Saturday, May 20, 2006

கலர் டிவி, கேஸ் அடுப்பு, இரண்டு ரூபாய்க்கு கிலோ அரிசி, இரண்டு ஏக்கர் நிலம், விவசாயக் கடன் ரத்து என மலிவான இலவச அறிவிப்புகளுக்குப் பலியான தமிழக மக்கள் 'குத்து' 'குத்து'னு குத்தியதில் தி.மு.க. கூட்டணி இன்று (பகுத்தறிவு பாசறை சித்ரா பௌர்ணமி, 9-10.30 ராகுகாலத்திற்குப் பின்) பதவியேற்று, அரியணையில் அமர்ந்து விட்டது. யோசித்துப் பார்த்ததில், இலவச அறிவிப்பு வந்தபோதும் ஏற்காத மக்கள், நிதியமைச்சர் திரு ப சிதம்பரம் அவர்கள் 'இது சாத்தியம்'தான் என்று சொன்னவுடன் நம்பி விட்டார்கள் என்றே தோன்றுகிறது! தி.மு.க. தலைவர் திரு கருணாநிதி விடுத்துள்ள ஒரு அறிக்கை இதோ:

'தேர்தல் அறிக்கையில் வாக்காளர்களுக்கு பல உறுதி மொழிகளை, பிரதமர் மன்மோகன் சிங்கை நம்பித்தான் தந்திருக்கிறேன். உறுதி மொழிகளை நிறைவேற்றும் வரத்தை அவரிடம் வாங்கிவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது!'

ஈஸ்வரோ ரக்ஷது!

பின்குறிப்பு:
1. 70 சதவீத வாக்கு பதிந்திருக்கிறது.

2. பாமக தேயத் துவங்கியிருக்கிறது.

3. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நிலைக்க திமுக தயவு தேவைப்படுவது போல், இங்கு காங்கிரஸ் தயவு திமுகவுக்கு மிக மிக அவசியம். ஆக, காங்கிரஸ் 'நிபந்தனையற்ற ஆதரவு' தெரிவித்ததின் பின்னணி, திமுக இனி மத்தியில் எடுக்கப்படும் முடிவுகளுக்குக் கமுக்கமாக ஆதரவு தர வேண்டும் என்பதே!

4. பாமக, மதிமுக அணிகளுக்கு ஈடான வாக்குகளை (சுமார் 27 இலட்சம்) விஜயகாந்த் தலைமையிலான ஆறு மாத தேதிமுக கட்சி பெற்றிருக்கிறது. வன்னியர்களின் பாசறையான விருத்தாசலத்தில் மிகத் தைரியமாகப் போட்டியிட்டு 15000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற விஜயகாந்த் அவர்களின் துணிச்சலுக்கு ஒரு சலாம்! 2011 தேர்தலில் கவனிக்கப் பட வேண்டிய இடத்தில் நிச்சயம் தேதிமுக இருக்கும் என்கிற நம்பிக்கை தனித்து நின்றிருப்பதின் மூலம் வந்திருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

5. அது சரி, இனி வைகோ, சரத், ராதிகா, விசு, கதி?!!

No comments: