Showing posts with label பஞ்சு. Show all posts
Showing posts with label பஞ்சு. Show all posts

Thursday, December 15, 2011

ரஜினி டூயட்ஸ் - VII


ரஜினி டூயட்ஸ் - 19

'சோலோ' எஸ் பி பி-யாய்ப் போனாலும், இரணடு டூயட்கள் முத்துக்கள் அல்லவா? ஆனாலும், 'காதலின் தீபத்தில்' மங்கிப் போன 'என் வாழ்விலே வரும் அன்பே வா'-வுக்கே என் ஓட்டு. இளையராஜாவின் பசுமையான இசையில், ரஜினி மாதவி இணைப்பில் முதன் முதலாய் அமைந்த சூப்பர் காதல் பாட்டு....பஞ்சு சார் வரிகளில்...


ரஜினி டூயட்ஸ் - 20

இதை, இதை எப்படி மிஸ் பண்ணேன்??! பாட்டைக் கேட்பதில், பார்ப்பதில் அவ்வளவு சுகம். ரஜினி / சிலுக்கு ஐட்டம் நெம்பர் இல்லாத அற்புத டூயட். இளையராஜா இசையும், எஸ் பி பி / ஜானகியம்மா வாய்ஸும், சிலுக்கின் presence-ம் அடடா...மேல 'பேசக் கூடாது'!! ரஜினிக்கு 'அடுத்த வாரிசு' உண்டா என்ன?! அது சரி, பாட்டு எழுதினது யாருங்க?


ரஜினி டூயட்ஸ் - 21

மகேந்திரன் சார் இயக்கம், இளையராஜா இசை, ரேவதி நடிப்பு இவர்களோடு சேர்ந்த ரஜினி காந்தம்! பாட்டுக்கு என்னால எதுவுமே எழுத முடியாது...அதற்கும் அப்பால் அமைந்த அருமைப் பாட்டு...தலைவர் வாசம் வீசும் 'தாழம்பூ' பாட்டு...


-தொடரும்

Sunday, December 11, 2011

ரஜினி டூயட்ஸ் - IV


ரஜினி டூயட்ஸ் - 10

காஷ்மீரப் பின்னணியில் ரஜினி பாடிய ஒரு டூயட் நமக்கெல்லாம் தெரியும். இன்னொண்ணு? அதாம்பா இது-னு சொல்லி நான் ஏமாத்த மாட்டேன்...ரஜினி / ஸ்ரீப்ரியா ஜோடி, மெல்லிசை மன்னர் இசை, கண்ணதாசன் பாட்டு, எஸ் பி பி, வாணி ஜெயராம் பாடிய பொல்லாதவன் படம், 'அதோ வாராண்டி, வாராண்டி வில்லேந்தி ஒருத்தன்'....பாடலில் காடு, மலை, நதி, ரோடு, குதிரை என எல்லாவற்றிலும் முத்திரை பதிக்கும், லெதர் ஜாகெட்/பான்ட் போட்டு அசத்தும், ரஜினி சாரைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்....!


ரஜினி டூயட்ஸ் - 11

புதிதாய்க் கல்யாணம் ஆகி, தேனிலவு கொண்டாடும் தம்பதியினரை நம் முன்னே நிறுத்தும் பாடல். இசைஞானி(ஒரு மாறுதலுக்காக) / ஜானகியம்மா குரல்களில், பஞ்சு சார் எழுத்தில், கழுகு படத்தில் 'பொன் ஓவியம்' பாடல்...ரஜினி/ரதி அப்படி ஒரு ஜோடிப் பொருத்தம் பாட்டில் தெரியும்...தலைவர் முதலிரவைக் கூட 'இஷ்டைல்'-ஆ கொண்டாடுவார் போல...! அத்தனை இளமை!! பேருந்தில் எடுக்கப்பட்ட பொன் ஓவியம் எங்காத்து மாமிக்கு கூட புடிச்ச பாட்டாக்கும்...!


ரஜினி டூயட்ஸ் - 12

வரும் பாட்டுக்கு அறிமுகம் தேவைதானா? இசைஞானி, யேசுதாஸ், ஜானகியம்மா, கண்ணதாசன், ரஜினி, மேனகை என எல்லோருமே மென்மையாய் அடக்கி வாசித்தாலும், பாட்டு இன்றும் பட்டைய கெளப்புது! 'ராமனின் மோகனம்' பாட்டு, ரஜினி சார் எட்ட நின்று காதல் யாசிக்கும் பாட்டு, 'நெற்றிக்கண்' பெசல் பாட்டு!


-தொடரும்

Saturday, December 10, 2011

ரஜினி டூயட்ஸ் - II


ரஜினி டூயட்ஸ் - 4

'நேரம் வந்தாச்சு, நல்ல யோகம் வந்தாச்சு' - இல்லையா பின்னே? எம் ஜி ஆருக்கு திருப்பு முனை கொடுத்த தேவரின் பார்வை ரஜினி பக்கம் திரும்பியாச்சு...! 'தாய் மீது சத்தியம்' படத்தில், வித்தியாச ஹேர் ஸ்டைல்-ல், ரஜினி சார் பட்டிக்காட்டு உடையில் (ஆரஞ்சு வண்ணம்!), ஸ்ரீப்ரியாவுடன் பாடி ஆடும் சூப்பர் ஹிட் பாடல். பாமரருக்கும் புரியும்படியான எளிமையான வரிகளில் மா ரா பரணி எழுதியிருக்கும் பாடல். சங்கர் கணேஷ் இசையமைத்து, டி எம் எஸ் அய்யா/ சுசீலாம்மா பாடிய 'ட்ரியோ' பாடல் இதோ!



ரஜினி டூயட்ஸ் - 5

வெளிநாட்டில் எடுக்கப்பட்ட ரஜினி டூயட் பாடல்களில் நிச்சயம் 'ப்ரியா'வுக்கு இடம் உண்டு. 'என் உயிர் நீதானே' பாடலில்', யேசுதாஸ், ஜெஸ்ஸி, பஞ்சு ஸார் வரிகள், இழையோடும் இசை ஞானியின் இசை, படமாக்கப்பட்ட சூழல் என மென்மைக்கு முதலிடம். ரஜினி நடை, உடை, பாவனை - ஆண்மை, கம்பீரம் - தெரியும். பாட்டைப் பார்த்தபின் 'என் உயிர் நீதானே' என ரஜினி சாரைப் பார்த்து நாமும் பாடத் துவங்கி விடுவோம்!


ரஜினி டூயட்ஸ் - 6

இந்தப் பாடலைக் கேட்டவுடன் எனக்கு நினைவுக்கு வந்தவர் இருவர்.... முதல்வர்....திரு மலேசியா வாசுதேவன் அவர்கள் (என்ன ஒரு ஓபனிங்!) இரண்டாமவர்...திரு ரஜினிகாந்த் அவர்கள் (மனநிலை பிறழ்ந்து, சரியான பின் நடித்த முதல் படம் இது).
திரு மலேசியா அவர்கள் பாடிய 'அருமை' வெகு ஜனப் பாடல்களின் 'மைல்கல்' பாடல்..கூட எஸ் ஜானகி...கேட்பதற்கு இனிமையோ இனிமை....! ரஜினி, ஸ்ரீதேவி கலக்கல் டூயட்ஸ்-ல் 'ஆகாய ganges'-க்கு நிச்சயம் இடமுண்டு!


-தொடரும்

ரஜினி டூயட்ஸ் - I

ரஜினி சாரோட பொறந்த நாளை முன்னிட்டு...starting today, till monday...அவரோட டூயட் சாங்ஸ் பாப்போமா?!

Picture Courtesy: http://vijayart.blogspot.com

ரஜினி டூயட்ஸ் - 1

எஸ் பி பி பாடிய இந்த பாட்டு பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தலைவர்-க்கு அவர் பாஷையில் சொல்லப்போனால் 'ட்ட்டர்னிங் பாய்ன்ட்' கொடுத்த படம். ரஜினி அரிதாக வேட்டி கட்டிக் கொண்டு, தூரத்தில் நாயகி இருக்க பாடும் சில பாடல்களில் முதன்மையானது. கடோசியில் ஒன்றாகக் குளித்தாலும் ரஜினி காதலில் கூட கண்ணியம் காட்டி, முதுகு மட்டும் தேய்த்து விட்டு, கன்னத்தோடு கன்னம் வைத்து, நாயகியைத் தூக்கிக்கொள்வார்! 'புவனா ஒரு கேள்விக்குறி' படத்தில், இசைஞானி இசையில், பஞ்சு ஸார் வரிகளில் வரும் 'விழியிலே கலந்தது' பாட்டு, பாருங்களேன்... உங்களுக்கு சட்டெனப் பிடித்து போகும்!


ரஜினி டூயட்ஸ் - 2

மியுசிகல் ஃபிலிம். படத்தில் பாட்டுக்கள் நெறைய இருந்தாலும் ரஜினி சாருக்கு ஒதுக்கப்பட்டது ஒண்ணு சோலோ, ஒண்ணு டூயட் - ரெண்டு பாட்டுகள் என்றாலும் 'தலைவர்' பின்னி பெடலெடுத்தார். எஸ் பி பி வாய்ஸ்ல, ரஜினி சாரோட / கீதாவோட இளம் வயசுல, கவியரசு எழுதி, மெல்லிசை மன்னர் இசையமைத்த பாட்டு 'நம்ம ஊரு சிங்காரி'யை 'நினைத்தாலே இனிக்காதா?!

பி.கு - தலைவரால நகைச்சுவை பண்ண முடியும்னு காட்டின மொத படம் இதான்!


ரஜினி டூயட்ஸ் - 3

எஸ் பி பி, எஸ் ஜானகி அவர்கள் பாடின பாட்டு இது. ரஜினி ஸார் ரொம்பவே முயற்சி எடுத்துக்கிட்டு பண்ண பாட்டுன்னும் சொல்லலாம். மூவ்மெண்ட்ஸ் ரொம்பவே வித்தியாசமா இருக்கும், ஸாரோட 'இஷ்டைல்' ரொம்பவே அதிகமா இருக்கும், அப்பப்போ ஃபரீஸ் ஆகி அப்டியே நிற்பதும் சூப்பர்! இளமை ததும்பும் ரஜினியோட நாயகி பிரமீளா. வி குமார் அவர்கள் இசையில், வாலி அய்யா எழுதிய பாடல் 'மதனோத்சவம் ரதியோடுதான்' ரொம்பவே அட்டஹாசம்.




-தொடரும்