Showing posts with label ஒரு பக்கம். Show all posts
Showing posts with label ஒரு பக்கம். Show all posts

Sunday, August 15, 2010

சுதந்திர தின வாழ்த்துக்கள்!

வருடம் 1931 - செங்கற்பட்டு

பால் பிரண்டன் என்கிற ஆங்கிலேயர் பூமாலைகள், பழங்கள் முதலியவற்றை எடுத்துக் கொண்டு வேங்கடரமணியுடன், ஸ்வாமிகள் தங்கியிருந்த வீட்டிற்குள் நுழைந்தார்.

ஒரு மூலையில் மங்கலான விளக்கு எரிந்து கொண்டிருந்தது. விளக்கின் நிழலில் அதிக உயரமில்லாத காஞ்சி மாமுனி அவர்களின் உருவத்தைக் கண்டார். பிறகு தயக்கத்துடன் நெருங்கி தாம் கொண்டு வந்தவைகளை ஸ்வாமிகளின் முன்னிலையில் சமர்ப்பித்து வணங்கினார். பிறகு பிரண்டனும், ஸ்வாமிகளும் உரையாடத் துவங்கினர்.

உலகத்தின் தற்கால ராஜீய நிலைமையும், பொருளாதார நிலைமையும் எப்பொழுது சீர்படும் என்று தாங்கள் நினைக்கிறீர்கள்?

நிலைமை திருந்துவது என்பது சுலபமாகவும் வேகமாகவும் நடைபெறக்கூடியதல்ல. அது காலக்கிரமத்தில்தான் நடைபெற வேண்டும். பெரிய நாடுகள் ஒவ்வொரு ஆண்டிலும், மக்களை அழிக்கும் ஆயுதங்களை உற்பத்தி செய்வதில் ஏராளமான பொருளைச் செலவிட்டுக் கொண்டிருக்கும்போது எவ்விதம் உலகம் சீர்திருந்த முடியும்?

உலகில் ஆயுத ஒழிப்புப் பேச்சுகள் தற்போது நடைபெற்று வருகின்றனவே! அதனால் ஏதாவது பயன் ஏற்படுமா?

உங்கள் சண்டைக் கப்பல்களை உடைத்து எறிந்தாலும், இயந்திர பீரங்கிகளைத் துருப்பிடிக்கச் செய்தாலும் அவையொன்றும் சண்டையை நிறுத்தச் செய்யாது. கையில் கம்புகளை ஏந்தியாவது மக்கள் சண்டையிடுவார்கள்.

அப்படியானால் உலகம் சீரடைய என்னதான் வழி எனத் தாங்கள் எண்ணுகிறீர்கள்?

ஆன்மீகத் துறையில் ஒரு நாடு மற்றொரு நாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். அவ்விதமே முதலாளிகள் ஏழைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். இதனால்தான் ஒருவருக்கொருவர் நல்லெண்ணம் ஏற்படும். இவ்விதம் எண்ணம் ஏற்படுவதனால், உண்மையான சமாதானமும், தேசங்களுக்கு நன்மையும் உண்டாகும்.




தற்சமயம் உலகில் பெருகியிருக்கும் அமைதியின்மையையும், அக்கிரமங்களையும் கவனிக்கும்போது, கடவுள் மக்களைப்பற்றி சற்றும் கவலை கொள்ளாமல் இருக்கிறாரோ என நினைக்க வேண்டியிருக்கிறதல்லவா?

அவ்விதம் நினைப்பதற்கில்லை. பொறுமையுடன் இருப்பவன், எதிர்காலத்தை ஆழ்ந்த சிந்தனையுடன் பார்ப்பான். கடவுள் மனிதன் உருவத்திலேயே தோன்றி, ஒரு குறிப்பிட்ட காலத்தில் இந்தச் சிக்கல்களையெல்லாம் சீர்படுத்துவார். பெரிய சாம்ராஜ்யங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் சச்சரவுகளும், மக்களின் அதர்மச் செயல்களும், கோடிக்கணக்கான ஏழைகளின் கஷ்டங்களும், எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாகின்றனவோ, அப்போதுதான் ஒரு மாறுதலுக்கும் சந்தர்ப்பம் ஏற்படும். தெய்வீக சக்தி வாய்ந்த மனிதன் ஒருவன் உலகில் அப்பொழுது தோன்றுவான். இந்தக் கஷ்டங்களுக்கெல்லாம் அந்த மனிதன் மூலம் ஒரு முடிவு ஏற்படும். எந்த நாட்டிலும் இவ்வித மஹா புருஷன் தோன்று மக்களைக் காப்பாற்றலாம். பௌதிக சாஸ்திரத்தின் நியதியைப் போல, இந்த மாறுதல் உலகில் படிப்படியாக ஏற்படும். மக்களது நாத்திகக் கொள்கையாலும், தன்னை உணராததாலும் எவ்வளவு வேகமாகத் துன்பங்கள் பரவுகின்றனவோ, அவ்வளவு வேகமாகவே உலகத்தைக் காப்பாற்றவும் கடவுள் சக்தியுடன் இந்த மனிதன் தோன்றுவான்.

ஆகையால், நமது காலத்திலேயே கூட அத்தகைய மனிதன் அவதரிப்பான் எனத் தாங்கள் நினைக்கிறீர்களா?

ஆம். எங்கள் நாட்டிலேயே அவ்வித அவதார புருஷன் தோன்றலாம். இந்த அவதாரத்துக்கு இப்பொழுது அவசியமும் ஏற்பட்டுவிட்டது. உலகில் அஞ்ஞான இருளும் அதிகமாகப் பரவியிருக்கிறது.

உலக மக்கள் இப்பொழுது மிகவும் கேவலமான நிலையை அடைந்துவிட்டதாகத் தாங்கள் கருதுகிறீர்களா?

இல்லை. ஒவ்வொரு மனிதனது இதயத்திலும் ஆத்ம சக்தி நிறைந்திருக்கிறது. அந்தச் சக்தி அவனை முடிவில் கடவுளிடம் கொண்டு போய் விடுகிறது.

மேல்நாடுகளில் இப்பொழுது மனிதனது இதயத்தில் பிசாசு அல்லவோ புகுந்திருக்கிறது? அவர்கள் செயல்களும் அவ்விதம்தான் இருக்கின்றன. இவ்விஷயத்தில் தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

மனித வர்க்கத்தைக் குறை கூற வேண்டாம். தாம் பிறந்த சூழ்நிலைக்கேற்ப அவரகள் நடந்து கொள்கிறார்கள். உண்மையில் எவரும் அவ்வளவு மோசமானவர்களல்லர். சந்தர்ப்பங்களை ஒட்டியே அவர்கள் மோசமாக நடந்து கொள்ளும்படி நேரிடுகிறது. இவ்வுண்மை மேற்கு நாடுகளுக்கும் கிழக்கு நாடுகளுக்கும் சமமாகவே இருக்கிறது. உலகெல்லாம் ஓர் உயர்ந்த கொள்கை பரவ வேண்டும். இன்று நாம் பார்ப்பதும் அனுபவிப்பதும்தான் உண்மை என்னும் எண்ணத்தை மனிதன் மாற்றிக்கொண்டு, மனித சக்திக்கு மேல் ஒரு தெய்வ சக்தி இருக்கிறதென்பதை அவன் உணர வேண்டும். அப்பொழுதுதான் உலகத்தில் துன்பங்களுக்கெல்லாம் ஒரு முடிவு காணலாம்.

ஆகையால் தாங்கள் மனித உலக வாழ்க்கையிலேயே தெய்வீகத்தைப் புகுத்திவிடலாம் என்று நினைக்கிறீர்களா?

ஆம். அது சாத்தியமானது என்றே நான் கருதுகிறேன். அதுதான் எல்லோருக்கும் முடிவு காலத்தில் திருப்தியை அளிக்கும். அப்பயனும் எளிதில் மறைந்துவிடாது. தெய்வீக சக்தி வாய்ந்த மனிதர்கள் எவ்வளவுக்கெவ்வளவு உலகில் அதிகமாகத் தோன்றுகிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு உலகில் இந்த எண்ணம் சீக்கிரமாகப் பரவும். தெய்வத் தன்மை வாய்ந்த மகான்களைப் பாரததேச மக்கள் மதிப்புடன் நடத்தி வருகிறார்கள். அதுபோல் உலகில் மற்றெல்லாத் தேசங்களும் நடந்து, அந்த மஹான்கள் காட்டும் வழியைப் பின்பற்றுவார்களேயானால், உலகெல்லாம் அமைதியும் சிறப்பும் பெற்று விளங்கும் என்பதில் ஐயமில்லை. இப்பொழுது நன்மை தீமை இவை இரண்டும் உலக முழுவதும் பரவியிருக்கின்றன. இனிப் பிறக்கும் சந்ததியார் அவர்களின் (ஆசிய-ஐரோப்பிய) நாகரீகத்தின் உயரிய கொள்கைகளைக் கடைப்பிடித்து, சமுதாயத்தின் சீரிய மக்களாக விளங்குவார்கள் என நான் நம்புகிறேன்.

-பூஜ்யஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வரலாறு, பாகம் 1, அல்லயன்ஸ் பதிப்பகம்

Sunday, June 27, 2010

May THE ALMIGHTY illuminate!

சென்னை வாசகர் திரு ஜி ஆர் ஷங்கர் அவர்கள் எழுதியது.

நன்றி பருப்பு ஆசிரியர் அவர்களுக்கு, எனக்கும் கணினி தமிழ் கொடுத்ததற்காக....

PC உதவியுடன் நேரடியாகவே தமிழ் முதலில் எழுதுவதால் பக்தி ரசம்..... (இது எழுத எனக்கு Maturity காணாது...Just try அவ்வளவுதான்....)

சந்தியா வந்தனம் பற்றி ஹிந்து சாஸ்த்திரங்கள்ல நெறைய சொல்றாங்க... நான் இதை ஒழுங்கா பண்றது இல்ல... நம்மில் பலரும்....ஏன்னு கேட்டா, ஆயிரம் காரணங்கள் சொல்வோம்..... எதுவுமே இங்க compulsion இல்ல.. அதான்...

ஆனா, சந்தியா வந்தனம் - காயத்ரி மந்தரம் - சூர்ய நமஸ்காரம் -இப்படியே போயி...பல்வேறு மதங்கள்ல உள்ள அடிப்படை கோட்பாடுகளின் origin என்னானு பாத்தா....(or End of the thread) னு சொல்லலாம்.... அது உருவம் உள்ளதோ... அற்றதோ....பரம்பொருள்...ஆதி பகவன்...

உளன் எனில் உளன் அவன் உருவம் - இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன்


என்ன ok yaa...

இதுக்கும் விளக்கம் வேணுமா என்ன..."இருக்கார்னா அவர் உருவத்தோட...இல்லனா...உருவம் இல்லாம..." (Thanks to அமரர் சுஜாதா)

ஒம்: என்னும் ஒங்காரத்திலிருந்து துவங்கிய உலகம்.. னு சொல்றாங்க....(கொஞ்சம் colloquial-ஆ சொன்னா அண்ட வெளில உள்ள சப்தமான சத்தம்... ; அறிவியல் ரீதியா னா - அண்ட வெளியில உண்டான வெடிப்பு - பால் வீதி - சூரியன் - சிதரிய தீக் கோளங்கள்....னு.. போலாம்...)

இதுக்கு எல்லாம் காரணம் யார் னா?...அதுக்கு விடை என்னவா இருக்குமோ....அது...The obvious and The omnipresent...



என்னோட பக்தி எல்லாம் ரொம்ப சின்னது. எப்போதாவது தோணிணா கோவில். Exams, Interviews or Accounts not tallied in MIS னா கண்டிப்பா "விடல்" உண்டு. (நம்ம "Big street" - "முத்தவர்" க்கு). கொஞ்சம் ஜாஸ்தி பிரச்சனைனா போகுமிடம், ஏற்கனவே "பார்த்த"பெருமாள் கோவிலில் உள்ள அழகிய "சிங்கரை".

Just a simple management lesson தான். We feel that we switched our burden to him, our mind is free from worries and we think we may able to concentrate our regular activities during the course of "Time".

Time is a best medicine தான். Really.

எனது பள்ளி காலங்களில், தமிழ் பாட திட்டத்தின் செய்யுட் பகுதி - கடவுள் வாழ்த்தில் தொடங்கி திருக்குறள், நாலடியார், கம்பர், சீவக, சிலம்பு, வளை, மணி, குண்டலம், குறவஞ்சியர், பிள்ளை தமிழ், பாரதி, பாவேந்தர் என நீளும். (திரு.வி.க, மு.வரதர்... போன்றவர்களே கடைசில தான் வருவாங்க...). இப்போ எப்படின்னு தெரியல. (அரசியல் வாரிசுகளுக்கும், சினிமா காரங்களுக்கும் காலமல்லவா...)

எங்க School Assembly / இலக்கிய மன்றங்கள் - ல, கடவுள் வாழ்த்துனு அறிவிச்ச உடன் கிட்டத்தட்ட 1200 மாணாக்கர்களும் சேர்ந்து ஒண்ணா கத்துவோம். என்ன கத்தினோம்னு அப்போ தெரியாது. உலகம்னு ஆரம்பிச்சு வைகை எக்ஸ்பிரஸ் (அப்போ எல்லாம் இந்த train தான் ரொம்ப fast. அதான்..) மாதிரி போய் சரண் நாங்களேனு முடிப்போம்.

இந்த உலகங்கள் எல்லாத்தையும் படைச்சு, காத்து, அழிக்கற வேலைகளை - just like that - ஒரு முடிவில்லா விளையாட்டு மாதிரி செய்யற பரம்பொருளை வணங்கறேன்னு கம்பர் தன் ராமாயணத்துல முதல் பாடலா சொல்றாரு. அந்த பாட்டுதான் எங்க School ல கடவுள் வாழ்த்து.

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.


"டேய், ரொம்ப ஓவர்டா". "காயத்ரி மந்திரம்னு ஆரம்பிச்சு எதையோ எழுதிருக்கே!" -ன்னார் பருப்பு ஆசிரியர்.
"சார், இருங்க. அது என்னனா... காயத்ரி மந்திரத்தை இயற்றியவர் யார்?"
பருப்பு ஆசிரியர் "???"

Google search பண்ணாம, யார் கிட்டேயும் தொடர்பு கொள்ளாம நீங்க பருப்பு ஆசிரியர்-க்கு mail பண்ணுங்க. 1st right answer யாரோ அவரே IK -ன் FANTASTICAT ஆவார்!!

Tuesday, June 22, 2010

Sunday, June 20, 2010

கோடியில் ஓருவர் – 1

சாலையில் கடுமையான வெயிலில் நடக்கும் போதெல்லாம், ஓரமாய், அமைதியாய் நிழலைப் பொழியும் மரம் தாயின் மடிபோல் சுகமாய் அரவணைத்துக் கொள்ளும். ஒரு போதும் நினைத்துப் பார்ப்பதில்லை, இந்த மரத்திற்கு விதையிட்டு, நீரூற்றி வளர்த்தது யார், இந்த மரத்தின் வரலாறு என்னவாக இருக்கும் என்று.


மரம் பற்றிய ஆழ்ந்த சிந்தனையில்லாத துரதிருஷ்டம், அந்த இரண்டு நபர்களைச் சந்தித்த போது தகர்ந்து போனது. மரத்தின் மேல கணக்கிலடங்கா காதலும் வெறியும் மனதில் வேரூன்றியது... ஈரோடு மாவட்டம் இந்த இரண்டு நபர்களைப் பெற என்ன தவம் செய்ததோ!!!?

ஈரோடு அருகே உள்ள ஒரு மிகச் சிறிய நகரம் காஞ்சிக்கோவில். நகருக்குள் நுழைந்து “ஏனுங்க இந்த மரம் நடுவாரே” என்று கேட்க ஆரம்பிக்கும் போதே “அட நாகாராஜண்ணன கேக்றீங்களா, அந்த வழியாப் போங்க” என்று பெருமிதத்தோடும், நம்மை பார்ப்பதில் கொஞ்சம் வெட்கத்தோடும் வழி காட்டுகிறார்கள்.
தன்னுடைய வீட்டிலேயே கைத்தறி துண்டு நெசவு செய்வதை தொழிலாகக் கொண்டிருக்கிறார் 56 வயதான திரு. நாகராஜன் (04294-314752 / 94865-20483) அவர்கள். மிக மிகச் சாதாரணமான ஓட்டு வீடு. எங்களுக்கு நாற்காலிகளை எடுத்துப் போட்டு விட்டு மிகுந்த சினேகமாக சிரிக்கிறார்.

இந்த மாமனிதர் தனது 17வது வயதிலிருந்து கடந்த 39 வருடங்களாக விதைகளை தெரிவு செய்து, முளைக்க வைத்து, செடியாக்கி, இடம் தேடி நட்டு, பெரிதாகும் வரை நான்கைந்து முறை முள்வேலி அமைத்து, தினமும் நீர் ஊற்றி ஆடு, மாடு, மனிதர்களிடமிருந்து காப்பாற்றி இன்று வரை மரமாக வளர்த்தெடுத்திருப்பது ஒன்றல்ல இரண்டல்ல..... பத்தாயிரத்திற்கும் அதிகம்.

ஆரம்பத்தில் தன் செயல்களைக் கண்டு பைத்தியகாரன் என்று ஊரே சொன்னது எனச் சொல்லி சிரிக்கிறார். பள்ளிக்கூடம் அருகே தான் வளர்த்து ஆளாக்கிய மரத்தில் மாலை வேளைகளில் பல்லாயிரக்கணக்கான சிட்டுக் குருவிகள் கீச்கீச்சென கத்துகிறது என்று சொல்லும் போது அவரது முகம் மகிழ்ச்சியில் திழைக்கிறது.

பேச்சினிடையே, எவ்வளவோ மறுத்தும் சமையலறைக்குச் சென்று அரிவாள்மனையில் எலுமிச்சம் பழத்தை அரிந்து, சர்பத் தயாரித்துக்கொடுத்து உபசரிக்கிறார். மகள் வயிற்றுப் பேரன் இவரோடு வளர்கிறார், அதோடு அந்தச் சிறுவனும் தற்சமயம் நான்கு மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறார்.

தினமும் காலையிலும், மாலையிலும் மரம் நடுவதையும், அதனைப் பராமரிப்பதையும் வாடிக்கையாகக் கொண்டிருப்பவருக்கு வந்த சவால்கள் பல. சாலையோரம் நட்ட மரங்களை, விவசாய நிலத்தில் நிழலடிக்கிறது என்று விவசாயிகள் வெட்டிய சோகமும், சாலைப் பணியாளர்கள், மின்சார ஊழியர்கள் என அவ்வப்போது பல சில்லறை காரணங்களைச் சொல்லி மரங்களை சர்வசாதாரணமாக வெட்டி வீசுகிறார்கள் எனக்கூறும் போது அவருடைய மனதில் உணரும் வலி அப்படியே முகத்தில் வந்து படிகிறது. குறிப்பாக மரத்தின் கிளையை ஒரு நாள் சரக்குக்கும், பரோட்டாவிற்கும் விறகாக மாற்றும் அற்ப மனிதர்களும் இருக்கிறார்கள் என அறியும் போது நமக்கே மனது வெம்புகிறது.


ஒவ்வொரு மரத்தையும் தன் குழந்தையாகவே பாவிக்கிறார். ஆல், அரசன், புங்கை, வேம்பு, இச்சி, இலுப்பை என வகை வகையாய் எட்டு திசையிலும் வளர்த்தெடுத்திருக்கிறார். கடும் கோடையிலும் கூட மரக்கன்றுகளைச் சுற்றி தேங்காய் நார் தூவி, அருகில் உள்ள விவசாயிகளிடம் கெஞ்சிக் கூத்தாடி நீர் பெற்று தண்ணீர் தெளித்து செடிகளை காப்பாற்றியிருக்கிறார்.

காஞ்சிக்கோவில் அருகில் இருக்கும் ஒரு மலைக்கோவிலைச் சுற்றி விதவிதமான மரக்கன்றுகளை நடவு செய்து அந்த மலைமேல் இருக்கும் பாறைகளுக்கிடையே தேங்கியிருக்கும் தண்ணீரை குடத்தில் எடுத்து வந்து செடிகளுக்கு ஊற்றி, அதைக் காப்பாற்றி, இன்று அந்த மலையைச் சுற்றி அற்புதமாக மரங்களை வளர்த்து அந்த பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

மிகுந்த ஆச்சரியமாக, நெகிழ்ச்சியாக இருக்கிறது, இப்படி ஒரு மனிதர் இருக்க முடியுமா என்று.

Courtesy:
Mr Sowmyanarayanan / Mr JK

Monday, June 14, 2010

நிலவு!

புனே வாசகர் திரு சேகர் எழுதியது

வழக்கம் போல் கடந்த வாரமும் Sunday மாலை வீட்டிற்கு அருகில் உள்ள SOS VILLAGE-க்கு நண்பர்கள் சாய்ராம், பாலாஜி, அஜய் பரத், பாலாஜி-II அவர்களுடன் சென்றோம். Carrom, football விளையாடியது போக, சிறுவர்களுடன் garden-ல் அமர்ந்து பேசினோம். மிக்க அறிவாளிகள்.. sports, cinema பற்றி பேசி.. பத்தாம் வகுப்பு செல்ல இருக்கும் இரண்டு மாணவர்களுடன் மேற்கொண்டு என்ன செய்ய போகிறிர்கள்.... எல்லாம் மார்க் வருவதை பொறுத்து....என்று சொல்ல ..நண்பர்கள் 10 - 12 வகுப்பில் பெற்ற 95 - 98 % பற்றி சொல்ல.. சிறுவர்கள் முகத்தில் ஒரு உற்சாகம்.. அவ்வளவு மார்க் கிடைக்குமா என்றார்கள். முயற்சி செய்தால் நிச்சயம் என்றோம். Science group எடுத்து Engineering படித்து MBA செய்தால் வாழ்கையில் உயரலாம்.. நல்ல வேலை கிடைக்கும்.. .. வருமானம் என்ன வரும் என்று சொல்ல வாய் பிளந்தார்கள்..


நேரம் செல்ல, கடந்த 30 வருடங்களாக இயங்கி வரும் காப்பகத்தை சுற்றி காட்ட சிறுவர்கள் தயாரானார்கள். பலவிதமான பழ மரங்களை பார்த்தோம். நெல்லி மரத்தை உலுக்கி நெல்லிக்காய்களை தந்தார்கள். பாலாஜி, பலா மரத்தை முதன் முறையாக (சென்னையில் பிறந்து வளர்ந்தவர்) பார்த்து செல் போனில் படம் பிடித்து பலா சுளை விழுமா என்று மரத்தை ஒரு கை பார்த்தார். நகர் புறத்தில் வளர்ந்தவர்களுக்கு மாடு பால் தரும் என்று தெரியாது.. ஆரோக்யா பாக்கெட் மட்டுமே தெரியும்.

காப்பகத்தின் மதில் சுவருக்கு அப்பால் உள்ள எட்டு மாடி கட்டிடத்தை காட்டி தான் அங்கு பணிபுரிவதாக சாய்ராம் சொல்ல... சிறுவன், அங்கிள்.. நாளைக்கு அந்த ஆறாவது மாடி ஜன்னலை திறந்து எனக்கு கை காட்டுங்கள் ... நான் ஒரு ஜம்ப் செய்து இரண்டு நிமிடத்தில் அங்கு வந்துவிடுவேன் ... சரியா என்றான். அந்த சிறுவனை அணைத்து... இரண்டு நிமிடம் அல்ல ..... நீ அங்கு செல்ல குறைந்த பக்ஷம் ஒரு ஆறு வருடம் ஆகும்....அதற்க்கு பிறகு நீயும் சாய்ராம் அங்கிள் கூட சேர்ந்து அந்த ஆறாவது மாடியில் இருந்து இங்கு உள்ளவர்களுக்கு கை காட்டலாம் என்றேன். சிறுவனுக்கு புரிந்தது...நிலவை பார்ப்பது போல் அந்த கட்டிடத்தை பார்த்தான்.. ஆனால் முகத்தில் ஒரு வெறி... ஒரு உற்சாகம்... ஒரு சாதிப்போம்.... என்ற உணர்வு ஏற்பட்டதை கண்டோம். சூர்யா சொல்வது போல் கற்ப்போம்..கற்பிப்போம்...ஒரு பழ மரத்திற்கு விதை விதைத்த உணர்வுடன் வெளியே வந்தோம்.... நிலவு தெரிந்தது... பல வருடம் கழித்து பாலாஜி சாய்ராம் கூட பழங்கதை பேசுவோம்....!

Friday, June 04, 2010

க்ரீடிங்கஸ்!!

புனே வாசகர் திரு சேகர் எழுதியது

“பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்று நண்பன் ஸ்ரீநிவாசனுக்கு போன் மூலம் வாழ்த்தினேன். நேரம் காலை ஏழு. உன்னுடைய போன் வரும் என்றுதான் பாத்ரூம் கூட போகாமல் வெயிட் பண்ணிக்கொண்டு இருந்தேன் என்றான் சீனு. நண்பர்கள், உறவினர்கள் என்று சுமார் ஒரு 300 பேர்கள் லிஸ்ட் -- சுஜாதா சொல்வது போல் எதோ ஒரு பைல்-லில் கடவுள் படைத்த சின்ன சைஸ் but 1000 GB இக்கும் மேற்பட்ட HARD டிஸ்கில் இருந்து அந்த அந்த நாட்களில் FILE திறந்து மெமரி கார்டு மூலம் காலையில் நினைவு படுத்தும். இப்படி படுத்தாத நாட்களில் இரவு 8 மணிக்கு போன் வரும்... என்ன,.. இன்னிக்கி என் பர்த்டே. ... நீ வழக்கம் போல் விஷ் பண்ணுவேன்னு நாள் முழுக்க வெயிட் பண்ணினேன். இப்படி மறந்து போயிட்டயேன்னு கோபித்தவர்களும் உண்டு. இது தவிர, எப்படி உன்னால் கரெக்ட்டாக நினைவு வெச்சுண்டு டான்னு விஷ் பண்ண முடியறது...உன்னோட பர்த்டே என்னிக்குன்னு சொல்லு ... நானும் உன்னை போலவே உனக்கு விஷ் பண்ணனும் என்று சொல்லி.............மறந்தவர்களும் உண்டு. அது ஒரு பொருட்டு அல்ல.

80 களில் போஸ்ட் கார்டு மூலம் வாழ்த்து அனுப்பி 90 இல் வசதி வந்து க்ரீடிங்க்ஸ் வாங்கி வாழ்த்தி, அதன் பிறகு 2000 இல் வீட்டு மற்றும் ஆபீஸ் போன் வழியாக (STD யாக இருந்தால் !!!),....2005- ல் செல் போன்,ஸ..தற்போது SMS அனுப்பி இந்த பிறந்த நாள் வாழ்த்து.ஒரு ROUTINE என்றாலும்.. இந்த சிறிய வேலையான ஒரு போன் கால் வாழ்த்துதான் கொண்டாடுபவர்களின் மனதில் தான் எத்தனை மகிழ்ச்சி உண்டாக்குகிறது? இது பல வருடங்களாக நடப்பதால், அவர்கள் பிறந்த நாட்களை நான் மறந்தாலும், அவர்கள் அன்று என்னை மறப்பதில்லை.... உன்னிடமிருந்து போன் வரும்னு தெரியும் என்று சொல்லும்போதும் எனக்குள் ஒரு பெருமிதம்தான். எத்தனை சின்ன விஷயம்...? இரண்டு பேருக்குமே மகிழ்வை தருகிறது.