Sunday, November 29, 2009

தமிழ்!

"தமிழ் படிக்கிறதுல என்னம்மா தப்பு?"

"அப்பா, கனவை வேடிக்கை பார்க்கலாம். ஆனா அதிலேயே வாழ்க்கை நடத்த முடியுமா?"

"கனவா?"

"வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோள்கள் எங்கள் வெற்றித் தோள்கள்னு படிப்பீங்க. வேலை இல்லாக் கொடுமையைக் கூடத் தாங்க முடியாமல் துவண்டு விழுவீங்க. தமிழ் எங்கள் உயிருக்கு நேர். சரி, ஆனா வயிற்றுக்கு என்ன வழி? படிப்புங்கறது வேலைக்குத்தானே? ஞானம் பெறுவதற்காகவா?"

"இப்படி தடாலடியாவே பேசினா எப்படிம்மா?"

"அப்பா, மல்லிகைப்பூ அழகானதுதான். வாசனையானதுதான். மனசுக்குப் பிடிச்சா அதைக் கோத்துத் தலையில வைச்சுக்கலாம். ஆனா சமையல் பண்ண முடியுமா?"

"அப்போ ஒரு விஷயத்துக்கு யுடிலிடி இருந்தாத்தான் மதிப்பா?"

"ஒரு கமர்ஷியலான சமூகத்தில அப்படித்தான்."

"வியாபார உலகத்தில தமிழுக்கு இடமே இல்லையா? தமிழ்ப் பத்திரிகை, சினிமா, ஏன் அரசாங்கம் இங்கெல்லாம் தமிழைப் பயன்படுத்தாமலா இருக்காங்க?"

"ஆனா அங்கெல்லாம் தமிழ் படிச்சவங்க மட்டும்தான் வேணும்னு கேட்கலையே?"

......

"முடிஞ்சா உன் தமிழை ·பங்ஷனலா, நடைமுறைக்கு உகந்ததாப் பண்ணு. இல்லைன்னா கம்முனு இரு."

- இதெல்லாம் யாருடைய தப்பு?, மாலன் சிறுகதைகள், கிழக்குப் பதிப்பகம்

4 comments:

அன்புடன் நான் said...

தமிழே வேண்டாம் என்பதில் எனக்கு முற்றிலும் உட்ன்பாடு இல்லை. மற்ற மொழி வேண்டாம் என்பதிலும் உடன்பாடு இல்லை.

புலவன் புலிகேசி said...

மகளை வளர்த்த தந்தையின் தப்புதான்..பின்ன என்னங்க வேலைக்கும் வாழ்க்கைக்கும் மற்ற மொழிகள் முக்கியம் தான். அதுக்காக தமிழ் வேணாம்னு நெனைக்கிற அளவுக்கா வளக்குறது.

பெற்றெடுத்து வளர்க்கும் வரை தாய் தேவை. வளர்ந்த பின் அவளை வேண்டாம் என தூக்கி எறிஞ்சிடுவீங்களா???

(Mis)Chief Editor said...

@கருணாகரசு அவர்களே!

வருகைக்கு நன்றி!

-பருப்பு ஆசிரியர்

(Mis)Chief Editor said...

@புலவர் புலிகேசி அவர்களே!

மாலன் சிறுகதையான 'இதெல்லாம் யாருடைய தப்பு?'-ல் தென்பட்ட வரிகள்தான் இவை.

முழுவதும் படித்துப்பாருங்கள். வலி நெஞ்சில் மட்டுமல்ல, உடல் முழுதும் பரவும்!

-பருப்பு ஆசிரியர்