Sunday, February 28, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா?!

கௌதம் மேனன் படங்களின் பக்கபலம் 'அனாவசிய நகைச்சுவை'-களைச் சாராமல் இருப்பதும், பலவீனம் 'நெடும்படம்' எடுப்பதும்தான். விண்ணைத்தாண்டி வருவாயா-விலும் இது தொடர்கிறது.
படத்தில் ஒளிப்பதிவு/இசை உயர்தரத்தோடு பாராட்டப் படவேண்டியவை இதோ.
1. கிராமம், காதல், வன்முறை, அனாவசிய ஹீரோயிஸம், ஸ்பூ·ப் எனத் தத்தளித்துக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவுக்கு ஆக்ஸிஜன்.
2. சிலம்பரசன் - ஆச்சரியம். பாத்திரத்தோடு கச்சிதமாய்ப் பொருந்தும் உண்மை.
3. த்ரிஷா - தழையத் தழைய புடவையில் வளைய வளைய வருவது பாங்கு/அழகு.
4. கிருஷ்ணன் - சிலம்பரசனுக்குப் பக்கபலமாய் வரும் மனிதர் அடிக்கும் லூட்டிகள் ரசிக்கும்படியாயிருக்கின்றன.
5. நளினி ஸ்ரீராம் - உடைகளைத் தேர்ந்தெடுத்த விதம்!
6. இறுதிக் காட்சி - தமிழ் சினிமாவுக்கே உரித்தான முடிவிலிருந்து சற்றே விலகி, வித்தியாசமாய்க் கொடுக்கும்போது இயக்குநர் தெரிகிறார்.

சொட்டச் சொட்ட, திகட்டாத, காதல் கதையை இரண்டு மணி நேரத்தில் 'சிக்' என்று எடுத்திருக்க வேண்டாமோ? இழு-இழுவென்று இழுத்ததில், பின் பாதி வறண்டு போய்விட்டது.

இருந்தாலும், நம் உலகில் நமக்குத் 'தெரிந்து, தெரியாமல்' / 'சொல்லப்பட்ட, சொல்லப்படாமல்' இயங்கிக் கொண்டிருக்கும் காதல்களை நிச்சயமாக 'விண்ணைத் தாண்டி வருவாயா?'வில் பார்க்க முடியும்.

2 comments:

Priyamvada_K said...

நான் மிகவும் ரசித்து பார்த்த படம். இதை பார்த்த என் அம்மா, "நல்ல காலம் நான் யாரையும் காதலிக்கவில்லை - திருமணத்துக்கு பின் அறிந்துகொண்ட என் கணவரைமட்டும் தான் விரும்பினேன்!" என்றாரே பார்க்கலாம்!

இன்றைய கவிதை said...

மஹீம் ... வெளிநாட்டில் இருக்கும் எனக்கு இது ஒரு பெரிய கஷ்டம் , என்னால் உங்களை போல் எல்லா படங்களையும் பார்க்க முடியவில்லை , அதைவிட நேரத்தில் பார்க்க முடியாதது சோகம்...

சீக்கிரம் தீரும் என அசைப்படுகிறேன்..கெளதம் மேனனுக்கு கேபி எழுதிய கடிதத்தில் அடுத்த மணிரத்னம் இவர்தான் என குறிப்பிட்டிருந்தது அருமை படம் பார்த்து மிச்சம் எழுதுகிறேன்..
நன்றி ஜேகே