Showing posts with label வாழ்த்து. Show all posts
Showing posts with label வாழ்த்து. Show all posts

Friday, June 04, 2010

க்ரீடிங்கஸ்!!

புனே வாசகர் திரு சேகர் எழுதியது

“பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்று நண்பன் ஸ்ரீநிவாசனுக்கு போன் மூலம் வாழ்த்தினேன். நேரம் காலை ஏழு. உன்னுடைய போன் வரும் என்றுதான் பாத்ரூம் கூட போகாமல் வெயிட் பண்ணிக்கொண்டு இருந்தேன் என்றான் சீனு. நண்பர்கள், உறவினர்கள் என்று சுமார் ஒரு 300 பேர்கள் லிஸ்ட் -- சுஜாதா சொல்வது போல் எதோ ஒரு பைல்-லில் கடவுள் படைத்த சின்ன சைஸ் but 1000 GB இக்கும் மேற்பட்ட HARD டிஸ்கில் இருந்து அந்த அந்த நாட்களில் FILE திறந்து மெமரி கார்டு மூலம் காலையில் நினைவு படுத்தும். இப்படி படுத்தாத நாட்களில் இரவு 8 மணிக்கு போன் வரும்... என்ன,.. இன்னிக்கி என் பர்த்டே. ... நீ வழக்கம் போல் விஷ் பண்ணுவேன்னு நாள் முழுக்க வெயிட் பண்ணினேன். இப்படி மறந்து போயிட்டயேன்னு கோபித்தவர்களும் உண்டு. இது தவிர, எப்படி உன்னால் கரெக்ட்டாக நினைவு வெச்சுண்டு டான்னு விஷ் பண்ண முடியறது...உன்னோட பர்த்டே என்னிக்குன்னு சொல்லு ... நானும் உன்னை போலவே உனக்கு விஷ் பண்ணனும் என்று சொல்லி.............மறந்தவர்களும் உண்டு. அது ஒரு பொருட்டு அல்ல.

80 களில் போஸ்ட் கார்டு மூலம் வாழ்த்து அனுப்பி 90 இல் வசதி வந்து க்ரீடிங்க்ஸ் வாங்கி வாழ்த்தி, அதன் பிறகு 2000 இல் வீட்டு மற்றும் ஆபீஸ் போன் வழியாக (STD யாக இருந்தால் !!!),....2005- ல் செல் போன்,ஸ..தற்போது SMS அனுப்பி இந்த பிறந்த நாள் வாழ்த்து.ஒரு ROUTINE என்றாலும்.. இந்த சிறிய வேலையான ஒரு போன் கால் வாழ்த்துதான் கொண்டாடுபவர்களின் மனதில் தான் எத்தனை மகிழ்ச்சி உண்டாக்குகிறது? இது பல வருடங்களாக நடப்பதால், அவர்கள் பிறந்த நாட்களை நான் மறந்தாலும், அவர்கள் அன்று என்னை மறப்பதில்லை.... உன்னிடமிருந்து போன் வரும்னு தெரியும் என்று சொல்லும்போதும் எனக்குள் ஒரு பெருமிதம்தான். எத்தனை சின்ன விஷயம்...? இரண்டு பேருக்குமே மகிழ்வை தருகிறது.