அந்தப் பாடல் எடுக்கப்பட்ட விதம் ஏனோ எனக்குப் பிடிக்கவில்லை.
’விக்’எனப்படும் செயற்கை முடி தரிப்பு, புருவங்களில் அடங்கும் பெரீய்ய மூக்குக் கண்ணாடி, பைஜாமா, ஜிப்பா, மேலே அரைகுறையாய் அங்கவஸ்திரம் (அ) ஷால்... இல்லையில்லை ஏதோ ஒன்று. அருகிலேயே பேரிளம் வயதில் தங்கை. ஐம்பது வயது ‘திருமணம்’ ஆகாத அண்ணன், முப்பது வயது ‘திருமணம்’ ஆகாத தங்கையை நோக்கிப் பாடுவதாக அமைந்த பாடல். பார்க்க நேர்ந்தால் உடனே சேனலை மாற்றிவிடுவேன். பாசமலர் படத்தில் ‘மலர்களைப் போல்..’ பாட்டமைப்புக்கும் இதற்கும்தான் எவ்வளவு வித்தியாசம். சிவாஜியின் வயது உட்பட :-)
இந்தப் பாடலை ‘கண்ணதாசன் பாடல்களில் கடவுள் தத்துவங்கள்’ புத்தகத்தில் ‘பி என் பரசுராமன்’ (அல்லயன்ஸ், ரூ 90) அவர்கள் விளக்கம் அளித்தது கண்டு வியந்து போனேன். ‘சே! காட்சிக்காகப் பாடலை இதுவரை கேட்காமல் போனேனே!’ என வெட்கப்பட்டேன்.