Showing posts with label கண்ணதாசன். Show all posts
Showing posts with label கண்ணதாசன். Show all posts

Monday, July 15, 2013

(பாடல் வரிகளில்) பரதேசி டைரிக் குறிப்பு - 51


தோழர் பாலா அவர்கள் கவியரசு / கவிப்பேரரசு அவர்களின் கற்பனை ஒன்றாயிருக்கிறது / நன்றாயிருக்கிறது என்று சிலாகித்திருந்தார்.  அதை இங்கு தந்திருக்கிறேன்.


வைரமுத்துவின் வைர வரிகள்:
(நினைவெல்லாம் நித்யா-ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்)

"வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்.
இலையுதிர்க் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்."
கண்ணதாசனின் "ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் இருந்தும் என்ன? என் வேரென நீயிருந்தாய் அதில் நான் வீழ்ந்துவிடாதிருந்தேன்" என்ற வரிகளுக்கு இணையானவை இவ்வரிகள்.

இது போன்ற இரண்டு பாடல்கள் என்னுள் கொஞ்ச நாட்களாய் உழன்று கொண்டிருந்தன. 

Saturday, June 29, 2013

கண்ணதாசன் பாடல்களில் கடவுள் தத்துவங்கள் - 2

அந்தப் பாடல் எடுக்கப்பட்ட விதம் ஏனோ எனக்குப் பிடிக்கவில்லை.

’விக்’எனப்படும் செயற்கை முடி தரிப்பு, புருவங்களில் அடங்கும் பெரீய்ய மூக்குக் கண்ணாடி, பைஜாமா, ஜிப்பா, மேலே அரைகுறையாய் அங்கவஸ்திரம் (அ) ஷால்... இல்லையில்லை ஏதோ ஒன்று.  அருகிலேயே பேரிளம் வயதில் தங்கை.  ஐம்பது வயது ‘திருமணம்’ ஆகாத அண்ணன், முப்பது வயது ‘திருமணம்’ ஆகாத தங்கையை நோக்கிப் பாடுவதாக அமைந்த பாடல்.  பார்க்க நேர்ந்தால் உடனே சேனலை மாற்றிவிடுவேன். பாசமலர் படத்தில் ‘மலர்களைப் போல்..’ பாட்டமைப்புக்கும் இதற்கும்தான் எவ்வளவு வித்தியாசம்.  சிவாஜியின் வயது உட்பட :-)

இந்தப் பாடலை ‘கண்ணதாசன் பாடல்களில் கடவுள் தத்துவங்கள்’ புத்தகத்தில் ‘பி என் பரசுராமன்’ (அல்லயன்ஸ், ரூ 90) அவர்கள் விளக்கம் அளித்தது கண்டு வியந்து போனேன்.  ‘சே! காட்சிக்காகப் பாடலை இதுவரை கேட்காமல் போனேனே!’ என வெட்கப்பட்டேன்.

கண்ணதாசன் பாடல்களில் கடவுள் தத்துவங்கள் - 1

    ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்றான்
    ஒரு மனிதன் வாழ்வைக் கொடுமை என்றான்

என்று கண்ணதாசன் அமைக்கவில்லை.


இப்படி அமைந்திருந்தாலும், அது இராகத்திற்கோ,  தாளத்திற்கோ தகராறு செய்யவில்லை; ஒத்துத்தான் போகிறது.  வேறு யாராயிருந்தாலும் இப்படித்தான் வார்த்தைகளை அமைத்திருப்பார்கள்.

Wednesday, April 18, 2012

அத்தியாயம் ஒன்று; மைசூர் பாகு

ரயிலில் ஆளே இல்லாமல் ஒண்டியாய் பயணம் செய்த அனுபவம் உண்டா?  எனக்கு மிக அரிதான, அருமையான காலைப் பயணம் ரயிலில் – பெங்களூர்-மைசூர்- நேற்று வாய்த்தது.



6.00 மணிக்குக் கிளம்பிய காவேரி எக்ஸ்பிரஸ் ‘ரெண்டாம் வ(கு)ப்பு’ பெட்டியின் ஆறு இருக்கைகள் எனக்குச் சொந்தம்.  கம்பெனி விஷயமாகப் போனாலும் ‘ரெண்டாம் வகுப்பு’ ராசி என்னை விடுவதாயில்லை! 



சில்லென்ற முகத்தை வருடிப் போகும் காற்றில், கையில் சில்லென்று ‘மாஸா’ / கண்ணதாசன் வனவாசம் புத்தகம்.  போதாதா வாழ்க்கைக்கு?




எத்துணை முறை படித்தாலும் அலுக்காத புத்தகங்களில் கண்ணதாசன் வனவாசம் உண்டு.  ஒவ்வொரு முறை படிக்கும்போதும், நெகிழ்ந்து, மகா கவிஞனைக் கண்டு அயராமல் இருக்க முடியவில்லை.  மகாத்மா காந்தியடிகள் அவர்களின் சுயசரிதைக்குப் பின்னர், உண்மைக்கு வெகு அருகில், ‘பாசாங்கு’ இல்லாமல் (சங்கர் அண்ணா, கவனிங்கோ!) எழுதப்பட்ட வனவாசம் – ’அடேங்கப்பா’ ரகம்!


நம்மில் எத்துணை பேர் ‘நல்லவன்’ என நிரூபிக்க எப்படியெல்லாம் முயற்சிக்கிறோம்?  முகப்புத்தகத்தின் சில பக்கங்களைப் பார்த்தாலே போதும்.  ‘நான் நியாயவான், தர்மத்தின் தலைவன், உண்மையின் மறுபக்கம்’ என்கிற வகையில் படைப்புகள் ஒவ்வொரு நொடிகளிலும் படைக்கப்படுகின்றன.  தன்னுடைய அழுக்கை நெஞ்சிலே சுமந்து, நல்லவற்றை மட்டுமே வெளிக்காட்டி நடந்து கொள்வதுதான் நேர்மையா?  இதில் சிலர் ‘கண்ணதாச’னைப் படித்தவர்கள் என்று எண்ணும்போது வேதனையாக இருக்கிறது.

’திறந்த புத்தக’மாய் அமைந்த கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை நமக்கு ஒரு பாடம்.  அவரே சொல்வது போல ‘எப்படியெல்லாம் வாழக்கூடாது’ என்கிற பாடம்.  முரண்பாடு கொண்டவன்தான் மனிதன் என்பதைக் கோடிட்டு அவரது வனவாசம் காட்டுகிறது. ‘நம்மால் இப்படி அம்மணமாய் இருக்க முடியுமா?’ என்கிற விடை காணா மிகப் பெரிய கேள்வி சூழ்கிறது.

தனிமையான ரயில் பயணம், வனவாசத்துடன் அமைந்தது எதிர்பாரா மகிழ்ச்சி.  வாழ்க்கையின் சில அற்புதத் தருணங்கள் இப்படித்தான் திட்டமிடாமல் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன.  எல்லோருக்கும்.


பெண்களைக் கொண்ட, சுவாரஸ்ய நிகழ்வுகளைக் கொண்ட இரண்டாம் அத்தியாயம் நாளை.

Monday, October 17, 2011

கவியரசர் நினைவு தினம்!

கண்ணனைக் கன்னியாக்கியவன்...




கேளாமல் காதலைத் தர வைத்தவன்....




திருப்பித் தர முடியாத செல்வத்தை இறைத்தவன்...




பாட்டுக்கு மெட்டா, இல்லை மெட்டுக்கு பாட்டா...?




கோப்பையை நிறைத்து வாழ்க்கையைத் தொலைத்தவன்...


Thursday, August 18, 2011

பரதேசியின் டைரிக் குறிப்பு - 13

'பட்டாக்கத்தி பைரவன்' படத்தில் தப்பித்தவறி விழுந்த நல்ல பாடல். கண்ணதாசன் எழுத்து, ராஜா அவர்களின் இசை (வரிகளுக்கு நடுவே சற்று உன்னிப்பாய் கவனியுங்களேன்!), எஸ் பி பி / ஜானகி அவர்களின் ஹம்மிங் உயர்தரம். இவ்வளவு இளமையாக கவிஞர் கண்ணதாசன் 1979-ல் எழுதியிருப்பது ஆச்சர்யம். இந்தப் பாடலுடன் பதிவைத் துவங்குவோம்.


காதல் பாட்டு எப்படி இருக்க வேண்டும்? இளமை, இனிமை, துள்ளல், இசை, மென்மை....எல்லாம் கலந்து ராஜா இசையமைத்த பாடல் 'கண்மணியே, காதல் என்பது...' கவியரசு அவர்களின் வளமையை நினைக்கத் தூண்டுகிறது!


இந்தப் பாடலை யாரால் மறக்க முடியும்? 'அன்பே சிவம்' என்றால் 'அன்பே காதல்'-ம் தானே?! விஜய் பிரகாஷ், சாதனா சர்கம் குரல்களில், வித்யாசாகர் இசையில், வைரமுத்து வரிகளில் 'காதல் பூ வாசம்' எங்கும் பரவி, விரவிக் கிடைக்கிறதல்லவா?!


இதைக் கேட்டு உருகாதார் யார்? இவ்வளவு சின்ன வயசில் இத்துணை அழகான இசையா? ஜி வி பிரகாஷ் இசையில், சங்கர் மகாதேவன், ஸ்ரேயா ஜோடி (எவ்வளவு அருமையாகப் பாடியிருக்கிறார்கள்!) முத்துக்குமார் வரிகள் வெய்யிலில் விளையாடினாலும், தென்றல் வந்து தழுவிய ஃபீலிங்!


இந்தப் பாடல்களில் 'காதல்' தாண்டிய பொதுவான ஒரு அம்சம் உண்டு. என்னதான் அது? பின்னூட்டம் போடுங்கள். அடுத்த பதிவில் சொல்கிறேன் :-)

Monday, December 20, 2010

ரஜினியின் அறிமுகப் பாடல்கள் - 3

இடம்# 08
பாடல்# 'ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்..'
படம்# முள்ளும் மலரும்
இசை# இளையராஜா
பாடல்# கண்ணதாசன்
பாடியவர்# எஸ் பி பி



இயக்குனரின் நடிகர் என்கிற காலகட்டத்தில் ரஜினி நடித்த படம் 'முள்ளும் மலரும்'. தண்ணியடித்து விட்டு ரஜினி பாடுவதாய் அமைந்திருந்த இப்பாடலை

'ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே...
நாந்தாண்டா என் மனசுக்கு ராஜா, வாங்குங்கடா வெள்ளி கூஜா'

எனத் துவங்கி, முழுதும் 'பிதற்றலாக'வே எழுதியிருந்தார் கவியரசு! ('பட்டு' திருந்தியவராயிற்றே, கேட்கவா வேண்டும்?!) அப்படியிருந்தாலும் கடைசியில்...

'நீ கேட்டா கேட்டத கொடுக்குற சாமியைப் பாத்து கேளுங்கடா!'

என்று முடித்திருப்பதை என்னவென்று சொல்வது?!நடித்திருப்பவருக்கும் 'தண்ணி' பட்ட பாடு, கேட்கவா வேண்டும்?!

கையாலாகாத கோபத்தில், கண்டபடி குடித்துவிட்டு, ஆடிப்பாடும் இந்தப் பாட்டு இயக்குனருக்காகவும், இசைக்காகவும் எட்டாவது இடத்தில்!


பாடலின் வரிகளுக்கு இங்கே சொடுக்கவும்.