Showing posts with label எம் எஸ் வி. Show all posts
Showing posts with label எம் எஸ் வி. Show all posts

Sunday, March 25, 2012

கர்ணன்!


கர்ணன் – நவீன தொழில்நுட்ப வடிவத்தில் மறு பிறவி எடுத்திருப்பதைப் பற்றி எல்லோரும் ’போற்றி’ பலவிதமாய் எழுதி, பேசித் தள்ளும் நிலையில் மற்றுமொரு பதிவு… 

படத்தின் தொழில்நுட்பத்திற்கு ஒன்றும் பெரிதாக மெனக்கிட வேண்டியிருந்திருக்காது.  ராஜ் டிவி வசம் இருந்த டிவிடி பிரிண்ட் / டிஜிட்டல் வடிவமாய் மாற்றுவது அவ்வளவு சிரமமாயிருந்திருக்காது.  Mughal-E-Azam படத்தை வண்ண வடிவமாக்குவதில் உள்ள யத்தனங்கள் நிச்சயம் இருந்திருக்க வாய்ப்பில்லை.  அதனால்தான், என்னால் கர்ணனின் புதிய வடிவத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

‘சிவாஜி’ படம் என்று படு அமர்க்களமாய் விளம்பரம்.  உண்மையிலேயே ‘சிவாஜி’ படம் மட்டும்தானா? 

-ஈஸ்ட்மென் கலர் (1964-ல் இது சாதனை)
-கிருஷ்ணராய் படம் நெடுக கம்பீரமாய் வலம் வரும் என் டி ஆர்  
-இரட்டையர் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசை
-இலக்கியம், காதல், பக்தி, கொடை, வீரம் என சமூக உணர்வுகள் கொண்டு எழுதப்பட்ட கவியரசுவின் வீர்யம் மிக்க வரிகள். 

ஆக, இவற்றோடு ‘சிவாஜி’யின் மிளிரும் நடிப்பைக் கொண்டதுதான் ‘கர்ணன்’. 

கர்ணனின் பாத்திரப்படைப்பு படத்தில் குழப்பம்தான்.  நல்லவனா? கெட்டவனா?  கெட்டவனாய்க் காண்பிக்க முடியுமா? கதாநாயகன் சிவாஜியாயிற்றே?! இமேஜ் என்னவாகும்?! - (இன்று டெண்டுல்கரை ‘நீக்க’ முடியாத சிக்கல் போல!)  இதனாலேயே, கர்ணனின் புத்திரனை பாண்டவர்கள் கொல்வது போல (புராணத்தில் இல்லாத) ஒவ்வாத கற்பனைக் காட்சிகளைப் புகுத்தி, ‘கர்ண’னை  உருவாக்க வேண்டிய சூழ்நிலை. 
எனக்குத் தெரிந்தவரையில் வியாசர் கர்ணன் பாத்திரத்தைத் தீயவனாகவே சித்திரித்திருக்கிறார்.  வில்லிபுத்தூரார் பாரதம் கர்ணனை ‘கொடையிற் சிறந்தோன்’ என்று போற்றிப் பாடுகிறது. 

மிகப் பலவீனமான பாத்திரப் புனைவான ‘கர்ணன்’ படம் ‘வேட்டைக்காரன்’ முன் தாக்குப் பிடிக்க முடியாமல் போனது.  தேவரின் தாய் செண்டிமெண்ட், எம் ஜி ஆர் ஃபார்முலா, கறுப்பு வெள்ளை முன் பி ஆர் பந்துலுவின் வண்ணம் நீர்த்துப் போனது எளிய உண்மை. 

சிவாஜியின் அற்புத நடிப்பைக் கொண்ட படங்கள் எவ்வளவு இருக்கின்றன?  அதையெல்லாம் விட்டுவிட்டு, ‘கர்ணன்’ படத்தை மட்டுமே ‘தொழில்நுட்பம்’ என்கிற பம்மாத்து வேலை செய்து, சிலாகிப்பதன் காரணம் என்ன?  புரிந்து கொள்ளத்தான் முடியவில்லை. 

Wednesday, December 14, 2011

ரஜினி டூயட்ஸ் - V


ரஜினி டூயட்ஸ் - 13

ஏ வி எம் செட். எம் எஸ் வி இசை. கண்ணதாசன் பாடல். எஸ் பி பி / சுசீலாம்மா குரல்கள். இளமை சொட்டும் ஸ்ரீதேவி. 'விடிய விடிய சொல்லித் தருவேன்' என்கிறார் போக்கிரி ராஜா! கூடை அழகு பக்கத்தில் இருந்தாலும் கண்ணியமாய்க் காதல் செய்யும் ரஜினி சார், உங்களைப் பாராட்ட வார்த்தை இல்லை. என்றும் இளமை ததும்பும் பாடல்...இதற்கு மேல் என்ன சொல்ல?!


ரஜினி டூயட்ஸ் - 14

இளமை சொட்டும் ஸ்ரீதேவி. ஆனால், இந்த முறை அவுட்டோர், இளையராஜா இசை. வாலி வரிகள். எஸ் பி பி, எஸ் ஜானகி கொஞ்சும் குரல்கள். 'தனிக்காட்டு ராஜா'வாய் ஸ்ரீதேவியை ஆளும் ரஜினி சார்! இசை நம்மை தாலாட்டும், ரஜினி / ஸ்ரீதேவி நெருக்கத்தில் வீசும் 'சந்தனக் காற்று'...சூப்பர் சந்தோஷப் பாட்டு!


ரஜினி டூயட்ஸ் - 15

மென்மையா இதுவரைக்கும் பாத்த ரஜினி டூயட்ஸ் இப்போ சடார்னு லேன் மாறி 'குத்துப் பாட்டு'க்குப் போவுது...! ரஜினி சார், ராதாவோட போட்ட 'குத்து' பலருக்கும் தெரியாத பாட்டு. 'உரிமைக்குரல் எம் ஜி ஆர்' கட்டு போல 'வேட்டி கட்டி' ராதாவோட வரிந்து கட்டி தலைவர் ஆடும், வாலி அய்யா லைன்ஸ்-க்கு 'ஒரே மீனிங்'தான்!


-தொடரும்

Sunday, December 11, 2011

ரஜினி டூயட்ஸ் - IV


ரஜினி டூயட்ஸ் - 10

காஷ்மீரப் பின்னணியில் ரஜினி பாடிய ஒரு டூயட் நமக்கெல்லாம் தெரியும். இன்னொண்ணு? அதாம்பா இது-னு சொல்லி நான் ஏமாத்த மாட்டேன்...ரஜினி / ஸ்ரீப்ரியா ஜோடி, மெல்லிசை மன்னர் இசை, கண்ணதாசன் பாட்டு, எஸ் பி பி, வாணி ஜெயராம் பாடிய பொல்லாதவன் படம், 'அதோ வாராண்டி, வாராண்டி வில்லேந்தி ஒருத்தன்'....பாடலில் காடு, மலை, நதி, ரோடு, குதிரை என எல்லாவற்றிலும் முத்திரை பதிக்கும், லெதர் ஜாகெட்/பான்ட் போட்டு அசத்தும், ரஜினி சாரைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்....!


ரஜினி டூயட்ஸ் - 11

புதிதாய்க் கல்யாணம் ஆகி, தேனிலவு கொண்டாடும் தம்பதியினரை நம் முன்னே நிறுத்தும் பாடல். இசைஞானி(ஒரு மாறுதலுக்காக) / ஜானகியம்மா குரல்களில், பஞ்சு சார் எழுத்தில், கழுகு படத்தில் 'பொன் ஓவியம்' பாடல்...ரஜினி/ரதி அப்படி ஒரு ஜோடிப் பொருத்தம் பாட்டில் தெரியும்...தலைவர் முதலிரவைக் கூட 'இஷ்டைல்'-ஆ கொண்டாடுவார் போல...! அத்தனை இளமை!! பேருந்தில் எடுக்கப்பட்ட பொன் ஓவியம் எங்காத்து மாமிக்கு கூட புடிச்ச பாட்டாக்கும்...!


ரஜினி டூயட்ஸ் - 12

வரும் பாட்டுக்கு அறிமுகம் தேவைதானா? இசைஞானி, யேசுதாஸ், ஜானகியம்மா, கண்ணதாசன், ரஜினி, மேனகை என எல்லோருமே மென்மையாய் அடக்கி வாசித்தாலும், பாட்டு இன்றும் பட்டைய கெளப்புது! 'ராமனின் மோகனம்' பாட்டு, ரஜினி சார் எட்ட நின்று காதல் யாசிக்கும் பாட்டு, 'நெற்றிக்கண்' பெசல் பாட்டு!


-தொடரும்

Saturday, December 10, 2011

ரஜினி டூயட்ஸ் - I

ரஜினி சாரோட பொறந்த நாளை முன்னிட்டு...starting today, till monday...அவரோட டூயட் சாங்ஸ் பாப்போமா?!

Picture Courtesy: http://vijayart.blogspot.com

ரஜினி டூயட்ஸ் - 1

எஸ் பி பி பாடிய இந்த பாட்டு பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தலைவர்-க்கு அவர் பாஷையில் சொல்லப்போனால் 'ட்ட்டர்னிங் பாய்ன்ட்' கொடுத்த படம். ரஜினி அரிதாக வேட்டி கட்டிக் கொண்டு, தூரத்தில் நாயகி இருக்க பாடும் சில பாடல்களில் முதன்மையானது. கடோசியில் ஒன்றாகக் குளித்தாலும் ரஜினி காதலில் கூட கண்ணியம் காட்டி, முதுகு மட்டும் தேய்த்து விட்டு, கன்னத்தோடு கன்னம் வைத்து, நாயகியைத் தூக்கிக்கொள்வார்! 'புவனா ஒரு கேள்விக்குறி' படத்தில், இசைஞானி இசையில், பஞ்சு ஸார் வரிகளில் வரும் 'விழியிலே கலந்தது' பாட்டு, பாருங்களேன்... உங்களுக்கு சட்டெனப் பிடித்து போகும்!


ரஜினி டூயட்ஸ் - 2

மியுசிகல் ஃபிலிம். படத்தில் பாட்டுக்கள் நெறைய இருந்தாலும் ரஜினி சாருக்கு ஒதுக்கப்பட்டது ஒண்ணு சோலோ, ஒண்ணு டூயட் - ரெண்டு பாட்டுகள் என்றாலும் 'தலைவர்' பின்னி பெடலெடுத்தார். எஸ் பி பி வாய்ஸ்ல, ரஜினி சாரோட / கீதாவோட இளம் வயசுல, கவியரசு எழுதி, மெல்லிசை மன்னர் இசையமைத்த பாட்டு 'நம்ம ஊரு சிங்காரி'யை 'நினைத்தாலே இனிக்காதா?!

பி.கு - தலைவரால நகைச்சுவை பண்ண முடியும்னு காட்டின மொத படம் இதான்!


ரஜினி டூயட்ஸ் - 3

எஸ் பி பி, எஸ் ஜானகி அவர்கள் பாடின பாட்டு இது. ரஜினி ஸார் ரொம்பவே முயற்சி எடுத்துக்கிட்டு பண்ண பாட்டுன்னும் சொல்லலாம். மூவ்மெண்ட்ஸ் ரொம்பவே வித்தியாசமா இருக்கும், ஸாரோட 'இஷ்டைல்' ரொம்பவே அதிகமா இருக்கும், அப்பப்போ ஃபரீஸ் ஆகி அப்டியே நிற்பதும் சூப்பர்! இளமை ததும்பும் ரஜினியோட நாயகி பிரமீளா. வி குமார் அவர்கள் இசையில், வாலி அய்யா எழுதிய பாடல் 'மதனோத்சவம் ரதியோடுதான்' ரொம்பவே அட்டஹாசம்.




-தொடரும்