Showing posts with label ஜி ஆர் ஷங்கர். Show all posts
Showing posts with label ஜி ஆர் ஷங்கர். Show all posts

Sunday, February 03, 2013

விஸ்வரூப தரிசனம் - 2

விஸ்வரூப தரிசனம் - 1 -ஐத் தொடர்ந்து இதோ ...


விஸ்வரூபம் தடை நீக்கப்பட்டதால், படத்தைப் பற்றிய என் பார்வை.

 
கமலின் முந்தைய adventures வெற்றி விழா, குருதிப்புனல், அவ்வை சண்முகி, அர்னால்டின் True Lies, ரஜினியின் பாட்ஷா - சாயல் கண்டிப்பாய் உண்டு.

Friday, June 22, 2012

சகுனி!

பெரிய முன்குறிப்பு


என் பதிவுகளைப் படித்துவிட்டு அலசி ஆராய்பவர்களில் சென்னை வாசகர் திரு ஜி ஆர் ஷங்கர் அவர்களுக்குத் தனி இடம் உண்டு. 


முன்னிரவு நேரங்களில் துவங்கி, நள்ளிரவு வரை நீளும் உரையாடல் - நேற்று சகுனி பக்கம் திரும்பியது.  ’என்ன காலை ஏழு மணி ஷோவா?’ என்று நக்கலடித்தார்.  ‘அதெல்லாம் இல்லை ஷங்கர், படத்தைப் பத்தி எனக்கு சந்தேகம் இருக்கு, ஓடுமா?’ என்றேன்.


‘தமிழ் சினிமா தேக்க நிலைல இருக்கு ஸார்.  பொங்கல் ரீலீஸான வேட்டை/நண்பனுக்கு அப்புறமா வந்த அரவான் / முப்போழுதும் உன் கற்பனைகள் / காதலில் சொதப்புவது எப்படி / 3 படங்கள் அவ்வளவு சொல்லிக்கும்படியா இல்லை.  ஓ கே ஓ கே ஹிட் எல்லாருக்கும் ஆச்சரியம்.  கலகலப்பு கலகலத்துப் போச்சி.  பெரிய ஹீரோக்களோட படம் எதுவும் வெளி வரலை.  இடைவெளி விழுந்திருச்சி.  அப்படியிருக்கும்போது இந்தப் படம் ரிலீஸாவுது.  சாந்தி, உட்லண்ட்ஸ், சத்யம்/சாந்தம், உதயம், கமலா, அபிராமின்னு சகட்டு மேனிக்கு ரிலீஸ் பண்ணி, முதல் மூணு நாள் ஹவுஸ் ஃபுல் போட்டு பணம் பாத்துடறாங்க.  அதனால ஓடும்னு நெனக்கிறேன்’ என்றார்.


விடாமல் ‘நாளைக்கு போயிருவீங்கல்ல?’ என்றார் மீண்டும்!  நானும் விடாமல் ‘போனா சொல்றேன்!’


இனி…என் பார்வை!

’ஒரு நாள்’ முதல்வன் சாத்தியமாகும்போது, ’ஒரு நாள்’ கிங் மேக்கர் சாத்தியம்தானே?! – இவ்வளவுதான் சகுனி!


படத்தின் சுவாரஸ்யமே பாத்திரப் படைப்புகளும், தெரிவு செய்யப்பட்ட நடிகர்களும்தான், பேசப்படும் வசனங்களும்.


ப்ரகாஷ் ராஜ், ராதிகா, நாஸர், சித்ரா லட்சுமணன், மனோபாலா, கிரண், கோட்டா ராவ் என்று பார்த்துப் பார்த்துப் போட்டு, ரசிக்கும்படி செய்திருக்கிறார்கள்.  இவர்களோடு கார்த்தி/சந்தானம் செய்யும் அலம்பல்ஸில் தியேட்டர் அதிருகிறது.


கார்த்தியை பார்க்கும்போது பக்கத்து வீட்டு பையனைப் பார்த்த ஃபீலிங்ஸ்.  முக பாவனைகள் மட்டும் வைத்து மனிதர் செய்யும் அதகளம், அமர்க்களம்!

சந்தானம் காமெடியால் முதல் பாதி பிழைக்கிறது.  காட்சிக்குக் காட்சிக்கு வைக்கும் சரவெடியில் சிரிப்பு மலர்ந்து, வயிறு குலுங்கி…hats off சந்தானம்!


இந்த மாதிரி படத்துக்கு ஹீரோயின் தேவைதானா?  ஸ்ரீதேவி என்றெல்லாம் பெயர் வைத்து, அம்மாவாக ரோஜாவைப் பிடித்து இருவரையும் ரொம்பவே வீணடித்திருக்கிறார்கள்.


ஜி வி ப்ரகாஷ் இசையாம்…பாடல்கள் ’நீங்கள் கேட்டவை’தான்… ’என்ன பாட்டாயிருக்கும்?’ என்று மரமண்டையைத் தட்டுவதற்குள் பாட்டை முடித்த பெருமை மட்டும் ஜி வி-க்கு!


டூயட் பாட்டுக்கள் எடுக்கப்பட்ட விதம் ஒளிப்பதிவை வியக்க வைக்கிறது.  தெகிரியமாக தமிழக அரசியலைப் படம் பிடித்தமைக்காக இயக்குநரைப் பாராட்டலாம். 


ரொம்ப கடுப்பாக இருக்கிறதா?  ஜாலியான, மணக்க மணக்க மசாலா பதத்தில் ‘சகுனி’ ரெடி! 

Saturday, March 31, 2012

ஜி ஆர் ஷங்கரின் பார்வையில் ‘3’

என் நண்பர் திரு ஜி ஆர் ஷங்கர் அவர்கள் எழுதியது.



1. "«ÁÄ¡À¡ø     ¿ÊÕó¾¡ À¡÷ì¸Ïõ§À..."

 
"«Åí¸ Media - Ä Hype create Àñ½¢É¡ ±ýÉ... ´ñϧÁ þøÄ¡¾ À¼í¸ÙìÌ  ±øÄ¡õ Hype create ÀñÏõ §À¡Ð þÅí¸ Àñ½றÐ ´ñÏõ ¾ôÒ þøÄ... þô§À¡ trend «ôÀÊ... ÒÊì¸ÄÉ¡ Å¢ðÎÕ..."

"±ÉìÌ ¦Àâ Stars - §Å¡¼ šâ͸û À¼õ À¡÷ì¸ ¬÷ÅÁ¡ þÕìÌ... ¬É¡ ¦ÀÕº¡
±¾¢÷À¡÷ôÒ þøÄ... ¬÷Åõ, ±¾¢÷À¡÷ôÒ Å¢ò¾¢Â¡ºõ ¦¾Ã¢ÔÁ¡ ¯ÉìÌ... «Û‰¸¡, ¾ÁýÉ¡, «ÁÄ¡ - É¡ ¬÷ÅÁ¡ §À¡ö À¡÷ப்§À... §¸¡îº¨¼Â¡ý, Å¢ŠÅåÀõ - É¡ ±¾¢÷À¡÷ô§À.."

3 ÀüÈ¢,  3 நாட்¸Ç¡¸ பருப்பு ¬º¢Ã¢ÂÕìÌõ ±ÉìÌõ ¿¼ó¾ ¨¸§Àº¢ ¯¨Ã¡¼ø¸Ç¢ø ¿¡ý Å¡í¸¢Â ¾¢ðÎì¸û.


2.      "FB" - ³ ¦À¡றுò¾ÁðÊø ¿¡ý «¾¢ø active member ¸¢¨¼Â¡Ð. ±ô¦À¡Ø§¾Ûõ ¦ºýÚ À¡÷ôÀÐ ¯ñÎ. ¸¼ó¾ ¦ÅûÇ¢ÂýÚ officially personal mail ´ý¨È À¡÷ôÀ¾ü¸¡¸ Gmail ¦ºý§Èý. பருப்பு ¬º¢Ã¢Ââý "±Ð ºÃ¢.." FB update ¸ñÎ... FB Ôû ѨÆó§¾ý.

இதில் எது சரி?

பிரச்னை – பிரச்சனை
முஸ்லிம் – முஸ்லீம்
நிலமை – நிலைமை
ஆன்மீகம் – ஆன்மிகம்
வினாடி – விநாடி

"±Ð ºÃ¢.. Å¢¿¡Ê, À¢ÃÉ, ÓŠÄ¢õ" Message ±ÉìÌ ºÃ¢Â¡¸ Òâ¡Áø... "þó¾¢Â¡Å¢ø ÓŠÄ£õ¸Ç¢ý «ÏÌÓ¨È - ´ù¦Å¡Õ ŢɡÊÔõ ÓŠÄ£õ¸Ç¡ø À¢ÃÉ...!!!" ±ýÚ ±É째 ¯Ã¢Â...Sensational visuallisation about Muslim community by the Indian politcal media world....§Â¡º¢òÐ ¯¼§É ¬º¢Ã¢ÂÕìÌ ¨¸§Àº¢§Éý. - "«¼ôÀ¡Å¢, ¦À¡Ð ¾Á¢Æ¢ø ±ØÐõ §À¡Ð "þ¾¢ø ±Ð ºÃ¢?" - Û ¾¡§É §¸ðÊÕó§¾ý" - É¡÷.

¿¡ý ¯¼§É ±ÉÐ àÃòÐ ¯ÈÅ¢É÷, À¢ÃÀÄ ±Øò¾¡Ç÷ "¯Â÷¾¢Õ. ¾¢Õôâ÷ ¸¢Õ‰½ý" «Å÷¸¨Ç ¦¾¡¼÷Ò ¦¸¡ñÎ ºÃ¢Â¡¸ ±ØÐÅÐ ÀüȢ ¿ÁÐ ºó§¾¸í¸¨Ç §¸ðÎ ¦¾Ã¢óЦ¸¡ñ§¼ý. «Å÷ ÜÈ¢ÂÐ...
À¢Ãî¨É - ºÁЏ¢Õ¾ Å¡÷ò¨¾Â¢Ä¢ÕóÐ À¢È츢ÈÐ.
À¢Ãî¨É / À¢Ã¨É þÃñÎõ ºÃ¢.
À¢Ãîº¨É ºÃ¢ÂøÄ

´Õ ÓŠÄ¢õ ±ùÅÇ×¾¡ý Slim - ¬¸ þÕó¾¡Öõ ÓŠÄ£õ ¾¡ý.
¿¢¨Ä¨Á ±ýÀ§¾ ºÃ¢. ¾Á¢ú ¦Á¸¡ ¦¾¡¼÷¸Ç¢ø ÅÕõ ¸¾¡À¡ò¾¢Ãõ ¦º¡øÅÐ "¿¢Ä¨Á     ±ýÉý§É Òâ¡Á §Àº¢ð§¼...."

¬ýÁ¢¸õ ±ýÀÐ ¾¡ý ¦Ã¡õÀ ºÃ¢Â¡ÉÐ. ¬É¡ þô§À¡Ð ÀÃÅÄ¡¸ ¬ýÁ£¸õ ±ýÀ¨¾Ôõ accept Àñ½¢ì ¦¸¡û¸¢È¡÷¸û.

"Å¢" - ³ «ÎòÐ ÅÕõ Å¡÷ò¨¾ «¨¾¦Â¡ò¾ ¦À¡Õ¨Çò ¾Õ§Á¡ɡø "¿" §À¡¼Ä¡    õ. þø¨Ä¦ÂÉ¢ø "É" ¾¡ý. ¯¾¡Ã½Á¡¸ "¿¡Â¸÷" - §Áý¨Á ¦À¡Õó¾¢ÂÅ÷ ±ýÀ¾¡ø "Å¢¿¡Â¸÷" ÅÕõ. ¬É¡ø "¿¡Ê" ±ýÀÐ "¦¿¡Ê" «øÄ ±ýÀ¾¡ø "ŢɡÊ" - §Â ºÃ¢.

¿ýÈ¢ : ¾¢Õôâ÷ ¸¢Õ‰½ý «Å÷¸û

´ðÎÉ÷, ¿¼òÐÉ÷ - ±ýÀ¨Å¸Ç¢ø ¸¨¼º¢Â¢ø ÅÕõ "É" ºÃ¢Â¡? «øÄÐ "¿" §À¡¼§ÅñÎÁ¡? "É" ±ýÀ§¾ ºÃ¢Â¡ÉÐ ±ýÚ பருப்பு ¬º¢Ã¢ÂÕìÌ Á¢ý «ïºø «ÛôÒõ Ó¾ø «¾¢÷‰¼º¡Ä¢ìÌ Apr - 3 ¬õ §¾¾¢ - 3 ÅÐ ¸¡ðº¢ - ãýÚ 3 À¼ ticket -¸û «ÛôÀ¢ ¨Åì¸ôÀÎõ.


3.     «¾¢¸¡¨Ä «ÄÈ¢ÂÐ ¨¸§Àº¢, ±Îò¾¾¢ø ÓÃÇ¢ «Å÷¸û (àÃòÐ ¯ÈÅ¢É÷-¿ñÀ÷, §¸ÃÇò¨¾ º¡÷ó¾Å÷ - ¦ºý¨É¢ø À½¢!)
"§¼ö, Å£ðÎÄ wife, ÌÆó¨¾¸û ±ø§Ä¡Õõ °ÕìÌ §À¡ö þÕì¸¡í¸¼¡...Sunday Morning 9.45 show - ìÌ "Moonu" À¼ Ê즸ð Abhirami 7 star - Ä book Àñ½¢Â¢Õ째ý. 9.15 ìÌ ¾¢§Âð¼÷ ÅóÐÎ" - É¡ý. "«À¢Ã¡Á¢ ¾ûǢ¢Õì̼¡... þí¸ ºòÂõ, §¾Å¢ - Ä þø¨Ä¡" ±ýÈ ±ÉÐ Å¡÷ò¨¾¨Â Á¾¢ì¸¡Áø ¨¸§Àº¢¨Â ¸ð ¦ºö¾¡ý.

ºÃ¢. 3 -ý Å¢Á÷ºÉõ - 3 Åâ¸Ç¢ø
1.
2.
3.

À¢ý ÌÈ¢ôÒ : ¸ðΨà 3 - ý ãýÈ¡ÅÐ ¸¨¼º¢ À¡¸õ - 3 À¼ò¾¢ý ¬º¢Ã¢ÂÃÐ  ¿£ñ¼ பார்வைய¡¸ Å¢¨ÃÅ¢ø ¦ÅÇ¢ÅÕõ.

Saturday, November 05, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 32

பத்மராஜன் என்பவரைப் பற்றி இன்றைய இளைஞர்களுக்கு தெரிய அதிகம் வாய்ப்பில்லை. ஆனால், அன்றைய இளைஞர்களுக்கு இப்படித்தான் தெரியும்!


இவர் திரைக்கதை எழுதிய ஐ.வி. சசி இயக்கிய இதா இவிடே வரு,வாடகைக்கு ஒரு இதயம், பரதன் இயக்கத்தில் உருவான ரதி நிர்வேதம், மற்றும் சத்திரத்தில் ஒரு ராத்திரி, தகரா, போன்ற படங்கள் மலையாள கவர்ச்சிபடங்களாக வெளியாகி தமிழகத்தில் வெற்றிகரமாக ஒடின. ஆனால் அந்தப் படங்களைக் காண வந்தவர்களில் எத்தனை பேர் அதை இயக்கியவர் பரதன் எழுதியவர் பத்மராஜன் என்று தெரிந்திருப்பார்கள். படம் பார்க்க வந்தவர்களின் நோக்கம் வேறு இல்லையா?

பத்மராஜன், பரதன் மீது படிந்துள்ள இந்தக் கவர்ச்சி படிமம் அவர்களாலே விரும்பி உண்டாக்கி கொண்டவை. அதன்முன்பு வரை மெலோடிராமா மட்டுமே சினிமா என்று நம்பி வந்த மக்களை தன் பக்கம் கவனம் கொள்ள செய்ய வேண்டும் என்பதற்காகவே இது போன்ற பாலியல் சார்ந்த படங்களை உருவாக்கினார்கள் என்று என் மலையாள நண்பர்கள் சொல்கிறார்கள். இந்த படங்களின் வருகை மலையாள சினிமாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது நிஜமே.

என்று துவங்கிய திரு எஸ் ராமகிருஷ்ணன் அடுத்த பத்தியில் பத்மராஜனை அடையாளம் காட்டி விடுகிறார்.

ஆனால் இவை மட்டுமே பரதன் பத்மராஜனின் அடையாளங்கள் இல்லை. அவர்கள் இருவருமே சிறந்த இயக்குனர்களாக பல முக்கிய படங்களை உருவாக்கியிருக்கிறார்கள். அது போலவே பத்மராஜனின் முக்கிய திரைக்கதைகளை சிறப்பாக படமாக்கியது பரதனே.அவர்கள் கூட்டணி மலையாள சினிமாவில் புதிய அலையை உருவாக்கியது.

பத்மராஜன் சிறந்த எழுத்தாளர். சாஹித்ய அகாடெமி விருது பெற்றவர். திருச்சூர் வானொலி நிலையத்தில் பணி புரிந்தவர். சினிமாவின் மீது கொண்ட தீராக் காதலின் விளைவாய், பணியிலிருந்து விலகி, திரைக்கதை ஆசிரியராய் அறிமுகமாகி, இயக்குனராய் தன்னை உயர்த்திக்கொண்டு மலையாள சினிமாவை புரட்டிப் போட்டவர். புதிய கோண இயக்குனர்களான சிபி மலையில், பரதன், சத்யன் அந்திக்காடு, லோஹிதா தாஸ் போன்றோருக்கு முன்னோடி. நாற்பதுகளில் பத்மராஜன் மறைந்தது மலையாள சினிமாவின் துரதிர்ஷ்டம்.

பத்மராஜன் இயக்கத்தில் பெரிதும் பேசப்பட்ட படங்களில் ஒன்று 'மூன்னாம் பக்கம்' (மூன்றாவது நாள்). திலகன், ஜெயராம், சோமன் நடித்து, இசைஞானி அவர்கள் இசையில் 1988-ல் வெளிவந்து, காமர்ஷியலாயும் வெற்றி பெற்ற படம்.


படத்தைப் பற்றி விரிவாய் எழுதுவதாய் திரு ஜி ஆர் ஷங்கர் உறுதி அளித்திருப்பதால் மூன்று விசேஷங்களைப் பற்றி மட்டும்..

இசைஞானி - பாயசத்தின் முந்திரி, திராக்ஷை, ஏலக்காய் போல இசைஞானி அவர்களின் இசை படம் முழுவதும் சுவையாய் இருக்கிறது. சந்தோசம், சோகம், ஏக்கம், பரிதவிப்பு, பதைபபு, நகைச்சுவை, களியாட்டம் என மாஸ்ட்ரோ இசை / பின்னணி இசையில் புகுந்து விளையாடியிருக்கிறார். சாம்பிள் பாட்டு இதோ


திலகன் - திலகனை 'சத்ரியன்' அரசியல்வாதியாய், 'சாணக்யன்' முதல் அமைச்சராய் மட்டுமே தமிழ் சினிமா அறிந்திருக்கும். முதியவராய் அறிமுகமாகி, மகன் இழந்த சோகத்தை மறைத்துக்கொண்டு, பேரன் மேல் பாசத்தைப் பொழிந்து, அவன் நண்பர்களுடன் சகஜமாய் உரையாடி, இழப்பை ஏற்றுக்கொண்டு / கொள்ள முடியாமல் தத்தளித்து...திலகன் நடிப்பு அமர்க்களம் / அசத்தல்.

பத்மராஜன் - கதை / திரைக்கதை-ல் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாது இயக்கி இருப்பது பேரும் பலம். இறுதி அரை மணியில் சோகம் கப்பிக் கிடந்தாலும் நம்மால் திலகன் குடும்பத்தின் துக்கத்தை உணர முடிகிறது. 'பலிச்சோறு' கொடுக்கும் கடோசிக் காட்சி 'சொடேர்' என நம்மை அறைந்து, உறைய வைக்கிறது.

'மூன்னாம் பக்கம்' தென்றலாய் தாலாட்டும், புயலாய் புரட்டி எடுக்கும், பாசத்தை உணர்ந்த / இழப்பை அனுபவித்த ஒவ்வொருவருக்கும் எளிதாய் இணைத்துக் கொள்ளவும் முடியும்.


இவர்கள் இல்லாமல் என்னால் இதை எழுதி இருக்க முடியாது....

திரு ஜி ஆர் ஷங்கர் - பத்மராஜனை அறிமுகப்படுத்தியதற்கு
திரு எஸ் ராமகிருஷ்ணன் - பத்மராஜனைப் பற்றிய சுவாரஸ்யப் பதிவிற்கு
விக்கி - பத்மராஜன், மூன்னாம் பக்கம் பற்றிய விவரங்களுக்கு

Tuesday, June 07, 2011

பரதேசியின் டைரிக்குறிப்பு - 3

அமெரிக்கா வந்தபின்பு, நண்பர்களுடன் தொலைபேசுவது சற்றுக் குறைந்து போனதில் எனக்கு வருத்தமதான். அதுவும், சென்னை வாசகர் திரு ஜி ஆர் ஷங்கர் அவர்களுடன் பேச இயலாததில்....

ஜி ஆர் ஷங்கர் அவர்கள் பற்றி ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். மனிதருடன் பேசுவது என்பது அர்த்த ராத்திரியில் மட்டுமே நடக்கக்கூடிய விஷயம். ஒவ்வொரு மாதத்தின் பின்பாதியில்...அதுவும் வார நாட்களில், சுதந்திர இரவுப் பறவையாய் அவர் திரிந்து கொண்டிருக்கும் தருணங்களில் அரசியல் / சினிமா/ வாழ்க்கை போன்ற பலவற்றை என்னோடு பகிர்ந்து கொள்வது அவருக்குப் பிடித்த ஒன்று. எப்போதும் அவர் செலவில் என்னை அழைப்பதின் நோக்கமும் அதுதான்.

வாய்ப்பு சென்ற சனிக்கிழமை கிடைத்ததில்....மலையாளத் திரைப்படங்களைப் பற்றிய பேச்சில்...'பார்த்தே தீர வேண்டிய' சில படங்களைப் பற்றிக் குறிப்பிட்டார். அதில் ஒன்று 'காக்டெய்ல்' (மலையாளம், 2010)! 'விக்கி'யில் மேய்ந்த போது, படம் 'critical acclaim' வகையாம்! (தெரிந்த இன்னொரு முக்கியமான விவரத்தைக் கடோசியில் குறிப்பிடுகிறேன்).

இரண்டு மணித்துளிக்குப் பத்து நிமிடங்கள் குறைவாக ஓடும் காக்டெய்ல் 'த்ரில்லர்'க்குரிய எல்லா அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு படம்.



அழகான மனைவி பார்வதி (ஸம்வ்ருதா) , அருமையான பெண் குழந்தை அம்மு, செல்வாக்குள்ள பதவி என வாழ்ந்து வரும் ரவி (அனூப் மேனன்)க்குத் திடீரென சோதனை வருகிறது. அதுவும் எப்படி? பெண்ணைப் பொறுப்பாக 'ஆயா'விடம் ஒப்படைத்து விட்டு, மனைவியுடன் ஊருக்குக் காரில் போகும்போது வெங்கடேஷ் (ஜெயசூர்யா) என்பவரை வழியில் ஏற்றிக்கொண்டதால்!

கார் பழுதடைந்து விட்டதால் 'லிஃப்ட்' கேட்டு ஏறிக்கொள்ளும் வெங்கடேஷ் துப்பாக்கி / வீட்டில் அம்முவை மிரட்டல் முனையில் வைத்து இருவரையும் பாடாய்ப் படுத்துகிறான். கைப்பேசி / மணிபர்ஸ்-களைப் பிடுங்கிக்கொளவது, கைக்கெடியாரத்தை அடகு வைக்கச் சொல்வது, வங்கியிலிருந்து 25 லட்சங்களைக் கேட்டு வாங்கி எரித்து ஏரியில் போடுவது, ரவியின் அலுவலக ரகசியங்களை 'போட்டி கம்பெனிக்கு' கொடுக்க வைப்பது, 'பலான' பார்ட்டியை ரவியை விட்டு ஏற்பாடு செய்யச் சொல்வது, மனைவி பார்வதியை ரவியின் முன்னிலையில்...ஒடுங்கிப் போகும் ரவிக்கு எழும் கேள்வியெல்லாம் 'ஏன்? ஏன்? ஏன்?'

முடிச்சு அவிழும்போது, நமக்கு வியப்பாயிருக்கிறது. 'ரவிக்கு இவனை எப்படித் தெரியாமல் போயிருந்திருக்கும்?' கேள்வியும் எழுகிறது! காக்டெய்ல் என்கிற தலைப்பின் அர்த்தமும் புரிகிறது (நண்பர் ஜி ஆர் ஷங்கர் அவர்களுக்குப் புரியாததில் எனக்கு ஆச்சர்யம்தான்).

ஜெயசூர்யா (வசூல் ராஜா வயிற்றுவலிக்காரர்!) வந்தபின்-தான் விறுவிறுப்பு. சாதாரண கண்ணாடி, மீசை, trimmed தாடியுடன் அவரைப் பார்க்கும்போது...அடடா! ஒரு வில்லன் இவ்வளவு அமைதியாகவும், அழுத்தமாகவும் இருப்பாரா? ('கனா கண்டேன்' ப்ருத்விராஜ் போல!)

துணைவி பார்வதியாய் வரும் ஸம்வ்ருதா சுனில்...ஆஹா...ஓஹோ...தமிழ் சினிமா! ஏன் இன்னும் விட்டு வைத்திருக்கிறீர்கள்?! (ஹி! ஹி!)




15-20 நிமிடங்களுப்ப்பின், ஒரே நாளின் நிகழ்வாதலால ஒளிப்பதிவும் இயல்பாய் ஒத்துழைத்திருக்கிறது. பாடல்களில் 'நீயாம் தணலினு தாழே' superb!

அங்குமிங்கும் நகராமல் கதையை கொண்டு சென்றமைக்கு

திரைக்கதையாளர் (ஷ்யாம் மேனன்),
வசனகர்த்தா (அனூப் மேனன்),
இயக்குநர் (அருண் குமார்)

நன்றி சொல்லியே ஆக வேண்டும்....யாருக்கு?

'Butterfly on a Wheel' எனும் கனடியன் படத்திற்கு!

Sunday, February 06, 2011

யுத்தம் செய்!

இதை எழுதியவர் சென்னை வாசகர், திரு ஜி ஆர் ஷங்கர் அவர்கள்

இயக்கம் : மிஷ்கின்

நடிப்பு : Y.Gee. மகேந்திரா, ஜெய பிரகாஷ், சேரன், மஞ்சள் புடவைக்காக நீத்து!

PLOT : பழி தீர்த்தலும், துப்பு துலக்குதலும்


MINUS : ஈசன் மற்றும் அஞ்சாதே சாயல் மிக மெதுவான / வறட்டுத்தனமான (slow moving / dry) subject, யூகிக்கக் கூடிய திருப்பங்களும், முடிவும்


PLUS : இசை, கேமிரா மற்றும் காதல், டூயட், காமெடி ட்ராக் என மாமூல் மசாலா இல்லாதிருத்தல்

TID BITS : பாடல் காட்சியில் அமீர், நீண்ட இடைவெளிக்கு பின் செல்வா, மற்றும் காணாமல் போன 'சாரு' ஸாரு!

பார்வை : கண்டிப்பாக குழந்தைகள், பெண்கள் மற்றும் கேளிக்கை பட
விரும்பிகளுக்கானது அல்ல.

Friday, December 31, 2010

திரை 2010 - ஒரு வெகு ஜன பார்வை - 3

சென்னை வாசகர் திரு ஜி ஆர் ஷங்கர் அவர்கள் எழுதியது.

தமிழ்த் திரை!

10. நந்தலாலா - Average / Critic / Ilayaraja
9. மைனா - Hit - Critic / Media / Script
8. அங்காடி தெரு - Hit - Critic / Media / Script
7. பாஸ் (எ) பாஸ்கரன் - Hit - Comedy
6. களவாணி - Hit - Comedy
5. பையா - Hit - Media / Music / Action / Pair
4. மதராஸ பட்டிணம் - Above Average / Old Chennai /Music
3. நான் மகான் அல்ல - Super Hit - Media / Music/ Action / Pair
2. VTV - Super Hit - Media / ARR/ Simbu and Trisha in a differnet outfit
1. சிங்கம் - Super Hit - Media / Racy narration / Surya

* கடந்த மூன்று ஆண்டுகளாக சீரான வளர்ச்சியாக இருந்த 'அந்த மூன்று "நிதி" நிறுவனங்கள்' இந்த வருடம் மிக அதிகப்படியாகவே திரை வர்த்தகத்தை ஆக்கிரமித்து விட்டனர். ஏறக்குறைய 60 - 70% வியாபாரம் இவர்கள் குழுமங்கள் மூலமாக நடத்தப்பட்டிருக்கலாம்.

* முன்னணியின் மூத்த சூப்பர்கள் இருவரும் அவர்களிடம் அடைக்கலமாக, அடுத்த தலைமுறை 'இருவரோ' வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பகையுணர்விற்கே ஆளான சம்பவங்களும் நடந்தன.

* இவர்களது ஆக்கிரமிப்பால் சாதாரண படங்கள், முடிக்கப்பட்டு Release க்கு Theaters கிடைக்காமலிருக்கும் படங்கள், என கிட்டத்தட்ட 50 - 60 படங்களாவது இருக்கும். இவைகளில் பெரிய ஹீரோக்கள் படங்களும் அடங்கும். 2011 க்கு பிறகாவது இந்நிலை மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

* Best Critic பட வரிசையில் மைனா, அங்காடி தெரு அடைந்த பெருமை ஏனோ நந்தலாலா விற்கு இல்லை. Media மத்தியில் இயக்குனர் நற்பெயர் பெற தவறிவிட்டாரோ?

* விஜய், அஜீத், விக்ரம், மணிரத்னம், செல்வ ராகவன் தந்தது ஏமாற்றம்தான்
* சிம்பு, கார்த்தி, சூர்யா - வெற்றி!
* ARR - Going Great
* தமன்னா, அனுஷ்கா - ^^
* நயன், 3ஷா, அசின், ஸ்ரேயா - சர்ச்சை
* கடைசி இருவார படங்கள் எடுத்துக்கொள்ளப்படவில்லை


என்னடா இது கடைசிவரை முக்கியமான ஒரு செய்தி காணுமேங்கறவங்களுக்காக....

61 வயது இயந்திரர் :

- மீசையில்லா படங்கள் பார்த்து - வயசாயிடுச்சுன்னாங்க
- Budget பார்த்து - போணி ஆகாதுன்னாங்க
- Trailer பார்த்து - பொம்ம படம் மாதிரியிருக்குன்னாங்க
- Songs எல்லாம் net ல முன்னமே download செய்துவிட்டு சரியில்ல / அவ்வளவா suit ஆகாதுன்னாங்க



இப்படி என்னென்னவோ சொல்லி, பேசி, எழுதி, blogய பிறகு.....

# சுமார் 2200 உலக அரங்குகளில் முதல் தமிழ் படம்
# முதல் மூன்று நாட்கள் அனைத்து அரங்கங்களும் Housefull ஆகி production cost ல 70% வரை வசூல்
# அநேகமாக 25 நாட்கள் 2000 திரைகளில், 50 நாட்கள் 1500 திரைகள் என...etc...etc... சாதனைகள் தொடர்ந்தன.

- நமது தமிழ் திரை வரலாற்றில் - வியாபார / வர்த்தகத்தில் இதன் வெற்றி ஒரு மைல்கல்.

-Castings, Music, Photography, Make up, Dialoge, On Screen narration என பல ப்ளஸ்கள் மட்டுமல்லாது இது தமிழ்பட "Technology" வளர்ச்சிக்கு ஒரு சான்றும் கூட.

-நல்ல Team, அதிக Budget ல நல்ல சினிமா கொடுத்தாங்கன்னா, கண்டிப்பா அது சூப்பர் டூப்பர் மெகா ஹிட் ஆகும் என்னும் கூற்றிற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு.


-ஒரு கடைசி பார்வையாளனா...ரசிகனா..விமர்சகனா...

Sun, Ice-warya, shankar, ARR என entire team ல் எல்லாருக்கும் ஒரு பெரிய சபாஷ்.

ரஜினி - 61 வயதுல ஒரு மெகா ஹிட் கொடுத்து இன்னும் துடிப்புடனியங்கும் நடிகர் - younger generation நடிகர்களுக்கு - அவருடைய ஈடுபாடு, தன்னை தாழ்த்தி பிறரை உயர்த்தி பேசும் விதம், இறைபற்று என இன்னும் ஒரு உந்து சக்தியாகவே இருக்கிறார்.

தமிழ் திரை பெரும்பாலும் அரசியல் சார்ந்தே இருப்பதால் 2011 க்கு பிறகு என்னவாகும் என்பதை இப்போதே சொல்ல முடியவில்லை.

எவர் வரினும் அரசியல் கலக்காமல் திரை வர்த்தகத்தின் ஈட்டால் திரைதுறை சார்ந்தோர் பயனடைந்தார் என்னும் நிலைப்பாடு வருமன்றுதான் தமிழ் திரை உண்மை வளர்ச்சி கண்டது என்பேன்.

*******

My Ratings

1. Telugu - Vedham
2. Malayalam - Paleri Manikyam- Oru Pathira Kolapathakathinte Katha
3. Tamil - Nandalala (Best critic point of view), Endhiran (Best commercial point of view)

*******

முடிக்கும் முன் : Inception விரைவில்..... one among my best films list and the best for this year too...

Thursday, December 30, 2010

திரை 2010 - ஒரு வெகு ஜன பார்வை - 2

சென்னை வாசகர் திரு ஜி ஆர் ஷங்கர் அவர்கள் எழுதியது.

பாலிவுட் சினிமா

Multi starcast இதன் பலம் இப்படி முந்தி சொல்லிக் கொண்டிருந்தோம். ஆனா Recent ஆ பாத்தீங்கன்னா... - அதிக திரை அரங்கங்கள் மற்றும் Video and Satellite Rights, Media Partners - Publicity, Stars / Technicians வோட ப்ரீமியர் interviews / Promo shows, Net-ல behind the sceanes, teasers, downloads, னு ஏற்படுத்தி ஒரு Average film க்கே பெரிய hype கொடுத்து - they fix the Hit before the movie realese...

Akshay, Salmaan, Saif ali, Sanjay, Ajay Devagan படங்கள் very average movies மாதிரி இருந்தும் - 1000 theatersக்கு மேலா release ஆகி - weekend collections மட்டுமே normal profit! சில TV சேனல்கள்ல 60 நாட்களுக்குள் புது படதத்தையும் போட்டு விடுகிறார்கள்!

Big Corporates, Media Partners - பெரிய lobby - கொடுத்து, stars வோட rates just 10C or 15C - னு ரொம்ப சாதாரணமா ஆக்கிட்டாங்க!

2010 வந்ததில்,

Rajneeti - நேரு அ காங்கிரஸ் family story / மகா பாரத கதை உல்டா பண்ணியது
Dabaang - pure masala (1200 theater களுக்கு மேல் opening...)

Ishqiya, Kartik callin Kartik - வித்தியாசமான script.
Aakrosh, Once upon Mumbai, Badmash Co etc - mixed masala with reality show
My name is SRK - ஒன்லி for Khan fans! Above Average for others!
Peepli live! - Super!
அக்ஷய் குமார் படங்கள் எதுவும் மனதில் நிற்காததற்கு யார் காரணம்?!

அசினின் London dreams 3ஷா வின் Khatta Meeta - கொடுத்த வரவேற்பினால், அவங்க நல்ல படியா South-ஐ மட்டும் concentrate பண்ண முடிந்தது!

Wednesday, December 29, 2010

திரை 2010 - ஒரு வெகு ஜன பார்வை - 1

சென்னை வாசகர் திரு ஜி ஆர் ஷங்கர் அவர்கள் எழுதியது.

திரை 2010 - ஒரு வெகு ஜன பார்வை - எழுதும்படி பருப்பு ஆசிரியர் ஆணை இட்டிருந்தார். 4 (அ) 5 முறை call பண்ணி....2011 க்குள் வருமா என கேட்டு சலித்து விட்டார். "phone பண்ணிணா நல்லா பேசு.... எழுது னா... எழுதாத...ன்னு திட்டு வாங்கி...பின்....திரை 2010.....

தமிழ் சினிமாவோ...இந்திய சினிமாவோ..உலக சினிமாவோ...சில நியதிகளும்... விதிகளும்....சினிமா என்னும் மொழிக்கு...பொதுவானது தானே?!

என்னை பொறுத்தமட்டில் தரமான... தரமற்ற..வசூல் செய்த..வசூலாகாத...வரவேற்பு பெற்ற...பெறாத... என பிரிக்காமல்... ஒரு பொதுவான கருத்தாக எழுத நினைத்தேன். (Disclaimer:கருத்து தனி நபர் சார்ந்தது*).

தெலுகு சினிமா

கடந்த வருட (2009) Block Busters அருந்ததி, மகதீரா, ஆர்யா-2 இவற்றோடு ஒப்பிடுகையில்..2010 Super Hits குறைவு தான்.

வேதம், ப்ரஸ்தானம் - வித்தியாசமான களம். இரண்டிலும் Multistar cast இருந்தாலும், வேதம் - Hit க்கு காரணம் Stars in a different outfit.

அல்லு அர்ஜுன் - வருடு, அனுஷ்க்கா - பஞ்சமுகி, மனோஜ் - ஜும்மன்டி நாதம் (K. ராகவேந்திர ராவ்) அவ்வளவு நல்லா போகல.

அதிருஸ், கோலிமார் - மாமூல் மசாலா. Minimum guarentee movies.
இப்போ ப்ருந்தாவனம் - கொஞ்சம் family சாயல் - பொம்மரிலு மாதிரி.

ராஜ் மெளலி - சுனில் combo மரியாத ராமண்ணா above average type.

ரக்த சரித்ரா 1 & 2 - Hit க்கு காரணம் மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவத்தின் திரைக்கோணம் - factionism in RGV's angle - அதிகமான Emotional / Bloody Violence - A mixed screen play of political with family vengence - since nobody knows what was the exact reason behind the incidents and since it is a contemprary movie - ங்கறதுனால யாரையும் குற்றம் சாட்ட முடியாது. அந்த time ல அவங்க அப்படி முடிவு எடுத்தாங்கன்னு மேம்போக்கா சொல்லியிருக்காங்க. AP ல film பத்தின news / conflicts and interviews media-ல continuous ஆ இருக்கறமாதிரி பாத்துக்கிட்டாங்க. (Both versions not suitable for children, ladies and persons who want to see comedies).

சிம்ஹா - ஒரு முக்கியமான படம் - "நன்தமுரி பாலையா" வுக்கு - 7 (அ) 8 வருடங்களுக்கு அப்புறம் ஒரு mega hit னா சும்மாவா... - "அவங்க எல்லாம் நீச்ச மானவங்க.." , "Record பண்ணறதும் நாங்க தான்.. அத break பண்ணி புது Record பண்ணணும் னாலும் நாங்க தான்" என்பதுபோல் dialogues வேறு... மனுஷன் பின்னிட்டார் போங்க... அடிமட்ட ரசிகர் / TDP தொண்டனுக்கு இத விட வேறு என்ன வேணும்? நெல்லூர் ல பக்கத்து கிராமங்களில் இருந்து லாரிகள்ல வந்து படம் பாத்ததா கேள்வி.

பெருமளவு எதிர்பார்க்கப்பட்ட "கொமரம் புலி", "கலீஜா", "ஆரஞ்ச்", அவ்வளவு நல்லா போகல.

தெலுகு திரையை பொறுத்தமட்டில், 4 குடும்பங்கள் தான் ஆட்சி. நன்தமுரி (NTR), அக்கினி (ANR), Dr. Rama naidu (வெங்கடேஷ்) மற்றும் சிரஞ்சீவி (Geetha arts). ஒவ்வொரு குடும்பத்திலும் - 3 அ 4 ஹீரோக்கள், தயாரிப்பு நிறுவனம், இவங்க சொல்லி கேட்கிற Directors and Distributers ங்கிற மாதிரி.

எந்த ஒரு month லேயும் இவங்க படங்கள் சுமார் 1500 (AP only) theaters-ல ஓடிக்கிட்டிருக்கும். அப்படினா மத்த படங்கள்? - நல்ல தியேட்டர் கிடைக்கிறதே கஷ்டம் னா compete பண்ணறது எவ்வளவு கஷ்டம்?! இந்த விஷயம் பத்தி "தாசரி நாராயண ராவ்" கூட ஒரு interview ல சொல்லிருந்தாரு.

ஹீரோக்கள்ல ரவி தேஜா, பிரபாஸ், மகேஷ் பாபு, அல்லாரி நரேஷ் பாப்புலர்ங்கரதும், Directors ல EVV சத்திய நாராயணா, K ராகவேந்திர ராவ், தாசரி, திருவிக்ரம், பூரி ஜகன்னாத், குணசேகர் போன்றோர்க்கும் நல்ல opening இருக்குனாலும், hit என்பது depends-ஆக உள்ளது.

நிறைய new people ( both technical and acting sides) வந்து கொண்டு இருக்காங்க னாலும் இன்நிலை மாறுவதற்கு சில வருடங்களாகலாம்.மாறும் என நம்புவோமாக...

Tuesday, July 06, 2010

நடிகர் திலகமும்... நாட்டியப் பேரொளியும்...!

சென்னை வாசகர் திரு ஜி ஆர் ஷங்கர் அவர்கள் எழுதியது.


கடந்த வாரம் நான் எழுதிய 'திரும்பிப் பார்' (மரகதம் - சிவாஜி, பத்மினி நடித்தது) IK ல் வரவில்லையாதலால், பருப்பு ஆசிரியருக்குப் போன் செய்தேன்.

கட்டுரையில் 'சிவாஜியும், பத்மினியும் இணைந்து நடித்த படங்கள் 60' என போட்டிருந்ததைத் 'தவறு' என்றார் பருப்பு ஆசிரியர்.

நான் 'data வை Wikipedia லிருந்து தான் எடுத்துள்ளேன்' என்றதற்கு 'செய்தியில் தவறு இருக்க வாய்ப்புள்ளது, ஆகையால் சரி செய்து அனுப்பு' என்றார்!

சில website search செய்ததில் கிட்டத்தட்ட 40 படங்கள் கிடைத்தன!

இதையொட்டி குமுதம் (07.07.2010) ல் வந்த துணுக்கு :

முடிவை வாசகர்களுக்கே விட்டுவிடுகிறேன்.

பி.கு

1. கட்டுரையைக் கஷ்டப்பட்டு எழுதும் அப்பாவிகளும், நல்லவர்களும் இருக்கிறார்கள்; குற்றம் சொல்லி, கட்டுரையைப் போடாத பருப்பு ஆசிரியர்களும் இருக்கிறார்கள்!

2. யாரோ ஒரு வாசகரின் குரல் : அடேய்!! உங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லையா(டா)....?! இதையெல்லாம் உக்காந்துகினு யோசிப்பாங்களோ?!

Sunday, July 04, 2010

I Hate Luv Storys

சென்னை வாசகர் திரு ஜி ஆர் ஷங்கர் அவர்கள் எழுதியது.

PYAR... PYAR...PYAR....
இத Hindi ஆளுங்களும் விட மாட்டாங்க... நாமளும்....!


மீண்டும் வாரிசு நடிகர்கள் (Sonam aur Imran), மீண்டும் அதே இசை, ஒளிப்பதிவு, செட், காட்சி அமைப்பு,Triangle, Ego, Graph aur story board-ஐயும் அவர்களே காண்பிக்கிறார்கள்.

போதுண்டா சாமி...!

ஒரே ஆறுதல் : நண்பராக வரும் Kavin Dave மற்றும் இயக்குனராக நடித்திருக்கும் Samir soni.

I hate this Luv story.....!

Monday, June 28, 2010

நமக்கு ஏன் பொல்லாப்பூ? - 3

ஜே கே அவர்கள் நமக்கு ஏன் பொல்லாப்பூ? - 2 -விற்கு அளித்த பதில்.

குதிரை சிலையைப்பற்றி எனக்கறிந்த கூற்றுகள்.

உலகில் பல வதந்திகள் உண்டு பல நூற்றாண்டுகளாய் இவை நடைமுறையில் வந்துக்கொண்டு இருக்கிறது இதில் உண்மை எது என்று யாருக்கும் தெரியாது, நகர இதிகாசமாய் இதை கொள்ளலாம்.

குதிரை சிலையில் குதிரை ஒரே ஒரு முன்னங்காலை தூக்கி கொண்டிருந்தால் அதிலிருக்கும் வீரன் போரில் அடிப்பட்டு பின் மீண்டார் எனவும் இரு முன்னங்காலையும் தூக்கிக்கொண்டிருக்கிற மாதிரி சிலை இருந்தால் அவ்வீரர் போரில் வீர மரணம் அடைந்தார் எனவும், நாலு காலும் தரையில் இருந்தால் அந்த வீரன் போர் அல்லாத இயற்கை காரணங்களால் மரணமுற்றார் எனவும் சொல்லப்படுகிறது.

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் சிலை மரணமுற்ற வீரர்களுக்கு மட்டுமே என பொருளில் உள்ளது மேலே கொடுக்கப்பட்டுள்ள மேற்கோள்கள் …

எனக்கு தெரிந்ததை சொல்லி நானும் உங்களை குழ்ப்பியதில் மகிழ்வடைகிறேன்.
நன்றி!
ஜேகே

Sunday, June 27, 2010

May THE ALMIGHTY illuminate!

சென்னை வாசகர் திரு ஜி ஆர் ஷங்கர் அவர்கள் எழுதியது.

நன்றி பருப்பு ஆசிரியர் அவர்களுக்கு, எனக்கும் கணினி தமிழ் கொடுத்ததற்காக....

PC உதவியுடன் நேரடியாகவே தமிழ் முதலில் எழுதுவதால் பக்தி ரசம்..... (இது எழுத எனக்கு Maturity காணாது...Just try அவ்வளவுதான்....)

சந்தியா வந்தனம் பற்றி ஹிந்து சாஸ்த்திரங்கள்ல நெறைய சொல்றாங்க... நான் இதை ஒழுங்கா பண்றது இல்ல... நம்மில் பலரும்....ஏன்னு கேட்டா, ஆயிரம் காரணங்கள் சொல்வோம்..... எதுவுமே இங்க compulsion இல்ல.. அதான்...

ஆனா, சந்தியா வந்தனம் - காயத்ரி மந்தரம் - சூர்ய நமஸ்காரம் -இப்படியே போயி...பல்வேறு மதங்கள்ல உள்ள அடிப்படை கோட்பாடுகளின் origin என்னானு பாத்தா....(or End of the thread) னு சொல்லலாம்.... அது உருவம் உள்ளதோ... அற்றதோ....பரம்பொருள்...ஆதி பகவன்...

உளன் எனில் உளன் அவன் உருவம் - இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன்


என்ன ok yaa...

இதுக்கும் விளக்கம் வேணுமா என்ன..."இருக்கார்னா அவர் உருவத்தோட...இல்லனா...உருவம் இல்லாம..." (Thanks to அமரர் சுஜாதா)

ஒம்: என்னும் ஒங்காரத்திலிருந்து துவங்கிய உலகம்.. னு சொல்றாங்க....(கொஞ்சம் colloquial-ஆ சொன்னா அண்ட வெளில உள்ள சப்தமான சத்தம்... ; அறிவியல் ரீதியா னா - அண்ட வெளியில உண்டான வெடிப்பு - பால் வீதி - சூரியன் - சிதரிய தீக் கோளங்கள்....னு.. போலாம்...)

இதுக்கு எல்லாம் காரணம் யார் னா?...அதுக்கு விடை என்னவா இருக்குமோ....அது...The obvious and The omnipresent...



என்னோட பக்தி எல்லாம் ரொம்ப சின்னது. எப்போதாவது தோணிணா கோவில். Exams, Interviews or Accounts not tallied in MIS னா கண்டிப்பா "விடல்" உண்டு. (நம்ம "Big street" - "முத்தவர்" க்கு). கொஞ்சம் ஜாஸ்தி பிரச்சனைனா போகுமிடம், ஏற்கனவே "பார்த்த"பெருமாள் கோவிலில் உள்ள அழகிய "சிங்கரை".

Just a simple management lesson தான். We feel that we switched our burden to him, our mind is free from worries and we think we may able to concentrate our regular activities during the course of "Time".

Time is a best medicine தான். Really.

எனது பள்ளி காலங்களில், தமிழ் பாட திட்டத்தின் செய்யுட் பகுதி - கடவுள் வாழ்த்தில் தொடங்கி திருக்குறள், நாலடியார், கம்பர், சீவக, சிலம்பு, வளை, மணி, குண்டலம், குறவஞ்சியர், பிள்ளை தமிழ், பாரதி, பாவேந்தர் என நீளும். (திரு.வி.க, மு.வரதர்... போன்றவர்களே கடைசில தான் வருவாங்க...). இப்போ எப்படின்னு தெரியல. (அரசியல் வாரிசுகளுக்கும், சினிமா காரங்களுக்கும் காலமல்லவா...)

எங்க School Assembly / இலக்கிய மன்றங்கள் - ல, கடவுள் வாழ்த்துனு அறிவிச்ச உடன் கிட்டத்தட்ட 1200 மாணாக்கர்களும் சேர்ந்து ஒண்ணா கத்துவோம். என்ன கத்தினோம்னு அப்போ தெரியாது. உலகம்னு ஆரம்பிச்சு வைகை எக்ஸ்பிரஸ் (அப்போ எல்லாம் இந்த train தான் ரொம்ப fast. அதான்..) மாதிரி போய் சரண் நாங்களேனு முடிப்போம்.

இந்த உலகங்கள் எல்லாத்தையும் படைச்சு, காத்து, அழிக்கற வேலைகளை - just like that - ஒரு முடிவில்லா விளையாட்டு மாதிரி செய்யற பரம்பொருளை வணங்கறேன்னு கம்பர் தன் ராமாயணத்துல முதல் பாடலா சொல்றாரு. அந்த பாட்டுதான் எங்க School ல கடவுள் வாழ்த்து.

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.


"டேய், ரொம்ப ஓவர்டா". "காயத்ரி மந்திரம்னு ஆரம்பிச்சு எதையோ எழுதிருக்கே!" -ன்னார் பருப்பு ஆசிரியர்.
"சார், இருங்க. அது என்னனா... காயத்ரி மந்திரத்தை இயற்றியவர் யார்?"
பருப்பு ஆசிரியர் "???"

Google search பண்ணாம, யார் கிட்டேயும் தொடர்பு கொள்ளாம நீங்க பருப்பு ஆசிரியர்-க்கு mail பண்ணுங்க. 1st right answer யாரோ அவரே IK -ன் FANTASTICAT ஆவார்!!

நமக்கு ஏன் பொல்லாப்பூ? - 2

ஜெமினி மேம்பால குதிரை சிலைக்கும் கல்கி வந்திய தேவனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சிலை வைத்த பிறகு மைனாரிட்டி அரசு ( ஜெயா டிவி பார்ப்பதின் பாதிப்பு) கருணாநிதி விடுத்த அறிக்கையின் படி "சென்னையில் குதிரை RACE ஒழிக்கப்பட்டதன் அடையாளம்" என்பதாகும்.

-புனே திரு சேகர் அவர்கள்
நமக்கு ஏன் பொல்லாப்பூ? -விற்கு அளித்த பதில்.

இதைப் பற்றி இன்னும் விரிவாக...

Click the image for a better view

Thursday, June 24, 2010

நமக்கு ஏன் பொல்லாப்பூ?

சென்னை வாசகர் திரு ஜி ஆர் ஷங்கர் அவர்கள் எழுதியது.

ஜெமினி மேம்பாலம்
ஏறியவர்கள் - கதீட்ரல் ஊசி-கோபுர கடியாரத்தையும், இரவில் கொஞ்சம் விரைந்து வாகனத்தை முந்தினால் முட்டிவிடும் டிவைடரையும், 'படைப்புகள் பொது உடைமை ஆகுமா ஆகாதா?' என்று உட்கார்ந்து கொண்டும், நம்மைப் போலவே சந்தேகமாய் யோசித்துக் கொண்டிருக்கும் பெரியார் அவர்களையும், பக்கத்திலேயே 'இன்னொரு ஜெமினி பாலம் கட்டுவார்களோ?' எனத் தெரியாது, வாகன நெரிசலைப் பொருட்படுத்தாது, புத்தகம் படித்துக் கொண்டிருக்கும் பேரறிஞர் அண்ணா அவர்களயும், மேம்பாலத்தின் இரு புறங்களிலும் குதிரையை பிடித்துக் கொண்டிருக்கும் வீரனையும் பார்த்திருப்பீர்கள்...

இவர் யாரு?

வந்தியத்தேவர் (பொன்னியின் செல்வன்) என பொறியாளர்கள் அப்போதைய அரசிடம் சொன்னதாக விகடனார் (பொக்கிஷம் 75) குறிப்பிடுகிறார்.

கதையில் வந்தியத்தேவனின் குதிரை காஞ்சி - தஞ்சை - பழையறை செல்லும் மார்க்கங்களில் சண்டித்தனம் செய்திருக்கலாம்...அதை அவர் பிடித்திருக்கலாம்! (திரு கல்கி அவர்கள், சண்டித்தனம் பண்ணும் குதிரை பற்றியெல்லாம் எழுதியிருந்தால் இன்னுமொரு பாகம் வேண்டுமென்று நினைத்து எடிட் செய்திருக்கலாம்!)

வந்தியத் தேவர் அவர்களோ, அருள்மொழி வர்மன் அவர்களோ அல்லது கல்கி அவர்களோ வந்து விளக்கினாத்தான் ஆச்சு போல!

நல்ல வேளை பீச் மேடம் சிலம்பத்தை முழுதாய் வைத்திருக்கிறார்கள்..உடைக்கவில்லை...உடைத்திருந்தாலோ இதே மாதிரி சந்தேகம் வந்திருக்கும்!


'ரெண்டல் ரசீதில் போர்ஜரி பண்ணினால் வேலையிலிருந்து கூட டிஸ்மிஸ் ஆகலாம்; - பிடிஐ செய்திக் குறிப்பாக, சகா ஒருவர் இன்றைக்கு junk அனுப்பியிருந்தார். நீங்களும் படித்திருந்திருக்கலாம்; அல்லது நாளைக்குள் உங்களுக்கு யாராவது junk அனுப்பிவிடுவார்கள்!

Recent ரிலீஸான படங்களில் - வேதம்(தெலுகு), ராஜ்நீதி (இந்தி), கராத்தே கிட் (ஆங்கிலம்) above average-ஆகப் போகிறது!

சென்னை டாம்ஸ் சாலையில் (Tarapore Towers onway leading to Gaiety) 'ஒரு family அழைப்பிதழ்' simply superb! நோக்கியா 'க்ளிக்' தருணத்தில் எனக்குத் தோன்றியதை இங்கே எழுதினால் 'பெரிய குடும்பத்தோட மனக் கசப்பு வரும்!' எனக்கு ஏம்பா பொல்லாப்பூ?!

தாய் தமிழே! நீ வாழி!

Tuesday, June 22, 2010

யார் குற்றம்?

சென்னை வாசகர் திரு ஜி ஆர் ஷங்கர் அவர்கள் எழுதியது.

சினிமா தலைப்பு, கடைகளின் பெயர்கள் போன்றவற்றை 'தமிழ்' பண்ணி அடிப்படை கல்வியையும், அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளின் தரத்தையும் அதிகரிக்காமல், ஏற்கெனவே செம்மையான மொழிக்கு 'செம்மை'யான அடைமொழி கொடுப்போம்!

குட்டிப் பாப்பாக்கள் தொலைக்காட்சியில் பாடுவதையும், ஆடுவதையும் பார்த்து, ஐந்து வயது நிரம்பாத குழந்தைகளை அதிக அளவில் extra curricular activities-ல் ஈடுபடுத்தி பந்தயத்தில் முந்த வைக்க நினைப்போம்!

பக்கத்து வீட்டில் கொஞ்சம் சண்டை சத்தம் கேட்டாலே கதவு, ஜன்னல்களை சாத்திவிட்டு, மெகா மகா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்! பக்கத்து நாடு 'நம்ம மக்கள்' எப்படி போனால் நமக்கென்ன?!

ஆற்றுத் தண்ணீர்...இல்லை...கிணற்றுத் தண்ணீர்...மெட்ரோ வாட்டர்...இல்லை...போர்வெல் சமையலுக்கும், குடிப்பதற்கும் உபயோகித்தோம். அதற்கும் வழியில்லையென்றபோது உடனே கேன் வாட்டர் குடிக்கும் கேனையர்களானோம்! கொஞ்ச நாள் கழித்து, குளிப்பதற்கும் உபயோகப்படுத்துவோம்!

பெட்ரோல் விலை ஏறினால் என்ன? நாம் அனாவசியமாக வண்டியை எடுக்காமல் இருக்கப்போகிறோமா என்ன?!

முந்தியெல்லாம் வீட்டுக்கு ஒரு தொலைபேசி இருப்பதே அபூர்வம். இப்போ என்னடான்னா, "எனக்கே எனக்கு" (நமக்கே நமக்கு என்று போட்டால் அர்த்தம் சரியாக வராது!) செல்பேசி, மடி கணினி, ப்ளாஸ்டிக் அட்டை இத்யாதிகள்...பணத்துக்கோ, பொழுது போக்க, பேசவோ யாரிடமும் போய் நிற்க வேண்டிய அவசியமில்லாமல் தீவுகளானோம்!

முட்டை வெஜ்-ஆ நான்வெஜ்-ஆ கேட்பது ஓல்ட் பேஷன். இப்போ drinker, social drinker, party drinker, addicted for drinking-னு வெவ்வேறு தலைப்பு கண்டுபிடித்தோம்! (நிரம்ப படிச்சவங்கதான் இப்படியெல்லாம் தலைப்பு கண்டு பிடிக்கிறார்களா?!)

இன்னும் எத்தனையோ...

ஒரு சாதா BPO-வில் கூட விடுப்பு எடுக்க வேண்டுமென்றால், அவன் செய்ய வேண்டிய வேலைக்கு backup தயார் செய்ய வேண்டும். அதே போல,

ஏதேனும் மாற்று ஏற்பாடு, positive approach-ல, நாம் என்ன செய்கிறோம் - என்ன செய்யலாம் - என்ன செய்தால் நல்லாயிருக்கும் - அதைச் செயல்படுத்த முடியுமா - அப்படி என்றால் எப்படிச் செய்யலாம் - எல்லாவற்றையும் நீங்கள் யோசித்து எங்களுக்கு எழுதலாமே?!