பொதுவாய் நான் குலதெய்வத்தைத் தரிசிக்க வேண்டி குணசீலம், தங்கையைப் பார்க்க வேண்டி தஞ்சை, இஷ்டதெய்வத்தைத் தரிசிக்க வேண்டி சுவாமிமலை, ஏதேனும் விசேஷத்திற்கு வேண்டி சென்னை தவிர எங்கும் என் குடும்பத்தை அழைத்துச் சென்றதில்லை. இம்முறை 'பாச்சா' சிவாவிடம் பலிக்கவில்லை! இதனால், கோடை விடுமுறையில் கேரளா மற்றும் கன்யாகுமரி பிரயாணிப்பதாய் முடிவு செய்தோம்.
ட்ரெயின் காலை பத்து மணிக்கு (2 மணி நேரம் தாமதம்) வந்ததில் வெய்யில் ஏறி, (ஏஸியிலிருந்து) திருச்சூரில் காலை வைத்தவுடன் சுட்டெரித்தது. ட்டோ பிடித்து வந்தால், திருச்சூர் பிரசித்தி பெற்ற 'திருச்சூர் பூரம்' பண்டிகைக்கு தயாராகிக் கொண்டிருந்தது. வாடகைக்கு அறை கிடைப்பதும் 'சிரமம்' என்று தெரிந்ததில், 'பாரத் க•பே'யில் டிபனை முடித்து விட்டு குருவாயூருக்குக் காரில் பயணமானோம்.
சரியாய் 11.30 மணிக்கு குருவாயூர் வந்து சேர்ந்தோம். ஹோட்டல் அயோத்யா-வில் ரூம் போட்டு விசாரித்ததில் 12 மணிக்கே கோயில் மூடப்படும் (தவறான தகவல்!) என்றதில், 20 நிமிஷத்தில் எல்லோரும் குளித்து விட்டு ரெடி! அரக்கப் பரக்க கோயிலுக்குச் சென்றால் கூட்டம் நெரிந்தது!
தாகத்தால் தவிக்கும் அன்பர்க்கு வேண்டி வெட்டி வேர் சேர்க்கப்பட்ட 'சுடுவெள்ளம்' அண்டாக்களில் நிரம்பியிருக்க, கர்ம சிரத்தையாய் ஒரு சேவகர் டம்ளர்களில் ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தார். இரு புற தந்தத்துடன் ஒரு யானை கம்பீரமாய் நின்றிருந்தது. பிரஸாதக் கவுண்டர்களில் வரிசை நீண்டிருந்தது. துலாபார காணிக்கை தர வேண்டி வரிசையில் மக்கள் அமைதியாய்க் காத்துக் கொண்டிருந்தார்கள்.
துவிஜஸ்தம்பத்திலிருந்து பார்த்தபோது நடை சார்த்தியிருப்பது தெரிந்தது. அனுமன் வால் போல் நீண்டிருந்த வரிசையில் நின்று கொண்டோம். பக்கத்திலுள்ள ஹாலில் நாட்டியம் அரங்கேறிக் கொண்டிருந்தது. வரிசை நகரவேயில்லை....நிமிடங்கள் கரைந்து மணி 1 கிவிட்டதில் கவலையாய்ப் போனது. தரிசனம் கிட்டுமோ?
சுற்றியிருந்தவர்கள் பொறுமை கலைய, நான் 'நீங்க கொடுத்து வெச்சிருக்கீங்க, நிச்சயம் கிடைக்கும்' என்று சொல்லிக்கொண்டேயிருந்தேன் (எனக்கும் சேர்த்து!). திடீரென வரிசை நகரத் துவங்க, எல்லோருக்கும் சந்தோஷம். 10 நிமிடங்களில் பிரகாரத்திற்கு வந்து விட்டோம். வெயில் ஏறி உடல் முழுவதும் வியர்வை ஊற்றெடுத்ததை பொருட்படுத்தாது ஜனக் கூட்டம் 'பால க்ருஷ்ணனை' காணக் காத்திருந்தது.
இதற்குள் 'மகளிர்'க்கான வரிசை அழைப்பு வர மாமியையும் விஷ்ணுவையும் அனுப்பி வைத்தேன். மிக விரைவாக மகளிர் வரிசை நகரத் துவங்கியது. மாமி என்னை விட கொடுத்து வைத்ததில் எனக்கு முன்னே தரிசனம் கிட்டி, வெளியேயும் வந்து விட்டாள்!
பத்து நிமிடங்களில் 'நடை'க்கு வந்து விட்டோம். வாசற்படியில் ஒற்றிக் கொண்டு உள்ளே நுழைந்தால்...கௌபீன க்ருஷ்ணன் சந்தனக் காப்பில் ஜ்வலித்தார். 2 அடி இருக்கும் மூர்த்தியின் கீர்த்திதான் என்னே? மின்சாரத்தின் துணையில்லாது எண்ணெய் விளக்கின் ஒளியில் நமக்காக நின்றிருக்கும் 'எண்டே குருவாயூரப்பா!' இதற்குள் மெலிதாகக் கைபிடித்து சிவாவுடன் வெளியேற்றப்பட்டோம்!
உள்ளே கணபதி சன்னிதியிலும் கூட்டம் அதிகமானதில், பார்க்கும் சையைக் கைவிட்டு, வெளியே வரலாம் என்றால் அதற்கும் காத்திருக்க வேண்டியிருந்தது! வெளியே அம்மனை தரிசித்து, பின் அய்யப்பனைக் கண்டு நடையில் சாஷ்டாங்கமாய் நமஸ்கரித்தபோது மனது நிறைந்துதான் போனது.
இவ்வளவு கூட்டமும் 25 நிமிடங்களில் பகவானை தரிசித்து, வெளியே வந்தபின் 'நடை' 1.30க்குச் சார்த்தப்பட்டது!
தரிசினத்திற்கு வேண்டி வரிசையில் நிற்க முடியாதவர்கள் / நேரம் இல்லாதவர்களுக்கு வேண்டி இதோ ஒரு 'செறிய' அறிவுரை
அதிகாலை 5.30 மணி சென்றால் காலை 6.30 மணிக்குள் தரிசனம்.
நண்பகல் 12.30 மணி சென்றால் நண்பகல் 1.30 மணிக்குள் தரிசனம்.
மாலை 5.30 மணி சென்றால் மாலை 6.30 மணிக்குள் தரிசனம்.
இரவு 8.15 மணி சென்றால் இரவு 9.00 மணிக்குள் தரிசனம். (சில தினங்களில் ஸ்ரீ வேலி என அழைக்கப்படும் வைபவமும் இதற்குப் பின் உண்டு!)
கவனிக்க வேண்டிய பின்குறிப்பு: ஜனக்கூட்டத்தைக் கண்டு மிரண்டு விடக் கூடாது.
ஆண்கள் சட்டையைக் கண்டிப்பாகக் கழற்ற வேண்டும்; வேட்டி மட்டுமே அணிய அனுமதி உண்டு. பெண்கள் புடவைதான் உடுத்த வேண்டும். வேறு டைகளுக்கு அனுமதி இல்லை. மொபைல் / கேமிரா அனுமதி இல்லை. எந்த bag-க்கும் அனுமதி இல்லை. தர்ம தரிசனம் மட்டும்தான் உண்டு. 'குறுக்கு' கட்டண தரிசனங்கள் கிடையாது; அதே போல், கோயில் ஊழியர்களைக் 'கண்டு' கொண்டு செல்வதெல்லாம் மூச்! இதனால் கோயில் சுத்தமாகவும், அனாவசிய சத்தங்கள் இல்லாமலும் சாந்நித்யம் நிறைந்திருக்கிறது.
குருவாயூரைத் தரிசிப்பவர்கள் ஒரு கிமீ தொலைவிலுள்ள மம்மியூர் சிவ பெருமானைத் தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். 10 ரூபாய் கொடுத்தால் ட்டோவில் சௌகரியமாய்க் கொண்டு விடுகிறார்கள்.
விடுதிக் கட்டணங்கள் 'கிழக்கு நடை', 'மேற்கு நடை' வீதிகளில் 70 ரூபாயிலிருந்து துவங்குகின்றன. அதிக பட்சம் ரூ 2000 வரை போகும் என நினைக்கிறேன்!
'கிழக்கு நடை' என அழைக்கப்படும் வீதியில் உணவகங்கள் நிறைந்திருக்கின்றன. 'சரவண பவன்', 'சுக் சாகர்', 'வுட்லேன்ஸ்' என்ற பெயரை நம்பி உள்ளே போனால் ஏமாற்றம் நிச்சயம்! னாலும், கொஞ்சம் தரமாய் இருக்கின்றன. கா•பியை விட தேநீர் தேவலை நீராய் இருக்கிறது.
'மேற்கு நடை'யில் அவ்வளவாக உணவகங்கள் இல்லை. அதனால் கிழக்கு நடையிலே விடுதி எடுப்பது கொஞ்சம் சௌகரியம்.
திருச்சூரில் தங்க முடியாமல் போனது கடவுள் அருள்தான் போலும். இல்லையா பின்னே? இரு தினங்களில் ஐந்து முறை குருவாயூர் அப்பனை தரிசித்திருக்க முடியுமா? அதுவும் நான்கு வருடங்களுக்குப் பின்!

No comments:
Post a Comment