ச்சியையும் பயனையும் தர வேண்டும் என்று நினைக்கிறேன். இப்போது அறுபது வயது. இனி வரும் வாழ்க்கையை மனநிறைவோடும் திருப்தியோடும் நிம்மதியுடன் வாழ வேண்டும்!

-சத்தமாய்ச் சிரித்துக்கொண்டே சொன்னவர்...
ரஜினி!

நன்றி: குமுதம்