Monday, October 23, 2006


எக்குத்தப்பான அப்பாவைச் சுற்றி இயங்கும் படம் இது. படத்தின் நாயகன் பரத், எம்டன் அப்பாவாய் நாசர் இருந்தாலும் படம் நெடுக வந்து நம்மைப் பிரமிக்க வைப்பது வைகைப் புயல்தான். எம்டனை எகிறும்போது, செத்துப்போன அப்பாவைப் பார்க்க முடியாமல் சீறும்போது, இறுதியில் 'நச்'சாய் நாசரை வார்த்தைகளால் புரட்டும்போது வடிவேலு நடிப்பில் காமெடியைத் தாண்டிய முதிர்ச்சி தெரிகிறது. கஜாலா, கோபிகா என ஹோமிலியான இளம்பெண்கள்(ஹி..ஹி..) வலம் வந்தாலும், தாயார் பாத்திரத்தில் நடித்த சரண்யா கைதட்டல்களை அள்ளிக் கொண்டு போகிறார். இடைவேளையில் கதாநாயகி(கோபிகா)யை அறிமுகம் செய்யும்போது இயக்குநரின் 'தில்' தெரிகிறது; ஒரே பாடலில் கதாநாயகன் 'வீடு கட்டி, கார் வாங்கி' பெரிய மனிதன் ஆகும்போது இயக்குநரின் ஐடியா 'பஞ்சம்' தெரிகிறது. சீரியல் இயக்குநர் திருமுருகன் சீரியஸ் படமொன்றைத் தந்திருக்கிறார்



ஜெயம் ரவி, ராஜா, எடிட்டர் மோகன் காம்பினேஷனில் வெளிவரும் மூன்றாவது படம். வெள்ளி விழா தெலுகு படத்தை உல்டாவாக்கி உலாவ விட்டிருக்கிறார்கள். முதல் பாதி ஸீன்களில் 'ஹம் ஆப்கே ஹை(ன்) கௌன்' சாயல் தெரிகிறது. இதனாலேயே லாஜிக் இல்லாத இரண்டாம் பாதியில் படம் 'தொபுகடீர்'. ஜெயம் ரவி கலக்கல்; த்ரிஷா சூப்பர் (ஹி..ஹி!); பிரபு அப்படியே சிவாஜியைக் காப்பி அடித்திருக்கிறார். பாக்யராஜின் டச் அவ்வப்போது தெரிந்தாலும், 'சந்தோஓஓஓஓஓஷ்' என அன்பாய் அழைக்கும் தேஜாஸ்ரீ சிரிக்க வைக்கிறார். மூன்று பாடல்கள் அருமை. ரொம்பவும் மெனக்கிடாமல் பொழுதுபோக்கைக் குறியாய் வைத்து எடுத்த இயக்குநருக்கு 'ஸார்! பரவாயில்லை!'



முதல் பாதியில் சுவாரஸ்யத்தைத் தக்க வைத்துக் கொள்ள ப்ரயத்தனப்பட்டு ஜயித்திருக்கிறார்கள். தாதா பாத்திரத்தை ஒரு பெண் செய்யும் போது ரிஸ்க் அதிகம்; இதனாலேயே ஷ்ரேயா ரெட்டியை நமக்குப் பிடித்து போகிறது. வழக்கம் போல விஷால், வழக்கம் போல ரீமா ஸென், வழக்கம்போல் அவ்வப்போது எட்டி பார்க்கும் 'டபுள் மீனிங்' வடிவேலு...போங்கப்பா! பின்பாதியில் படம் முழுதும் வரும் வன்முறை...ஸாரி டைரக்டர் ஸார்! கொஞ்சம் பார்த்து பண்ணியிருக்கலாம்ல! அங்கீகரிக்கப்படாத சிடியில் காட்சிகள் வெட்டப்பட்டதில் படம் ஒன்றரை மணி நேரத்தில் முடிந்து விட்டது.

1 comment:

Queen said...

Out of these, i saw Sth sth unakkum ennakum....was a thourough entertainer if you dont dig into the logic etc.....