Saturday, October 03, 2009

பாபா பற்றி எழுதியது (ஆகஸ்ட் ௨00௨)


- "அம்மா" ஆட்சியில் பாபா ரிலீஸ்
- பாடல் வரிகளில் "பெரியார்/ராஜாஜி" வந்ததை ஒட்டி தி.க. கோர்ட்டில் மனு தாக்கல். ரஜினி சரண்டர். பாடல் வரிகள் "கட்"!
- பாமக தலைவர் ராமதாஸ் பூம்புகார் மாநாட்டில் ரஜினியை எதிர்த்து பேச்சு. பாபா எங்கு திரையிட்டாலும் பாமக அதை எதிர்க்கும்!
- ஆகஸ்ட் இரண்டாம் வாரம் வரும் அனைத்துப் பத்திரிகை அட்டைகளிலும் "பாபா" அலங்கரிப்பு.
- ஆகஸ்ட் 15 அன்று அஷ்டமி என்பதால், 14 அன்று இரவே அனைத்து தியேட்டர்களிலும் சிறப்புக் காட்சிகள்.
- சத்யம் தியேட்டரில் ரஜினியின் ஆன்மிக குரு சச்சிதானந்த சுவாமிகள் பாபா படத்தைத் துவக்கி வைத்தார். கமல்/விஜயகாந்த் ஆப்செண்ட்! ரஜினி அப்செட்!
- ஆல்பட் தியேட்டர் வாசலில் "காளிகாம்பாள்" முழு உருவ கட் அவுட்.
- திருட்டு விசிடியை அழிக்க அங்கங்கே உள்ள லோக்கல் தியேட்டர்களில் பாபா ரிலீஸ்! உ-ம் வில்லிவாக்கம் ராயல், கொளத்தூர் குமரன், அம்பத்தூர் ராக்கி, கோயம்பேடு ரோகிணி!
- முதல் நாள் உதயம் தியேட்டரில் தொடர்ச்சியாக எட்டுக் காட்சிகள்!- "2000 ரூபாய் வரை கறுப்பில் முதல் நாள் டிக்கெட் போயிற்று!" காதில் விழுந்த செய்தி.
- ஜெயங்கொண்டான் தியேட்டரில் பாபா படச்சுருள் கொள்ளை. தியேட்டர் திரை கிழிப்பு. பாமக வெறிச்செயல்!
-விழுப்புரம், திருவள்ளூர் நகரங்களில் பாபா பார்க்க பாமக முட்டுக்கட்டை!
-ரஜினி ரசிகர் பாபா ரிலீஸ’ன் போது தனது மகளை ஆஸ்பத்திரியில் ரிலீஸ் செய்தார்!மருத்துவரை வற்புறுத்தி ஒரு மாதத்திற்கு முன்பாக குழந்தை ரிலீஸ்!
-ரயிலில் பிரசவ வலி எடுத்து ஆகஸ்ட் 15 அன்று பிறந்த குழந்தைக்கு "பாபா" என்று பெயர் சூட்டப்பட்டது!
-பெங்களூர் ஊர்வசி தியேட்டரில் முண்டியடித்து "பாபா" பார்க்க முயன்ற ரசிகர் ஒருவர் கூட்ட நெரிசலில் பரிதாபமாக உயிரிழப்பு!
-சேலத்தில் லிட்டர் லிட்டராக பாபா கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம்
- "டாக்டர் அய்யாவை சட்டபூர்வமாக சந்திப்பேன். மக்கள் கவலையின்றி திரையரங்குக்குச் சென்று போலீஸ் பாதுகாப்புடன் பார்க்கலாம்" ரஜினி கடிதம்.
-பாமக ராமதாஸ் திடீர் பல்டி "நோ மோர் வயலன்ஸ். பாபா படம் அனைவரும் பார்க்கலாம்!"
-ரஜினி குரு சச்சிதானந்த சுவாமிகள் திடீர் மரணம்.
-பாபா பக்கம், பாபா போட்டோஸ் என ஜால்ரா அடித்து வந்த ஆனந்த விகடன் பாபாவுக்கு அளித்த மதிப்பெண்கள் 39!

படத்தில் தேடினாலும் கிடைக்காத சுவாரஸ்யம் வெளியில் கொட்டிக் கிடக்கிறது! நீங்கள் மேலே படித்தது அதில் ஒரு சிறு துளி !

கமல் பேசிப்பேசியே "ஆளவந்தான்" அழிந்தது! ரஜினி பேசாமலேயே "பாபா" அழிந்தது!

இரு மெகா நாயகர்களையும் "சோதா" நாயகர்களாக ஆக்கிய பெருமை இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணாவையே சேரும்!

மொத்ததில்
பாபா தியேட்டரில் "போர்"பா! வெளியிலோ போர்ப்பா!

1 comment:

Life Lessons from a Late Bloomer said...

Hmm, interesting ! I am not too much into movies, or rather am only into Rajini's movies. anything about rajinikanth is interesting. sad Baba was a flop. yeah, Vikatan always does that. It makes money out of Rajini, and then back stab him, grrrr!