Showing posts with label இசைஞானி. Show all posts
Showing posts with label இசைஞானி. Show all posts

Saturday, December 15, 2012

நீதானே என் பொன்வசந்தம்!


Photo: சில படங்கள் நம்மைக் கலங்க வைக்கும்.

ஆனால், நீதானே என் பொன்வசந்தம் நம்மைக் கதி கலங்க வைக்கிறது.

இரண்டு ஆறுதல்கள்

1.  காதலர்கள் ‘அடி/தடி’ படம் முழுதும் போட்டுக்கொண்டாலும், கடோசியில் சேர்ந்து விடுவது. (கௌதம் திருந்திட்டாரா?)

2. பின்பகுதியைத் தாங்கிப் பிடிக்கும் பாடல்கள் என் போன்ற இசை அஞ்ஞானியையும் ரசிக்க வைப்பது.

பி.கு :

1.  எனக்குப் பிடித்த ’என்னோடு வா வா’ பாடலில் ‘நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்’ பாடலின் சாயல் தெரிகிறதே ராஜா ஸார்?

2. படம் பார்த்த பின் ‘இதயம்’ படத்தின் உயர் ரக இசையும் பாடல்களும் ஏனோ நினைவுக்கு வந்தன.சில படங்கள் நம்மைக் கலங்க வைக்கும்.

ஆனால், நீதானே என் பொன்வசந்தம் நம்மைக் கதி கலங்க வைக்கிறது.

இரண்டு ஆறுதல்கள்

1. காதலர்கள் ‘அடி/தடி’ படம் முழுதும் போட்டுக்கொண்டாலும், கடோசியில் சேர்ந்து விடுவது. (கௌதம் திருந்திட்டாரா?)

2. பின்பகுதியைத் தாங்கிப் பிடிக்கும் பாடல்கள் என் போன்ற இசை அஞ்ஞானியையும் ரசிக்க வைப்பது.

பி.கு :

1. எனக்குப் பிடித்த ’என்னோடு வா வா’ பாடலில் ‘நீ கொடுத்ததை திருப்பிக் கொடுப்பேன்’ பாடலின் சாயல் தெரிகிறதே ராஜா ஸார்?

2. படம் பார்த்த பின் ‘இதயம்’ படத்தின் உயர் ரக இசையும் பாடல்களும் ஏனோ நினைவுக்கு வந்தன.

Saturday, June 02, 2012

இளையராஜா!

இளையராஜா பிறந்த நாளை எல்லோரும் கொண்டாடி ‘ஆஞ்சு, ஓஞ்சாச்சு’!



வித்தியாசமான கோணத்தில் இளையராஜாவை ஆராயும் முயற்சி இது….திரை வடிவம் வராமலேயே முடங்கிப் போன பாடல்கள் இரண்டை முன் வைக்கிறேன் (கமல், ரஜினி படமாய் அமைந்தது தற்செயல்!)


சிப்பிக்குள் ஒரு முத்து வளர்ந்தது… (விக்ரம்,1986)


கே ஜே யேசுதாஸ்/ஜானகி துள்ளல் குரல்களில் கவிப்பேரரசு எழுதியது.  டிம்பிள் கபாடியா டூயட்டை நெருங்கி அமைந்ததால் நீக்கப்பட்டது.

மென்மை என்றில்லாமல், டப்பாங்குத்து என்று சொல்ல முடியாமல் இசைஞானி அமைத்த ஜோடிப் பாடல் எவ்வளவு பேருக்கு நினைவிருக்கும்?

பாட்டு அமைந்த ராகம் என்னங்ணா?


புத்தம் புது பூப் பூத்ததோ… (தளபதி, 1991)


கே ஜே யேசுதாஸ், எஸ் ஜானகி குரல்களில் நெகிழ வைக்கும் - கவிஞர் வாலி எழுதியது..  படத்தின் நீளம் கருதி குறைக்கப்பட்டது.

படத்தின் சூழலுக்குப் ஏற்ற வகையில் பூபாள ராகத்தில் (ரஜினி-பானுப்ரியா திருமணத்திற்குப் பின், ரஜினியின் வாழ்வை மாற்றிப் போடும், விடியலைத் தரும்) இசைஞானி பொருத்தியதை எப்படிப் புகழ்வது?

பாட்டின் விசேஷம்..இரவில் விளக்கணைத்து கேட்டுப் பாருங்கள்.  பூபாள ராகம் தரும் தாலாட்டில் சுகமாய் உறக்கம் வரும்!

இது போன்ற சூழல்களில் இசையமைப்பாளரின் மனநிலை என்னாவாயிருந்திருக்கும்?


இளையராஜாவின் பாடல்களை அருவியாய்ப் பொழிந்து குளிர்ச்சியாய் தந்த ஆர் வி எஸ் ஐயாவிற்கு என்னால் முடிந்த காணிக்கை…

Sunday, December 11, 2011

ரஜினி டூயட்ஸ் - IV


ரஜினி டூயட்ஸ் - 10

காஷ்மீரப் பின்னணியில் ரஜினி பாடிய ஒரு டூயட் நமக்கெல்லாம் தெரியும். இன்னொண்ணு? அதாம்பா இது-னு சொல்லி நான் ஏமாத்த மாட்டேன்...ரஜினி / ஸ்ரீப்ரியா ஜோடி, மெல்லிசை மன்னர் இசை, கண்ணதாசன் பாட்டு, எஸ் பி பி, வாணி ஜெயராம் பாடிய பொல்லாதவன் படம், 'அதோ வாராண்டி, வாராண்டி வில்லேந்தி ஒருத்தன்'....பாடலில் காடு, மலை, நதி, ரோடு, குதிரை என எல்லாவற்றிலும் முத்திரை பதிக்கும், லெதர் ஜாகெட்/பான்ட் போட்டு அசத்தும், ரஜினி சாரைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்....!


ரஜினி டூயட்ஸ் - 11

புதிதாய்க் கல்யாணம் ஆகி, தேனிலவு கொண்டாடும் தம்பதியினரை நம் முன்னே நிறுத்தும் பாடல். இசைஞானி(ஒரு மாறுதலுக்காக) / ஜானகியம்மா குரல்களில், பஞ்சு சார் எழுத்தில், கழுகு படத்தில் 'பொன் ஓவியம்' பாடல்...ரஜினி/ரதி அப்படி ஒரு ஜோடிப் பொருத்தம் பாட்டில் தெரியும்...தலைவர் முதலிரவைக் கூட 'இஷ்டைல்'-ஆ கொண்டாடுவார் போல...! அத்தனை இளமை!! பேருந்தில் எடுக்கப்பட்ட பொன் ஓவியம் எங்காத்து மாமிக்கு கூட புடிச்ச பாட்டாக்கும்...!


ரஜினி டூயட்ஸ் - 12

வரும் பாட்டுக்கு அறிமுகம் தேவைதானா? இசைஞானி, யேசுதாஸ், ஜானகியம்மா, கண்ணதாசன், ரஜினி, மேனகை என எல்லோருமே மென்மையாய் அடக்கி வாசித்தாலும், பாட்டு இன்றும் பட்டைய கெளப்புது! 'ராமனின் மோகனம்' பாட்டு, ரஜினி சார் எட்ட நின்று காதல் யாசிக்கும் பாட்டு, 'நெற்றிக்கண்' பெசல் பாட்டு!


-தொடரும்

Saturday, December 10, 2011

ரஜினி டூயட்ஸ் - II


ரஜினி டூயட்ஸ் - 4

'நேரம் வந்தாச்சு, நல்ல யோகம் வந்தாச்சு' - இல்லையா பின்னே? எம் ஜி ஆருக்கு திருப்பு முனை கொடுத்த தேவரின் பார்வை ரஜினி பக்கம் திரும்பியாச்சு...! 'தாய் மீது சத்தியம்' படத்தில், வித்தியாச ஹேர் ஸ்டைல்-ல், ரஜினி சார் பட்டிக்காட்டு உடையில் (ஆரஞ்சு வண்ணம்!), ஸ்ரீப்ரியாவுடன் பாடி ஆடும் சூப்பர் ஹிட் பாடல். பாமரருக்கும் புரியும்படியான எளிமையான வரிகளில் மா ரா பரணி எழுதியிருக்கும் பாடல். சங்கர் கணேஷ் இசையமைத்து, டி எம் எஸ் அய்யா/ சுசீலாம்மா பாடிய 'ட்ரியோ' பாடல் இதோ!



ரஜினி டூயட்ஸ் - 5

வெளிநாட்டில் எடுக்கப்பட்ட ரஜினி டூயட் பாடல்களில் நிச்சயம் 'ப்ரியா'வுக்கு இடம் உண்டு. 'என் உயிர் நீதானே' பாடலில்', யேசுதாஸ், ஜெஸ்ஸி, பஞ்சு ஸார் வரிகள், இழையோடும் இசை ஞானியின் இசை, படமாக்கப்பட்ட சூழல் என மென்மைக்கு முதலிடம். ரஜினி நடை, உடை, பாவனை - ஆண்மை, கம்பீரம் - தெரியும். பாட்டைப் பார்த்தபின் 'என் உயிர் நீதானே' என ரஜினி சாரைப் பார்த்து நாமும் பாடத் துவங்கி விடுவோம்!


ரஜினி டூயட்ஸ் - 6

இந்தப் பாடலைக் கேட்டவுடன் எனக்கு நினைவுக்கு வந்தவர் இருவர்.... முதல்வர்....திரு மலேசியா வாசுதேவன் அவர்கள் (என்ன ஒரு ஓபனிங்!) இரண்டாமவர்...திரு ரஜினிகாந்த் அவர்கள் (மனநிலை பிறழ்ந்து, சரியான பின் நடித்த முதல் படம் இது).
திரு மலேசியா அவர்கள் பாடிய 'அருமை' வெகு ஜனப் பாடல்களின் 'மைல்கல்' பாடல்..கூட எஸ் ஜானகி...கேட்பதற்கு இனிமையோ இனிமை....! ரஜினி, ஸ்ரீதேவி கலக்கல் டூயட்ஸ்-ல் 'ஆகாய ganges'-க்கு நிச்சயம் இடமுண்டு!


-தொடரும்

Saturday, November 05, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 32

பத்மராஜன் என்பவரைப் பற்றி இன்றைய இளைஞர்களுக்கு தெரிய அதிகம் வாய்ப்பில்லை. ஆனால், அன்றைய இளைஞர்களுக்கு இப்படித்தான் தெரியும்!


இவர் திரைக்கதை எழுதிய ஐ.வி. சசி இயக்கிய இதா இவிடே வரு,வாடகைக்கு ஒரு இதயம், பரதன் இயக்கத்தில் உருவான ரதி நிர்வேதம், மற்றும் சத்திரத்தில் ஒரு ராத்திரி, தகரா, போன்ற படங்கள் மலையாள கவர்ச்சிபடங்களாக வெளியாகி தமிழகத்தில் வெற்றிகரமாக ஒடின. ஆனால் அந்தப் படங்களைக் காண வந்தவர்களில் எத்தனை பேர் அதை இயக்கியவர் பரதன் எழுதியவர் பத்மராஜன் என்று தெரிந்திருப்பார்கள். படம் பார்க்க வந்தவர்களின் நோக்கம் வேறு இல்லையா?

பத்மராஜன், பரதன் மீது படிந்துள்ள இந்தக் கவர்ச்சி படிமம் அவர்களாலே விரும்பி உண்டாக்கி கொண்டவை. அதன்முன்பு வரை மெலோடிராமா மட்டுமே சினிமா என்று நம்பி வந்த மக்களை தன் பக்கம் கவனம் கொள்ள செய்ய வேண்டும் என்பதற்காகவே இது போன்ற பாலியல் சார்ந்த படங்களை உருவாக்கினார்கள் என்று என் மலையாள நண்பர்கள் சொல்கிறார்கள். இந்த படங்களின் வருகை மலையாள சினிமாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது நிஜமே.

என்று துவங்கிய திரு எஸ் ராமகிருஷ்ணன் அடுத்த பத்தியில் பத்மராஜனை அடையாளம் காட்டி விடுகிறார்.

ஆனால் இவை மட்டுமே பரதன் பத்மராஜனின் அடையாளங்கள் இல்லை. அவர்கள் இருவருமே சிறந்த இயக்குனர்களாக பல முக்கிய படங்களை உருவாக்கியிருக்கிறார்கள். அது போலவே பத்மராஜனின் முக்கிய திரைக்கதைகளை சிறப்பாக படமாக்கியது பரதனே.அவர்கள் கூட்டணி மலையாள சினிமாவில் புதிய அலையை உருவாக்கியது.

பத்மராஜன் சிறந்த எழுத்தாளர். சாஹித்ய அகாடெமி விருது பெற்றவர். திருச்சூர் வானொலி நிலையத்தில் பணி புரிந்தவர். சினிமாவின் மீது கொண்ட தீராக் காதலின் விளைவாய், பணியிலிருந்து விலகி, திரைக்கதை ஆசிரியராய் அறிமுகமாகி, இயக்குனராய் தன்னை உயர்த்திக்கொண்டு மலையாள சினிமாவை புரட்டிப் போட்டவர். புதிய கோண இயக்குனர்களான சிபி மலையில், பரதன், சத்யன் அந்திக்காடு, லோஹிதா தாஸ் போன்றோருக்கு முன்னோடி. நாற்பதுகளில் பத்மராஜன் மறைந்தது மலையாள சினிமாவின் துரதிர்ஷ்டம்.

பத்மராஜன் இயக்கத்தில் பெரிதும் பேசப்பட்ட படங்களில் ஒன்று 'மூன்னாம் பக்கம்' (மூன்றாவது நாள்). திலகன், ஜெயராம், சோமன் நடித்து, இசைஞானி அவர்கள் இசையில் 1988-ல் வெளிவந்து, காமர்ஷியலாயும் வெற்றி பெற்ற படம்.


படத்தைப் பற்றி விரிவாய் எழுதுவதாய் திரு ஜி ஆர் ஷங்கர் உறுதி அளித்திருப்பதால் மூன்று விசேஷங்களைப் பற்றி மட்டும்..

இசைஞானி - பாயசத்தின் முந்திரி, திராக்ஷை, ஏலக்காய் போல இசைஞானி அவர்களின் இசை படம் முழுவதும் சுவையாய் இருக்கிறது. சந்தோசம், சோகம், ஏக்கம், பரிதவிப்பு, பதைபபு, நகைச்சுவை, களியாட்டம் என மாஸ்ட்ரோ இசை / பின்னணி இசையில் புகுந்து விளையாடியிருக்கிறார். சாம்பிள் பாட்டு இதோ


திலகன் - திலகனை 'சத்ரியன்' அரசியல்வாதியாய், 'சாணக்யன்' முதல் அமைச்சராய் மட்டுமே தமிழ் சினிமா அறிந்திருக்கும். முதியவராய் அறிமுகமாகி, மகன் இழந்த சோகத்தை மறைத்துக்கொண்டு, பேரன் மேல் பாசத்தைப் பொழிந்து, அவன் நண்பர்களுடன் சகஜமாய் உரையாடி, இழப்பை ஏற்றுக்கொண்டு / கொள்ள முடியாமல் தத்தளித்து...திலகன் நடிப்பு அமர்க்களம் / அசத்தல்.

பத்மராஜன் - கதை / திரைக்கதை-ல் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாது இயக்கி இருப்பது பேரும் பலம். இறுதி அரை மணியில் சோகம் கப்பிக் கிடந்தாலும் நம்மால் திலகன் குடும்பத்தின் துக்கத்தை உணர முடிகிறது. 'பலிச்சோறு' கொடுக்கும் கடோசிக் காட்சி 'சொடேர்' என நம்மை அறைந்து, உறைய வைக்கிறது.

'மூன்னாம் பக்கம்' தென்றலாய் தாலாட்டும், புயலாய் புரட்டி எடுக்கும், பாசத்தை உணர்ந்த / இழப்பை அனுபவித்த ஒவ்வொருவருக்கும் எளிதாய் இணைத்துக் கொள்ளவும் முடியும்.


இவர்கள் இல்லாமல் என்னால் இதை எழுதி இருக்க முடியாது....

திரு ஜி ஆர் ஷங்கர் - பத்மராஜனை அறிமுகப்படுத்தியதற்கு
திரு எஸ் ராமகிருஷ்ணன் - பத்மராஜனைப் பற்றிய சுவாரஸ்யப் பதிவிற்கு
விக்கி - பத்மராஜன், மூன்னாம் பக்கம் பற்றிய விவரங்களுக்கு