செவிகொடு...
உனக்கொரு
சேதி சொல்கிறேன்...!
இன்று
உனக்கொரு
சவக்குழி இனாம்...!
நாளை
உயிருடன் உள்ளே நீ...
அதன்மேல்
அரசியல்வாதியின்
பளிங்கு மண்டபம்....
விழித்துக்கொள் சமுதாயமே...
சலுகைகள்
உன் கண்முன்னே
தோண்டப்படும்
உனக்கான சவக்குழிகள்...
உணர்வுகள் விற்றாய்...
உரிமைகள் விற்றாய்...
தன்மானம் விற்றாய்...
மண்மானமும் விற்றாய்...
இனி
ஏது விற்பாய் மனிதா..
இலவசங்களுக்கு....?
இனாம்
வாங்கி வாங்கியே
வளைந்து போன
உன் முதுகுத்தண்டு
இனி
நிமிரவே நிமிராதா...?
உன்
அரை வேஷ்டி உருவி
அதிலிருந்து உனக்கொரு
புதுக் கோவணம்
இனாமாம்...!
ஓடு...
இலவசக் கோவணம்
இன்றே கடைசியாம்...!
உன்
அறுவடை களவாடி
உனக்கு
ஒரு வேளை சோறு
இலவசமாம்...!
ஓடு...
புறங்கை நக்கி
புசித்துவிட்டு வா...!
நினைவில் கொள்...
கட்டிக்கொள்ள
தலைக்கொரு
அரைக்கோவனம் இனாம்...!
நின்று கொள்ள
ஆளுக்கொரு
சதுரடி இனாம்...
உயிர் நனைக்க
நாளுக்கொரு
குவளைத் தண்ணீர் இனாம்...
என்ற நிலை வரும்...
போதும்...!
இனாம் போதும்...!
உரிமை கேளுங்கள்...
நீங்கள் எஜமானர்கள்...
அவர்கள் உனது
சேவகர்கள்...
உரிமை கேளுங்கள்...
இலவசம் வேண்டாம்...
இடுங்கிப் போன கண்களுக்கு
ஒளி கேளுங்கள்...
தளர்ந்து போன தோள்களுக்கு
தன்னம்பிக்கை கேளுங்கள்...
உலர்ந்து போன வாழ்க்கைக்கு
உயிரோட்டம் கேளுங்கள்..
கரைந்து போன வளங்களுக்கு
காரணம் கேளுங்கள்...
மறைந்து போன மனிதாபிமானத்தை
மறுபடியும் கேளுங்கள்...
போதும்...!
இனாம் போதும்...!
இலவச நோய்
அடுத்த தலைமுறையினரயாவது
தாக்காமல் இருக்கட்டும்...!
உரக்கச் சொல்லுங்கள்...
செவிகளில் ஏறவில்லையா...
உதைத்துச் சொல்லுங்கள்....
இந்த கவிதை படிக்க மட்டும் அல்ல,
உணரவும் தான்...
அன்பர்கள்,
இதனை தங்களுது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் முன்னெடுத்து செல்லுமாறு வேண்டுகிறோம்.
வாக்களிக்கும் முன், வீட்டின் நலன் கருதாமல், நாட்டின் நலன் கருதுவோம்
நன்றி - திரு ஜே கே அவர்களுக்கு
Showing posts with label ஜே கே. Show all posts
Showing posts with label ஜே கே. Show all posts
Tuesday, April 12, 2011
உங்களுக்கோர் செய்தி!
Labels:
என் பார்வை,
தேர்தல்,
நாட்டு நலன்,
ஜே கே
Monday, June 28, 2010
நமக்கு ஏன் பொல்லாப்பூ? - 3
ஜே கே அவர்கள் நமக்கு ஏன் பொல்லாப்பூ? - 2 -விற்கு அளித்த பதில்.
குதிரை சிலையைப்பற்றி எனக்கறிந்த கூற்றுகள்.
உலகில் பல வதந்திகள் உண்டு பல நூற்றாண்டுகளாய் இவை நடைமுறையில் வந்துக்கொண்டு இருக்கிறது இதில் உண்மை எது என்று யாருக்கும் தெரியாது, நகர இதிகாசமாய் இதை கொள்ளலாம்.
குதிரை சிலையில் குதிரை ஒரே ஒரு முன்னங்காலை தூக்கி கொண்டிருந்தால் அதிலிருக்கும் வீரன் போரில் அடிப்பட்டு பின் மீண்டார் எனவும் இரு முன்னங்காலையும் தூக்கிக்கொண்டிருக்கிற மாதிரி சிலை இருந்தால் அவ்வீரர் போரில் வீர மரணம் அடைந்தார் எனவும், நாலு காலும் தரையில் இருந்தால் அந்த வீரன் போர் அல்லாத இயற்கை காரணங்களால் மரணமுற்றார் எனவும் சொல்லப்படுகிறது.
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் சிலை மரணமுற்ற வீரர்களுக்கு மட்டுமே என பொருளில் உள்ளது மேலே கொடுக்கப்பட்டுள்ள மேற்கோள்கள் …
எனக்கு தெரிந்ததை சொல்லி நானும் உங்களை குழ்ப்பியதில் மகிழ்வடைகிறேன்.
நன்றி!

ஜேகே
Labels:
சும்மா,
புனே சேகர்,
ஜி ஆர் ஷங்கர்,
ஜே கே
Sunday, November 08, 2009
ஜே கே வெர்சஸ் ஸ¤மி !
தீபாவளிக்குப் பின் ஒரு இடைவெளி விழுந்தது உண்மைதான். காரணம் நட்பு.
நண்பர்களுக்காக நேரம் ஒதுக்கித் துவக்கிய இன்றைய கவிதை, திரு ஜே கே அவர்கள் கை பட்டு இன்று மிளிர்கிறது.
என்னால் முடிந்ததைச் செய்துவிட்டு, இதோ...வந்துவிட்டேன்!
திருப்திதானே ஸ¤மி!
நண்பர்களுக்காக நேரம் ஒதுக்கித் துவக்கிய இன்றைய கவிதை, திரு ஜே கே அவர்கள் கை பட்டு இன்று மிளிர்கிறது.
என்னால் முடிந்ததைச் செய்துவிட்டு, இதோ...வந்துவிட்டேன்!
திருப்திதானே ஸ¤மி!
Labels:
இன்றைய கவிதை,
நட்பு,
ஜே கே,
ஸ¤மி
Subscribe to:
Posts (Atom)