Tuesday, August 17, 2010

ஓணம் வெர்சஸ் சுதந்திர தினம்

அலுவலகம் மற்றுமொரு ஓணம் பண்டிகைக் கொண்டாட்டத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

வீட்டிற்குள் கொண்டாடப்பட வேண்டியவைகளை வெளியில் கொண்டாடுவது எனக்கு (மட்டுமே) ஏற்கப்படாத ஒன்று. அது ஓணமாயிருந்தாலும், விநாயக சதுர்த்தியாயிருந்தாலும் ஒன்றுதான். பலவித சர்ச்சைகளுக்கு வித்திடும் இத்தகைய கொண்டாட்டங்கள் நிச்சயம் அலுவலகங்களுக்குத் தேவையில்லாத ஒன்று.

இதே போல வெளியில் கொண்டாடப்படுவதை மனதில் கொண்டாடுவதும் தவறுதான். நாட்டிற்குக் கிடைத்த சுதந்திரத்தை நாம் நாடறிய கொண்டாடுவதில்லை, வீடறியவும் விடுவதில்லை, மனதோடு நிறுத்திக் கொண்டு 'ஒரு நாள் லீவு போச்சே!' புலம்பலோடு சரி.

ஓணம் போன்ற கொண்டாட்டங்களுக்கு வரிந்து கட்டும் கூட்டம், கூடும் கூட்டம், சற்றே சிந்தித்துப் பார்த்தால் உண்மை புரியும். 'ஏன் நம்மால் இத்துணை ஈர்ப்போடு சுதந்திர தினத்தை அலுவலகத்தில் கொண்டாட முடியவில்லை?' என்கிற கேள்வியும் கேட்டுக்கொண்டால் உண்மை சுடும்!

அலுவலகத்தில் உள்ள அனைவரையும் ஒன்று சேர்க்கும் நிகழ்வுகளை அலுவலகத்தில் கொண்டாடுவதுதான் சரி; அதுதான் முறையும் கூட. இது போன்றவைகள் ஒரு சிலரது 'பொழுதைப் போக்குவதற்கும், தங்களைப் பதிப்பித்துக் கொள்வதற்கும்' மட்டுமே கொண்டாடப்படுவதாக என்னுடைய தாழ்மையான கருத்து.

'கேரளத்தையும், தமிழ்நாட்டையும், மும்பையையும், கொல்கத்தாவையும், கர்நாடகத்தில் விதைப்பது ஏற்புடையதன்று; நாம் போகுமிடமெல்லாம் இந்தியாவை விதைக்க வேண்டும். அதுவும் அனைவரும் இயங்கும் அலுவலகங்களில் நிச்சயம் இது ஏற்கப்பட வேண்டும். இதுவே ஒன்றுபட்ட இந்தியாவிற்கு வழி வகுக்கும்!'

உணர்ச்சிவசப்படாது கொஞ்சம் நிதானமாய் யோசித்துப் பார்த்தால் கொண்டாடும் நண்பர்களுக்கும், ஒட்டாமல் வேடிக்கை பார்க்கும் அன்பர்களுக்கும் தெளிவாகப் புரியும்.

2 comments:

Sridhar said...

Good one bro.

Sridhar said...

Good one bro.