Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Sunday, November 29, 2009

தமிழ்!

"தமிழ் படிக்கிறதுல என்னம்மா தப்பு?"

"அப்பா, கனவை வேடிக்கை பார்க்கலாம். ஆனா அதிலேயே வாழ்க்கை நடத்த முடியுமா?"

"கனவா?"

"வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோள்கள் எங்கள் வெற்றித் தோள்கள்னு படிப்பீங்க. வேலை இல்லாக் கொடுமையைக் கூடத் தாங்க முடியாமல் துவண்டு விழுவீங்க. தமிழ் எங்கள் உயிருக்கு நேர். சரி, ஆனா வயிற்றுக்கு என்ன வழி? படிப்புங்கறது வேலைக்குத்தானே? ஞானம் பெறுவதற்காகவா?"

"இப்படி தடாலடியாவே பேசினா எப்படிம்மா?"

"அப்பா, மல்லிகைப்பூ அழகானதுதான். வாசனையானதுதான். மனசுக்குப் பிடிச்சா அதைக் கோத்துத் தலையில வைச்சுக்கலாம். ஆனா சமையல் பண்ண முடியுமா?"

"அப்போ ஒரு விஷயத்துக்கு யுடிலிடி இருந்தாத்தான் மதிப்பா?"

"ஒரு கமர்ஷியலான சமூகத்தில அப்படித்தான்."

"வியாபார உலகத்தில தமிழுக்கு இடமே இல்லையா? தமிழ்ப் பத்திரிகை, சினிமா, ஏன் அரசாங்கம் இங்கெல்லாம் தமிழைப் பயன்படுத்தாமலா இருக்காங்க?"

"ஆனா அங்கெல்லாம் தமிழ் படிச்சவங்க மட்டும்தான் வேணும்னு கேட்கலையே?"

......

"முடிஞ்சா உன் தமிழை ·பங்ஷனலா, நடைமுறைக்கு உகந்ததாப் பண்ணு. இல்லைன்னா கம்முனு இரு."

- இதெல்லாம் யாருடைய தப்பு?, மாலன் சிறுகதைகள், கிழக்குப் பதிப்பகம்