Showing posts with label வைரமுத்து. Show all posts
Showing posts with label வைரமுத்து. Show all posts

Monday, July 15, 2013

(பாடல் வரிகளில்) பரதேசி டைரிக் குறிப்பு - 51


தோழர் பாலா அவர்கள் கவியரசு / கவிப்பேரரசு அவர்களின் கற்பனை ஒன்றாயிருக்கிறது / நன்றாயிருக்கிறது என்று சிலாகித்திருந்தார்.  அதை இங்கு தந்திருக்கிறேன்.


வைரமுத்துவின் வைர வரிகள்:
(நினைவெல்லாம் நித்யா-ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்)

"வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்.
இலையுதிர்க் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்."
கண்ணதாசனின் "ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் இருந்தும் என்ன? என் வேரென நீயிருந்தாய் அதில் நான் வீழ்ந்துவிடாதிருந்தேன்" என்ற வரிகளுக்கு இணையானவை இவ்வரிகள்.

இது போன்ற இரண்டு பாடல்கள் என்னுள் கொஞ்ச நாட்களாய் உழன்று கொண்டிருந்தன. 

Saturday, June 02, 2012

இளையராஜா!

இளையராஜா பிறந்த நாளை எல்லோரும் கொண்டாடி ‘ஆஞ்சு, ஓஞ்சாச்சு’!



வித்தியாசமான கோணத்தில் இளையராஜாவை ஆராயும் முயற்சி இது….திரை வடிவம் வராமலேயே முடங்கிப் போன பாடல்கள் இரண்டை முன் வைக்கிறேன் (கமல், ரஜினி படமாய் அமைந்தது தற்செயல்!)


சிப்பிக்குள் ஒரு முத்து வளர்ந்தது… (விக்ரம்,1986)


கே ஜே யேசுதாஸ்/ஜானகி துள்ளல் குரல்களில் கவிப்பேரரசு எழுதியது.  டிம்பிள் கபாடியா டூயட்டை நெருங்கி அமைந்ததால் நீக்கப்பட்டது.

மென்மை என்றில்லாமல், டப்பாங்குத்து என்று சொல்ல முடியாமல் இசைஞானி அமைத்த ஜோடிப் பாடல் எவ்வளவு பேருக்கு நினைவிருக்கும்?

பாட்டு அமைந்த ராகம் என்னங்ணா?


புத்தம் புது பூப் பூத்ததோ… (தளபதி, 1991)


கே ஜே யேசுதாஸ், எஸ் ஜானகி குரல்களில் நெகிழ வைக்கும் - கவிஞர் வாலி எழுதியது..  படத்தின் நீளம் கருதி குறைக்கப்பட்டது.

படத்தின் சூழலுக்குப் ஏற்ற வகையில் பூபாள ராகத்தில் (ரஜினி-பானுப்ரியா திருமணத்திற்குப் பின், ரஜினியின் வாழ்வை மாற்றிப் போடும், விடியலைத் தரும்) இசைஞானி பொருத்தியதை எப்படிப் புகழ்வது?

பாட்டின் விசேஷம்..இரவில் விளக்கணைத்து கேட்டுப் பாருங்கள்.  பூபாள ராகம் தரும் தாலாட்டில் சுகமாய் உறக்கம் வரும்!

இது போன்ற சூழல்களில் இசையமைப்பாளரின் மனநிலை என்னாவாயிருந்திருக்கும்?


இளையராஜாவின் பாடல்களை அருவியாய்ப் பொழிந்து குளிர்ச்சியாய் தந்த ஆர் வி எஸ் ஐயாவிற்கு என்னால் முடிந்த காணிக்கை…

Monday, August 29, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 16

நான் உறங்கும் நாள் வேண்டும்...
சாய்ந்து கொள்ள தோள் வேண்டும்...
என் கண்ணில் நீர் வேண்டும்...
சுகமாக அழ வேண்டும்...!

நன்றி கவிப்பேரரசு அவர்களே....!நன்றி.. ஒவ்வொரு முறை கேட்கும்போதும் இவை அனைத்தும் நம் கூட இருப்பது போல எழுதியமைக்கு! சோகத்தைக் கண்களை தேக்கி வைத்திருக்கும் மாதவி - அனுசரணையாய் சூப்பர் ஸ்டார் - இதமான ஒளிப்பதிவு/இசை...போதாதா? பார்த்துக்கொண்டே இருக்கலாமே!


மெட்டமைத்த-தென்னவோ எண்பதுகளில்...அன்றும் என்றும் இளமையாய் இருப்பது எப்படி?! இசை 'இளைய'ராஜா - இளமைக்கு என்ன குறைச்சல்...?! அதுவும் ஆர்யா, த்ரிஷா இருக்கும்போது 'சர்வம்'-ம் இளமைதானே...காதலை கதையாகவும் சொல்லலாம்...இது போல கவிதையாகவும் சொல்லலாமே?!


மேன்மையான இசை, வளமான பின்னணிக் குரல்கள், நெஞ்சை அள்ளும் வரிகள்...இருந்தும்...'டிப்பிகல் எண்பது' படமாக்கப் பாடல்களில் ஒன்றாய்ப் போனது துரதிர்ஷ்டம்....ஜானகி அம்மாவின் ஹம்மிங்-ஐ ரசிக்காதவர்கள் உண்டோ இங்கு?!

Thursday, August 18, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 13

'பட்டாக்கத்தி பைரவன்' படத்தில் தப்பித்தவறி விழுந்த நல்ல பாடல். கண்ணதாசன் எழுத்து, ராஜா அவர்களின் இசை (வரிகளுக்கு நடுவே சற்று உன்னிப்பாய் கவனியுங்களேன்!), எஸ் பி பி / ஜானகி அவர்களின் ஹம்மிங் உயர்தரம். இவ்வளவு இளமையாக கவிஞர் கண்ணதாசன் 1979-ல் எழுதியிருப்பது ஆச்சர்யம். இந்தப் பாடலுடன் பதிவைத் துவங்குவோம்.


காதல் பாட்டு எப்படி இருக்க வேண்டும்? இளமை, இனிமை, துள்ளல், இசை, மென்மை....எல்லாம் கலந்து ராஜா இசையமைத்த பாடல் 'கண்மணியே, காதல் என்பது...' கவியரசு அவர்களின் வளமையை நினைக்கத் தூண்டுகிறது!


இந்தப் பாடலை யாரால் மறக்க முடியும்? 'அன்பே சிவம்' என்றால் 'அன்பே காதல்'-ம் தானே?! விஜய் பிரகாஷ், சாதனா சர்கம் குரல்களில், வித்யாசாகர் இசையில், வைரமுத்து வரிகளில் 'காதல் பூ வாசம்' எங்கும் பரவி, விரவிக் கிடைக்கிறதல்லவா?!


இதைக் கேட்டு உருகாதார் யார்? இவ்வளவு சின்ன வயசில் இத்துணை அழகான இசையா? ஜி வி பிரகாஷ் இசையில், சங்கர் மகாதேவன், ஸ்ரேயா ஜோடி (எவ்வளவு அருமையாகப் பாடியிருக்கிறார்கள்!) முத்துக்குமார் வரிகள் வெய்யிலில் விளையாடினாலும், தென்றல் வந்து தழுவிய ஃபீலிங்!


இந்தப் பாடல்களில் 'காதல்' தாண்டிய பொதுவான ஒரு அம்சம் உண்டு. என்னதான் அது? பின்னூட்டம் போடுங்கள். அடுத்த பதிவில் சொல்கிறேன் :-)

Wednesday, February 02, 2011

ரஜினியின் அறிமுகப் பாடல்கள் - 5

இடம்# 06
பாடல்# 'ஆட்டோக்காரன்..ஆட்டோக்காரன்..'
படம்# பாட்ஷா
இசை# தேவா
பாடல்# வைரமுத்து
பாடியவர்# எஸ் பி பி

என்ன ஒரு பாட்டு இது?

பாடலுக்கு முன்னால் கொடுக்கப்படும் 'பில்ட்-அப்' என்ன, ஜனகராஜ் வாய்ஸில் 'இன்னிக்கு ஆயுத பூஜை இல்ல, அண்ணன் ஆட்டோ ஸ்டாண்டில் பட்டை கெளப்பிகிட்டு இருப்பாரு!' என்று முடித்தவுடன் துவங்கும் 'ராப்' வகைப்பாடல் இசையமைப்பின் மேன்மைக்கு ஒரு சான்று.



'இரக்கமுள்ள மனசுக்காரண்டா, நான் எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா' என்று எஸ் பி பி, ரஜினிக்காக முழங்கும்போது வெகுஜனக் கதாநாயகனின் முத்திரையின் / கவிப்பேரரசு வரிகளின் ஆளுமையும் தெரியும்.

பாடல் வரிகளுக்கு இங்கே சொடுக்கவும்.

Thursday, December 16, 2010

ரஜினியின் அறிமுகப் பாடல்கள் - 2

தர வரிசை# 09
பாடல்# 'மனிதன்..மனிதன்..இவன்தான் மனிதன்...'
படம்# மனிதன்
இசை# சந்திரபோஸ்
பாடல்# வைரமுத்து
பாடியவர்# மலேஷியா வாசுதேவன்

இந்தப் பாடலுக்குப் பின்னால் சின்ன சுவாரஸ்ய குட்டிக் கதை.

'வானத்தைப் பார்த்தேன்' என்கிற மற்றுமொரு தத்துவப் பாடல் இருப்பதால், பாடலைச் சேர்க்க வழியில்லாமல் அப்படியே வைத்திருந்ந்தாகவும், ரஜினிகாந்த் தலையீட்டால் 'டைட்டில் ஸாங்' என்றழைக்கப்படும் 'தலைப்பு பாடல்'-ல் ரஜினியின் வாயசைப்போடு வெளிவந்ததாகவும் ஏவி எம் சரவணன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார் (ஏவி எம் 60 சினிமா, ஏ வி எம் சரவணன், ராஜராஜன் பதிப்பகம்).

வாழும்போது செத்துச் செத்துப் பிழைப்பவன் மனிதனா...
வாழ்ந்தபின்னும் பேரை நாட்டி நிலைப்பவன் மனிதனா...
என்கிற வைரமுத்து வரிகள் வீர்யம் மிக்கவை, எளிதில் புரிந்து கொள்ளக்கூடியவையும் கூட.

அதென்னமோ தெரியவில்லை, சந்திரபோஸ்/வைரமுத்து கூட்டமைப்பில் உருவான பாடல்களில் வரிகளும், இசையும் இழைந்தோடுவது நிச்சயமான உண்மை.